Gnanakoothan Archive

நம்மை அது தப்பாதோ? / ஞானக்கூத்தன் கவிதைகள்

1. ஓர் ஏழையின் சிரிப்பில் அவனது அப்பாவைப் பார்த்தேன் அவரும் ஓர் ஏழைதான் அவரது சிரிப்பில் அவரது மனைவியைப் பார்த்தேன் அவளும் ஓர் ஏழைதான். அம்மா அப்பா பிள்ளை மூன்று பேரும் தனித்தனி யாக நாடு நாடாகப் பாசி மணிகளும் கருமணிகளும் ஊசிகளும் விற்றார்கள். மான் கொம்பும் புலிப் பல்லும் விற்றார்கள் எருமைக் கொம்பில் செய்த …

சொன்னதைக் கேட்ட ஜன்னல் கதவு / ஞானக்கூத்தன் கவிதைகள்

மருத்துவ மனையில் படுத்திருந்தான் தலையில் கட்டுடன். நர்ஸ் வந்தாள்; ஊசி போட்டாள். நான்கைந்து மாத்திரைகள் தந்தாள். போனாள் வழக்கம் போல அன்றும் அந்தக் கதவை அவன் பார்த்தான். அடுத்த நிமிஷம் அந்தக் கதவு விழுந்தே விட்டது அவன் மேல். அந்தத் தெருவில் அவ்வீட்டைக் கடந்து சென்ற ஒவ்வொரு நாளும் அவன் அதைப் பார்த்தான். மேலே இரண்டு …

உயர் மாகடல் உற்றொரு / ஞானக்கூத்தன் கவிதைகள்

சென்னை நகரத்தைச் சுற்றிப் பார்க்க வந்தவன் போலிருந்தான் கட்டியிருந்த வேட்டியை முழங்கால் வரைக்கும் உயர்த்தியிருந்தான் சாதாரணமான ஒரு சட்டை ஒரு விலங்கின் வயிற்றை நினைவூட்டி அவன் தோளில் தொங்கியது ஒரு பை கடலைப் பார்த்ததும் ஒரு சந்தோஷம் எதிரில் வந்தாரை எல்லாம் வழிகேட்டு கடல் வந்தடைந்த சந்தோஷம் கடலை நோக்கி அவன் பாடினான் ஒரு ஊரின் …

திருப்தி / ஞானக்கூத்தன் கவிதைகள்

சஞ்சிகையைப் பிரித்தான். அங்கே முப்பதாம் பக்கத்தைப் பார்த்தான். இரண்டு வரிகளில் ஒருகவிதை. அதற்குக் கீழே இருந்த பெயரைப் படித்ததும் அவனுக்கு ரத்தம் கொதித்தது. கவிதை எல்லோரும் நல்லவரே அவரவர் நாட்டில் அவரவர் வாழ்ந்திருந்தால் இரண்டு வார்த்தை ஆசிரியர்க்கு எழுதிப் போடணும் ஆனால் ஒன்றைப் பற்றி மட்டும் எழுதினால் நன்றாய் இருக்காது. தெரிந்து விடும் எனவே எழுதினான். …

நிர்மலம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

வருகிறான் அவன் யார்? சவரத் தகடா? புதிய பல்பொடியா? இன்னதென்று நினைவில் இல்லை. என்னிடம் விற்க முயன்று, வாங்கப் படாமல் திரும்பிப் போகிறான் அவன் யார்? போகும் திசையில் நிற்கறான் நடக்கிறான் தயங்கிப் போகிறான் கண்ணுக்குக்கீழ் தலைப்பில் குத்திய ஐம்பது காசுப் பேருந்துச் சீட்டுப் போல என்னவோ சுருக்கம் பார்வையைக் கவரும். இடது கையில் ஏதோ …

ஐந்து கவிதைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

1. என் வீட்டுச் சுவரில் எவரோ எழுதிய இரட்டை இலைமேல் கம்பளி பூச்சி 2. அரசியல் வாதிதான் பாரத ரத்னம் மற்றவரெல்லாம் டீக்கடை ரத்னம் 3. நிறைய பலாப்பழம் போகிற தென்றான் சிறுவன் ஒருவன். திரும்பிப் பார்த்தேன் போய்க் கொண்டிருந்தது கூச்சலிடாத மோடா வியாபரி 4. தட்டான் பூச்சிகள் தோட்டத்தில் சுற்றக் கண்டு கிட்டாத இன்பம் …

தண்ணீர்த் தொட்டி மீன்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

இந்தக் கடலின் எந்தக் குபேர மூலையிலும் கிடைக்காத புழுக்கள் வேளை தவறாமல் தானாய் வருகிறது. தெய்வக் கிருபையால் புயல்களும் இல்லை. திமிங்கிலங்களை அவதாரக் கடவுள் காணாமல் செய்துவிட்டார். ஆனால் இன்னும் ஒன்று மட்டும் புரியாத புதிராய் இருக்கிறது. உலகத்தை உதடு குவியப் புணர்கையில் அஃதென்ன இடையில்? அப்புறம் ஒன்று எங்கே எங்கள் முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் …

லாறி / ஞானக்கூத்தன் கவிதைகள்

எங்களூர்ப் புழுதித் தெருமேல் அடிக்கடி ஓடும் லாறிக்கு நைனாச்சாரியார் என்று பெயர் வைத்தார்கள் – இரண்டிடத்திலும் புட்டம் அகலமாய்த் தெரிந்ததால் – புறம்போக்கு மண்ணில் புகைந்த சூளையின் செங்கல்லை வாரித் தொலைவில் விற்று விற்றுக் குதிரை வண்டி குப்பு முதலியைக் குபேரனாக்கிய பெருமை அதற்குண்டு கல்வி கேள்விப் புலமையில் சிறந்தவராக லாறியாரைப் பலபேர் மதித்தார்கள் லாறியாரின் …

எல்லாம் இறுதியில் பழகிப் போய்விடும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

எல்லாம் இறுதியில் பழகிப் போய்விடும் நினைவில் உள்ளதா ஏமாற்றத்தின் துரோக முட்கள் உன்னைக் கிழித்த அம்முதல் நாளை எப்படி உரக்கக் கூவினாய்! யாரோ கூக்குரல் கேட்டு வருவார் என்பதாய் எவ்வளவு விரைவில் தெரிந்து கொண்டாய் பதிலில்லாக் கேள்வி உன் கூக்குரலென்று கொஞ்சம் கொஞ்சமாய் பழகிப் போய்விடும் எத்தனை குருதி பெருக்கினாய் முதலில் அன்று குத்தப்பட்ட போது …

ஈ / ஞானக்கூத்தன் கவிதைகள்

கண்ணைக் கவரும் மார்பகங்கள் பார்ப்பதரிதாய்ப் போய்விட்டதென்று சுற்றிலும் பார்த்தேன் உயர்ந்த வெள்ளைத் துணிக்குள் இரண்டில் வலது பொதிந்திருந்தது அதன் மேல் ஆனால் ஒரு ஈ சாமரம் போல மார்பசைந்தது அசையாதிருந்தது நான் இடத்தை விட்டுப் போக நேர்ந்தது போய் விட்டிருக்குமா ஈ நிச்சயம் போய்விட்டிருக்கும்: இல்லை நிச்சயம் இருக்கும்: ஈ போய்விட்டிருக்கும் ஈ போய்விட்டிருக்கும் நிச்சயம் …