உயர் மாகடல் உற்றொரு / ஞானக்கூத்தன் கவிதைகள்

சென்னை நகரத்தைச் சுற்றிப் பார்க்க வந்தவன் போலிருந்தான் கட்டியிருந்த வேட்டியை முழங்கால் வரைக்கும் உயர்த்தியிருந்தான் சாதாரணமான ஒரு சட்டை ஒரு விலங்கின் வயிற்றை நினைவூட்டி அவன் தோளில் தொங்கியது ஒரு பை கடலைப் பார்த்ததும் ஒரு சந்தோஷம் எதிரில் வந்தாரை எல்லாம் வழிகேட்டு கடல் வந்தடைந்த சந்தோஷம் கடலை நோக்கி அவன் பாடினான் ஒரு ஊரின் அருமை பெருமை பற்றி கடலிடம் சொல்லிக் கொள்ளும் ஒரு பாட்டு கடலை நோக்கிக் கையைச் சுட்டியும் உயர்த்தியும் அஞ்சலி செய்தும்… Continue reading உயர் மாகடல் உற்றொரு / ஞானக்கூத்தன் கவிதைகள்

திருப்தி / ஞானக்கூத்தன் கவிதைகள்

சஞ்சிகையைப் பிரித்தான். அங்கே முப்பதாம் பக்கத்தைப் பார்த்தான். இரண்டு வரிகளில் ஒருகவிதை. அதற்குக் கீழே இருந்த பெயரைப் படித்ததும் அவனுக்கு ரத்தம் கொதித்தது. கவிதை எல்லோரும் நல்லவரே அவரவர் நாட்டில் அவரவர் வாழ்ந்திருந்தால் இரண்டு வார்த்தை ஆசிரியர்க்கு எழுதிப் போடணும் ஆனால் ஒன்றைப் பற்றி மட்டும் எழுதினால் நன்றாய் இருக்காது. தெரிந்து விடும் எனவே எழுதினான். சென்ற இதழில் கொய்ராலா படத்தைப் போட்டு அசத்திவிட்டீர் வாசுவின் எழுத்தில் முதிர்ச்சி கண்டேன். இறைச்சி கவுச்சி ஓரினப்புணர்ச்சி பற்றிய கட்டுரை… Continue reading திருப்தி / ஞானக்கூத்தன் கவிதைகள்

நிர்மலம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

வருகிறான் அவன் யார்? சவரத் தகடா? புதிய பல்பொடியா? இன்னதென்று நினைவில் இல்லை. என்னிடம் விற்க முயன்று, வாங்கப் படாமல் திரும்பிப் போகிறான் அவன் யார்? போகும் திசையில் நிற்கறான் நடக்கிறான் தயங்கிப் போகிறான் கண்ணுக்குக்கீழ் தலைப்பில் குத்திய ஐம்பது காசுப் பேருந்துச் சீட்டுப் போல என்னவோ சுருக்கம் பார்வையைக் கவரும். இடது கையில் ஏதோ பெட்டியைச் சுமப்பது போன்ற பாவனை. நிற்கிறான் நடக்கிறான் பார்வையை வேறு பக்கம் திருப்பினேன் வேங்கட ரங்கம் பிள்ளைத் தெருவின் வால்போல்… Continue reading நிர்மலம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஐந்து கவிதைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

1. என் வீட்டுச் சுவரில் எவரோ எழுதிய இரட்டை இலைமேல் கம்பளி பூச்சி 2. அரசியல் வாதிதான் பாரத ரத்னம் மற்றவரெல்லாம் டீக்கடை ரத்னம் 3. நிறைய பலாப்பழம் போகிற தென்றான் சிறுவன் ஒருவன். திரும்பிப் பார்த்தேன் போய்க் கொண்டிருந்தது கூச்சலிடாத மோடா வியாபரி 4. தட்டான் பூச்சிகள் தோட்டத்தில் சுற்றக் கண்டு கிட்டாத இன்பம் கிட்டிய தென்ன – கண்ணபெருமானே. 5. பச்சைத் தழையுடன் நின்றிருந்த மரத்தில் காற்று புகுந்தது. எண்ணி எண்ணி துறக்கிறாற் போல… Continue reading ஐந்து கவிதைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

தண்ணீர்த் தொட்டி மீன்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

இந்தக் கடலின் எந்தக் குபேர மூலையிலும் கிடைக்காத புழுக்கள் வேளை தவறாமல் தானாய் வருகிறது. தெய்வக் கிருபையால் புயல்களும் இல்லை. திமிங்கிலங்களை அவதாரக் கடவுள் காணாமல் செய்துவிட்டார். ஆனால் இன்னும் ஒன்று மட்டும் புரியாத புதிராய் இருக்கிறது. உலகத்தை உதடு குவியப் புணர்கையில் அஃதென்ன இடையில்? அப்புறம் ஒன்று எங்கே எங்கள் முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்?

