இக்கரைப் பச்சை / ஞானக்கூத்தன் கவிதைகள்

பொக்கைவாய் அய்யர்ப் பெரிய கண்ணாலத்தில் வக்குமாப் பிள்ளைக்கு மட்டுமோ? நிற்கின்ற வாழைக்கும் தோரணத்துக்கும் சூழ்மனிதருக்கும் சேர்த்து அயலூரே!

நாயகம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மனிதர் போற்றும் சாமிகளில் ஒற்றைக் கொம்பு கணபதியை எனக்கு பிடிக்கும். ஏனெனில் வே றெந்த தெய்வம் வணங்கியபின் ஒப்புக் கொள்ளும் நாம் உடைக்க?

பரிசில் வாழ்க்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்

வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம் வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு காரத்தில் பேசத்துப் பாக்கிச் சூடு கல் பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை நேரத்தில் களிப்பூட்ட அகநானூறு நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப் பார்த்த தீரத்தில் தெரிந்தெடுத்த நகைத்துணுக்கு தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும் புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும் பேச்சாளர் மனதில் கையொலிகள் கேட்கும் பேச்சாளர் வாய் திறக்க வாய் திறந்து பழங்குடிகள் கேட்டார் தம் எளிய மூக்கின் மூச்சுக்கு வயதுமூவா யிரமாம் என்று முதல்… Continue reading பரிசில் வாழ்க்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்

யோசனை / ஞானக்கூத்தன் கவிதைகள்

உனக்கென்ன தோன்றுது கருத்துக்கு மாறாகப் போலீஸார்கள் கட்டிவைத்துக் கையெழுத்து வாங்கலாமா எனக்கென்ன தோன்றுது வருத்தத்துக் காளானான் புலவன் என்றால் யாப்பிலொரு கவிபாடச் சொன்னால் போச்சு

பிரம்மம் ஏகம் / ஆவுடை அக்காள் கவிதைகள்

மூக்கைப் பிடித்து முழுமோசம் போனதும் போரும்போரும் நமக்குள் ஈசன் நடுவாயிருப்பதைப் பாரும்பாரும் உன்தெய்வம் என்தெய்வம் என்றுழன்றதும் போரும்போரும் தன்னுள் தெய்வம் தானாயிருப்பதை எண்ணிப் பாரும்பாரும்”

ஏலேலோ / ஆவுடை அக்காள் கவிதைகள்

ஆசை என்னும் ஏலேலோ – அரும்புவிட்டு அயிலேலோ கோசம் என்னும் ஏலேலோ – கொழுந்துவிட்டு அயிலேலோ மோட்சம் என்னும் ஏலோலோ – மொட்டுகட்டி அயிலேலோ போதம் என்னும் ஏலோலோ – பூப்பூத்து அயிலேலோ புத்தி என்னும் ஏலேலோ – பிஞ்சுவிட்டு அயிலேலோ காமம் என்னும் ஏலேலோ – காய்காத்து அயிலேலோ கருணை என்னும் ஏலேலோ – காவலிட்டு அயிலேலோ பக்தி என்னும் ஏலேலோ – பழம்பழுத்து அயிலேலோ”

வேதாந்த நொண்டிச் சிந்து / ஆவுடை அக்காள் கவிதைகள்

சுவர்க்க நரகமென்னும் அல்ப பிசாசு வந்து அச்சுறுத்துகிறதே’ ‘வனத்தில் துர்க்கந்தம் கடந்து வரவே வந்தாளே மதவாதியர்கள் ‘ஜாதி வர்ணங்களும் ஆசிரம தர்மமும் சாஸ்திர கோத்திர சூத்ராதிகளும் க்ஷணிகத்தில் தகனமாய்ப் போச்சுதய்யா’ ‘அனிருத்த மால’யில் அக்காளின் தத்துவ வீச்சு அபாரமாய் இருக்கிறது. ‘அம்புலியில் தெய்வமென்று சாதிப்பார் சீமையிலே தாருவிலே தெய்வமென்று சாதிப்பார் வையகத்தே தாமிரத்தை தெய்வமென்று சாதிப்பார் தரணியிலே மிருத்யுவே தெய்வமென்று விடுவார் உலகினிலே அப்புவே தெய்வமென்று ஆடுவார் தீர்த்தாதி அக்கினியே தெய்வமென்று ஆகுதிகள் பண்ணிடுவார்’ என்று மொழியும்… Continue reading வேதாந்த நொண்டிச் சிந்து / ஆவுடை அக்காள் கவிதைகள்

பராபரக் கண்ணி / ஆவுடை அக்காள் கவிதைகள்

‘எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள் எச்சில் இல்லாத இடமில்லை- பராபரமே சில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச்சில் தேனல்லவோ என்றைக்கும் உண்ணும் தாய் முலை எச்சிலன்றோ- பராபரமே மச்சமெச்சில் நீரில் வந்து மூழ்கும் மறையோர்கள் எச்சில் பச்சைக் கிளி கோதும் பழம் எச்சில் அன்றோ- பராபரமே தேரை எச்சில் தேங்காய் சிறு பூனை எச்சில் தேசமெல்லாமே எச்சிலென்றறிவேன் – பராபரமே நாதமெச்சில் பிந்து எச்சில் நால்மறையோர் வேதம் எச்சில் மந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ- பராபரமே அண்ட… Continue reading பராபரக் கண்ணி / ஆவுடை அக்காள் கவிதைகள்

வேதாந்த அம்மானை / ஆவுடை அக்காள் கவிதைகள்

‘அக்கினியை தூமம் மறைத்தாப்போல அம்மானை அதிஸ்டானம் தன்னை மறைத்தாய் அம்மானை பானுவை மேகம் மறைக்கும் அதுபோல பரமார்த்தம் தன்னை மறைத்தாயே அம்மானை’