பிரம்மம் ஏகம் / ஆவுடை அக்காள் கவிதைகள்

மூக்கைப் பிடித்து முழுமோசம் போனதும் போரும்போரும் நமக்குள் ஈசன் நடுவாயிருப்பதைப் பாரும்பாரும் உன்தெய்வம் என்தெய்வம் என்றுழன்றதும் போரும்போரும் தன்னுள் தெய்வம் தானாயிருப்பதை எண்ணிப் பாரும்பாரும்”

ஏலேலோ / ஆவுடை அக்காள் கவிதைகள்

ஆசை என்னும் ஏலேலோ – அரும்புவிட்டு அயிலேலோ கோசம் என்னும் ஏலேலோ – கொழுந்துவிட்டு அயிலேலோ மோட்சம் என்னும் ஏலோலோ – மொட்டுகட்டி அயிலேலோ போதம் என்னும் ஏலோலோ – பூப்பூத்து அயிலேலோ புத்தி என்னும் ஏலேலோ – பிஞ்சுவிட்டு அயிலேலோ காமம் என்னும் ஏலேலோ – காய்காத்து அயிலேலோ கருணை என்னும் ஏலேலோ – காவலிட்டு அயிலேலோ பக்தி என்னும் ஏலேலோ – பழம்பழுத்து அயிலேலோ”

வேதாந்த நொண்டிச் சிந்து / ஆவுடை அக்காள் கவிதைகள்

சுவர்க்க நரகமென்னும் அல்ப பிசாசு வந்து அச்சுறுத்துகிறதே’ ‘வனத்தில் துர்க்கந்தம் கடந்து வரவே வந்தாளே மதவாதியர்கள் ‘ஜாதி வர்ணங்களும் ஆசிரம தர்மமும் சாஸ்திர கோத்திர சூத்ராதிகளும் க்ஷணிகத்தில் தகனமாய்ப் போச்சுதய்யா’ ‘அனிருத்த மால’யில் அக்காளின் தத்துவ வீச்சு அபாரமாய் இருக்கிறது. ‘அம்புலியில் தெய்வமென்று சாதிப்பார் சீமையிலே தாருவிலே தெய்வமென்று சாதிப்பார் வையகத்தே தாமிரத்தை தெய்வமென்று சாதிப்பார் தரணியிலே மிருத்யுவே தெய்வமென்று விடுவார் உலகினிலே அப்புவே தெய்வமென்று ஆடுவார் தீர்த்தாதி அக்கினியே தெய்வமென்று ஆகுதிகள் பண்ணிடுவார்’ என்று மொழியும்… Continue reading வேதாந்த நொண்டிச் சிந்து / ஆவுடை அக்காள் கவிதைகள்

பராபரக் கண்ணி / ஆவுடை அக்காள் கவிதைகள்

‘எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள் எச்சில் இல்லாத இடமில்லை- பராபரமே சில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச்சில் தேனல்லவோ என்றைக்கும் உண்ணும் தாய் முலை எச்சிலன்றோ- பராபரமே மச்சமெச்சில் நீரில் வந்து மூழ்கும் மறையோர்கள் எச்சில் பச்சைக் கிளி கோதும் பழம் எச்சில் அன்றோ- பராபரமே தேரை எச்சில் தேங்காய் சிறு பூனை எச்சில் தேசமெல்லாமே எச்சிலென்றறிவேன் – பராபரமே நாதமெச்சில் பிந்து எச்சில் நால்மறையோர் வேதம் எச்சில் மந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ- பராபரமே அண்ட… Continue reading பராபரக் கண்ணி / ஆவுடை அக்காள் கவிதைகள்

வேதாந்த அம்மானை / ஆவுடை அக்காள் கவிதைகள்

‘அக்கினியை தூமம் மறைத்தாப்போல அம்மானை அதிஸ்டானம் தன்னை மறைத்தாய் அம்மானை பானுவை மேகம் மறைக்கும் அதுபோல பரமார்த்தம் தன்னை மறைத்தாயே அம்மானை’

வேதாந்தக் கும்மி / ஆவுடை அக்காள் கவிதைகள்

‘கும்மியடி பெண்கள் கும்மியடி அகோர சம்சார சாகரத்தில் ஜென்மக் கடலைக் கடத்தினவர் பாதம் சிந்தித்துக் கும்மியடியுங்கடி- தினம் வந்தித்துக் கும்மியடியுங்கடி’

வேதாந்த ஆச்சே போச்சே / ஆவுடை அக்காள் கவிதைகள்

‘சப்த கோடி மந்திரம் சாஸ்திரங்கள் உள்ளதும் போச்சே சத்துமயமான சாட்சியே நானென்ப தாச்சே’ ‘ஜாதி வர்ணாசிரமம் போச்சே வேத சாஸ்திரம் வெறும் பேச்சே’ ‘காம குரோதமும் போச்சே மோக இருளும் போச்சே’

அத்வைத மெய்ஞ்ஞான ஆண்டி / ஆவுடை அக்காள் கவிதைகள்

’கடத்தை இடித்தால் தாண்டி கடம் ஆகாசம் ஆகும் என்றாண்டி புரத்தை இடித்தால் தாண்டி பரிபூரணம் ஆகும் என்றாண்டி’ ’நந்தவனத்திலோர் ஆண்டி- அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’

ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்டு / ஆவுடை அக்காள் கவிதைகள்

“எங்கிருந்தெங்கே வந்தாண்டி அவன் எங்கும் நிறைந்தவன்தாண்டி மாயையினால் மறைந்தாண்டி இவன் மனதுக்குள்ளே இருந்தாண்டி!” சாதிபேதமற்ற நிலை “கோத்திரங்கள் கல்பிதகுணங்கள் குடிகளும் போச்சே! குணாதீதமான பரபிரம்மம் நானென்பதாச்சே!” “மோகத்தைக் கொன்றுவிடு!” என்ற பாரதிக்கு மூலம் “மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதேயென்று” பயனென்ன? “காசிராமேசுவரம் சென்றாய் காகம்போல் மூழ்கிநின்றாய் உன்னாசை போச்சோ மூடா..” வேதாந்தக் கப்பல்/கப்பல் பாட்டு “தள்ளப்பா தள்ளு ஷண்மதவாதிகளைத் தள்ளு தொடுத்து அடித்து முடுக்கித் தள்ளு சோகமென்னும் சாகரத்தை அப்புறத்தில் தள்ளு ஏலேலோ ஏகாந்த ரஸம்! ஏலேலோ… Continue reading ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்டு / ஆவுடை அக்காள் கவிதைகள்