லாறி / ஞானக்கூத்தன் கவிதைகள்

எங்களூர்ப் புழுதித் தெருமேல் அடிக்கடி ஓடும் லாறிக்கு நைனாச்சாரியார் என்று பெயர் வைத்தார்கள் – இரண்டிடத்திலும் புட்டம் அகலமாய்த் தெரிந்ததால் – புறம்போக்கு மண்ணில் புகைந்த சூளையின் செங்கல்லை வாரித் தொலைவில் விற்று விற்றுக் குதிரை வண்டி குப்பு முதலியைக் குபேரனாக்கிய பெருமை அதற்குண்டு கல்வி கேள்விப் புலமையில் சிறந்தவராக லாறியாரைப் பலபேர் மதித்தார்கள் லாறியாரின் அங்கம் முழுதும் ஆங்கிலம் பொலிந்தது கொஞ்ச நாட்களாய் லாறியார்க்குக் கெட்டப் பேரொன்று சேரத் தொடங்கிற்று லாறி வழங்கிய பெட்றோலிய மூச்சில்… Continue reading லாறி / ஞானக்கூத்தன் கவிதைகள்

எல்லாம் இறுதியில் பழகிப் போய்விடும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

எல்லாம் இறுதியில் பழகிப் போய்விடும் நினைவில் உள்ளதா ஏமாற்றத்தின் துரோக முட்கள் உன்னைக் கிழித்த அம்முதல் நாளை எப்படி உரக்கக் கூவினாய்! யாரோ கூக்குரல் கேட்டு வருவார் என்பதாய் எவ்வளவு விரைவில் தெரிந்து கொண்டாய் பதிலில்லாக் கேள்வி உன் கூக்குரலென்று கொஞ்சம் கொஞ்சமாய் பழகிப் போய்விடும் எத்தனை குருதி பெருக்கினாய் முதலில் அன்று குத்தப்பட்ட போது இன்றோ உன்னை எங்குக் குத்தியும் சொட்டுக் குருதியும் வெளிப்படவில்லை கூச்சலும் இன்று தவிர்ந்து விட்டது உனக்குத் தெரியும் கொலையின் நேரம்… Continue reading எல்லாம் இறுதியில் பழகிப் போய்விடும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஈ / ஞானக்கூத்தன் கவிதைகள்

கண்ணைக் கவரும் மார்பகங்கள் பார்ப்பதரிதாய்ப் போய்விட்டதென்று சுற்றிலும் பார்த்தேன் உயர்ந்த வெள்ளைத் துணிக்குள் இரண்டில் வலது பொதிந்திருந்தது அதன் மேல் ஆனால் ஒரு ஈ சாமரம் போல மார்பசைந்தது அசையாதிருந்தது நான் இடத்தை விட்டுப் போக நேர்ந்தது போய் விட்டிருக்குமா ஈ நிச்சயம் போய்விட்டிருக்கும்: இல்லை நிச்சயம் இருக்கும்: ஈ போய்விட்டிருக்கும் ஈ போய்விட்டிருக்கும் நிச்சயம் கூடப் பார்க்கப் படாத ஈ யூகத்தளவு தான் கண்ணால் எடுத்துச் செல்லப்பட்ட கண்ணைக் கவர்ந்த மார்பகத்தின் மேல் என்றும் இருக்கிறது… Continue reading ஈ / ஞானக்கூத்தன் கவிதைகள்

காகித வாழ்க்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்

திடீரென்று ஆனால் சர்வ நிச்சயத்துடனே அன்று தொடங்கிய எனது வாழ்வை வியக்கிறேன் திரும்பிப் பார்த்து. நான் அதைக் கேட்கவில்லை எனக்காக யாரும் கேட்கவில்லை என்பதுறுதி ஆனால் ஏனது உண்டாயிற்று? அவ் வேத கோஷத்தோடு மழை மண்ணில் இறங்கும் போது இவ் இது என் வாழ்க்கை வானி லிருந்து பொட்டலம் போல் வீழ- பொட்டல மான யானே என்னையே பிரித்துப் பார்க்கும் அதிசயம் இதன் பேரென்ன? நிச்சயத்தோடு அன்று வாழ்க்கையே தொடங்கிற் றென்றால் எங்கிருந் தாரம்பம் என்று தேடு… Continue reading காகித வாழ்க்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்

உபதேசம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

அன்பைத் தவிர வேறொரு செய்தி விளம்பத் தகுந்ததாய் உலகிலே இல்லை நீண்டதாய் எங்கும் செல்வதாய் இருக்க வேண்டும் என் அன்பு சக்கரம் பொருந்தி சுமையை எல்லாப் பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டு.