விதைகளைப் பதுக்கும் சதைத்த கனி / குட்டி ரேவதி கவிதைகள்

தனக்குள் விதையின் வேர்கிளைக்கும் வரை விதைகளைப் பதுக்கியிருக்கும் சதைத்த கனி அதையே ஊருக்குள் கதையென்றாக்கும் காட்டில் வீழ்ந்தாலும் கருப்பையில் தகைந்தாலும் விதையை விழித்தோ அவசியமெனில் அழித்தோ மரமாக்கி பழுத்த கனியும் ஆக்கிக் களிக்கும் எம் பெருயோனி மரபிலோ விதைகளை அவிப்பதுமில்லை பதுக்குவதுமில்லை உயிர்க்குலையின் கிளைகளில் பால்பிடித்து தொங்கும் எம் கனிகளுக்கு விதை ஒரு சாக்கு மரமும் சாக்கு மகிழ்ச்சியை உடலாக்கிக் கொண்டாட மீண்டும் மீண்டும் முலை பூரித்தக் கனிகளாய் முறை வைத்து உருவாக்கி மரமெங்கும் பழுத்துத் தொங்குவதும்… Continue reading விதைகளைப் பதுக்கும் சதைத்த கனி / குட்டி ரேவதி கவிதைகள்

பலூன் / குட்டி ரேவதி கவிதைகள்

என் கையளித்த பலூன் நில்லாமல் மிதக்கிறது பெரும் பரவசக் குமிழி போல உடலிடுக்கில் பதுக்கிக் கொண்டு அலைகிறேன் ஆகவே தரை தங்காமல் எம்பி எம்பி மேகமாகிப் பார்க்கிறேன் தோளால் விரலால் முட்டியால் காலால் இடுப்பால் புட்டத்தால் என அதை உதைத்து உதைத்து என் களிப்புக்குச் சுவை கூட்டுகிறேன் பலூன் கைகொள்ளாமல் காற்றுடன் மோகம் கொண்டு எல்லா கதவுகளையும் தட்டுகிறது சுவர்களையும் மோதுகிறது எவரும் தொட்டுப் பற்றிக் கொள்ளத் துடிக்கிறார் குதிக்கிறார் கைகளை நீட்டிப் பறித்துக் கொள்ள அலைகிறார்… Continue reading பலூன் / குட்டி ரேவதி கவிதைகள்

இனி வேட்டை என்முறை / குட்டி ரேவதி கவிதைகள்

அது ஒரு வேட்டையின் கணம் என்று சொல்லத் தேவையில்லை அவன் என்னுடல் நிலத்தின் மேலிருந்தான் அவன் எடையின் அழுத்தமும் மூச்சின் விசைக்கும் கீழிருந்தேன் நானங்கே நரம்புகளால் நாண் இழுத்த வேகத்தில் அவன் மல்லாந்து எதிரே விழுந்தான் இப்பொழுது வேட்டையின் என் முறை நான் அவனை மூர்ச்சிக்கச் செய்தேன் அம்புகள் தீர்ந்து போயிருந்த அம்பாரியில் மூர்ச்சிக்கச் செய்யும் முத்தங்களின் கனிகளுடன் நிணம் பெய்யும் வானத்தைப் போல இருந்தேன் ஒரு மிருகமாய் மாற்றி அவனைத் தூக்கிச்சுமந்து வனத்தைச் சுற்றி வந்தேன்… Continue reading இனி வேட்டை என்முறை / குட்டி ரேவதி கவிதைகள்

தாமரை மலர் நீட்டம் / குட்டி ரேவதி கவிதைகள்

தடாகத்தில் கண்ணகியின் உடல் ஒரு செந்தாமரையாகித் தவிக்கக் கண்டாள் காமத்தின் நீர் மட்டம் உயர உயர தன் தாமரையின் ஒற்றைக்காலில் நின்ற தவ வேளையும் உயரக்கண்டாள் சேற்றின் வேகாத மண்ணில் நின்று தவித்த தன் தாளாத இலை உடலை அந்நீரில் விரித்து சூரியன் பரவக் கொடுத்தாள் சூரியனோ அவளைக் காணாமல் கடக்கிறது தணலாய்த் தகித்தது உள்ளும் புறமும் நீர்த்தடாகம் அவளைச் சுற்றிப் பெருகிக் கொண்டே இருந்தது தன் இலையுடல் நோவும் கனத்த மலராகத் தான் இருப்பதை அவள்… Continue reading தாமரை மலர் நீட்டம் / குட்டி ரேவதி கவிதைகள்

கதம்பம் / குட்டி ரேவதி கவிதைகள்

உடலெல்லாம் கதம்ப மணம் வீச யார் வந்து தழுவிச் சென்றார் இரவின் கடும் இருட்டின் கரையிலும் பொழுதற்ற வேளையிலும் யார் வந்து தொடுகிறார் மணம் கவ்விய பெரு நீரோட்டத்தில் உடல் குழைந்து சாகும் வேளை யாரும் ஏதும் சொல்லிலார் நரம்புகள் தோறும் பெருவெள்ளம் பாய செஞ்சந்தனம் குளிர யார் வந்து அணைக்கிறார் காலமென்ற வேதனையைக் மண்குடமதில் நீராக்கி கணக்கில்லாமல் சுமக்கும் போது யார் வந்து கை மாற்றுவார் கண்ணிலார் காதிலார் மனமிலார் எண்ணிலார் இம்மண்ணிலே ஒன்றாகக் குழுமிடவே… Continue reading கதம்பம் / குட்டி ரேவதி கவிதைகள்

உன்னிடம் உண்டா ஓர் அரண்மனை? / குட்டி ரேவதி கவிதைகள்

ஒவ்வொரு நாளும் அவன் ஒரு பெண்ணாக மாறிக்கொண்டே இருந்தான் பெண்ணின் அடையாளங்களை முதலில் புற உடலில் வரைந்து கொண்டான் உடலின் வரைபடத்தில் நீர் ஓவியத்தைப்போல காமத்தின் எழுச்சிகளும் வரையப்பட்டிருந்தன கண்குழியில் ஆழக்கடலின் ரகசியங்களை பொதிந்து கொண்டான் உணர்ச்சியின் நீரோட்டங்களை ஆறாகப் பெருக விட்டான் உடல் சமவெளியில் விறைத்த குறியை அதன் ஆண்மைய முட்களை அறுத்தெறிந்து சமனப்படுத்திக் கொண்டான் இப்பொழுதிருந்து அவனை அவள் என்றே அழைக்கலாம் என்று அறிவித்துக் கொண்டாள் நம்பிக்கையின் தாரகைகள் முளைத்து உடல் ஒரு வானமாக… Continue reading உன்னிடம் உண்டா ஓர் அரண்மனை? / குட்டி ரேவதி கவிதைகள்

கண்காட்சி / குட்டி ரேவதி கவிதைகள்

வீட்டின் கூரை மீது விரிந்த வேப்பமரம் தங்க நிறப்பழங்கள் சொரிய கோடைப்பகலில் உன்வீடு தீச்சட்டியாய் கனன்றது அறைகளின் சுவர்களில் உலர்ந்த பூக்களென பட்டாம்பூச்சிகள் ஒட்டியிருந்த வண்ணம் காட்டி பரவசம் கண்டாய் நிழலின் தோகைகள் இருளென படர்ந்து தாபங்கள் எழுந்த வேளை தனிமையை நீருற்றி வளர்த்த உன் கண்கள் வேகமாய் இன்னோர் அறைக்கு வாசல் திறந்தன அறைகள் பெருகி தாழுடன் தவிப்புடன் இறுகியிருந்தன வீசும் வெக்கையை குயிலின் பூக்கள் பாடி ஆற்றின கிளைகளின் பாதையில் பந்தயம் வென்ற அணில்களின்… Continue reading கண்காட்சி / குட்டி ரேவதி கவிதைகள்

கரையேதுமில்லை / குட்டி ரேவதி கவிதைகள்

மீன்கள் அள்ளிய வலையாய்க் கடலை கரையிழுத்து வந்த அதிகாலைப் பெண்டிர் நாம் இரவின் ரகசியங்களைக் கிழிக்கும் மூர்க்கத்துடன் நம்மிருவரின் கணக்கற்ற இயக்கங்களாலான உடல்களால் இரவின் நீலவர்ணத்தை அளந்தவர்கள் தோலுரித்தவர்கள் நாம் அங்கே தந்திரங்கள் ஏதுமில்லை கடலை அளக்க நீந்திய இரு மீன் குஞ்சுகளைப் போல அளந்து நடக்கப்பணித்த கால்களைத் துறந்தோம் நீந்தி நீந்திக் கரை மறந்தோம் ஆழக்கடலில் சூரியன் தெரிந்தது மெலிந்த உதடால் மழைநீரின் ஒவ்வொரு துளியையும் கவ்விச் சுவைத்த முத்துச்சிப்பியைப் போல் உன் காமத்தின் பெருமழையைத்… Continue reading கரையேதுமில்லை / குட்டி ரேவதி கவிதைகள்

செங்கொடி – சுழன்றாடும் பெருந்தீ / குட்டி ரேவதி கவிதைகள்

துயரங்களாலான அம்மாவின் கந்தல் சேலை காற்றில் அலைந்து பற்றிய தீ, நீ! பற்றிக் கொண்ட தீயுடன் அவள் தெருவிறங்கி ஓடுகையில் கடைசி நினைவாய் அவள் பாதங்களைச் சுட்டெரித்த தார்ச்சாலை ஆனவளும் நீ தீப்பந்தமாய் அவள் ஓடி ஓடி எரிந்த அத்திருப்பத்தைக் கடக்கும் போதெல்லாம் ஓர் எரிநட்சத்திரம் உன் மண்டைக்குள் பரபரவென்று பற்றி எரிகிறது என்பாய் உன் தாயின் நினைவு பீடித்த பொழுதுகளை அக்குளக்கரையில் கழித்தோம் நீயும் நானும் அவள் அழுத கண்ணீராலானது என்பதால் நம்மை மீன்களாக்க முடியாது… Continue reading செங்கொடி – சுழன்றாடும் பெருந்தீ / குட்டி ரேவதி கவிதைகள்

இரை/ குட்டி ரேவதி கவிதைகள்

மின்னும் செதில்களுடனும் துருத்திய விழிகளுடனும் அலைகடல் கரையின் பொன்மணலில் ஒற்றைக் கால் உந்திஉந்தி நீ துடித்துக்கொண்டிருக்கிறாய் ஆகாயத்தில் விசையுடன் சுழலும் அவ்வேகத்திலேயே என்னுடல் கணையால் அக்கரைபாய்ந்து என் இரை உன்னைக் கொத்திப்போகும் தருணம் மீதில் சலனம் கலைத்த பறவையாய் பறத்தலில் மிதக்கிறேன் வானம் பூமி இடைவெளிப் பாய்ச்சல் பழக்கமெனக்கு என்றாலும் கடைசிச் சுவாசமும் சீற விழிபிதுங்கக் காட்சிதரும் பரிதாபமான இரையை ஏனோ நான் விரும்பவில்லை நீர்ச்சுழலில் துள்ளியோடி நீந்தி நீ ஆர்ப்பரிக்க சர்ரென்று பாய்ந்து உன்முதுகில் என்… Continue reading இரை/ குட்டி ரேவதி கவிதைகள்