ஆண் உடல் ஒரு பிரமை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்

உனது கண்களின் போதை அகலப்பாய்ந்து என்னுள் உதிரத்தின் பேரருவி என்புக்குள் சீறிப்பாய தீண்ட ருசிக்கும் எனது பார்வைகள் உன்னில் பதியனிடும் வரலாற்றின் தண்டுகள் உனது வார்த்தைகள் என்னுள் நிரம்பி மூலத்தில் மெளனமாய்ச் சுருள்கின்றன நீ மெளனத்தை இரு துண்டுகளாகக் கிழித்து என் மீதெல்லாம் மழையடிக்கிறாய் பின் இறுகிய தரையில் ஒன்றிரண்டாய் அதன் கனத்த துளிகள் வீழும் சப்தம் நீண்ட நேரம்… பருவத்தின் பின் பருவமாய்க் காலம் இழுத்துச் செல்லும்போது விடுதலைக்கான கதறல் அழைத்து வந்தது என்னை உனது… Continue reading ஆண் உடல் ஒரு பிரமை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்

இறுதியாக ஒரு முறை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்

இதயக்கமலங்கள் மலரும் மாலைப்பொழுது ஓர் உறவின் முறிவைப் போல் சடாரென்று விழுந்து நொறுங்கிப் போகின்றன சூரியனின் கைகள் மேற்கே தெருவெங்கும் கூச்சமிழந்த பெண்களின் சிரிப்பொலிகள் வாணவேடிக்கைகளாய் வெடித்து ஓய்கின்றன நிசப்தம் ஜன்னலையும் கதவுகளையும் சாத்தும்போது அவள் அன்று ஐந்தாம் முறையாகக் களைப்புற்றிருந்தாள் ‘சுவர்களையெல்லாம் உடைத்துக் கொண்டு வெளியேற வேண்டும். ஆடைகள் எதுவும் தடுக்காது நகரத்தின் மைய வீதி வழியே ஓடிக் கொண்டே இருக்கவேண்டும் பருவம் காலம் இடம் மனிதர் பேதமின்றி ஒரு பழைய ஞாபகத்தின் தொங்குபாலமும் வேகத்தைக்… Continue reading இறுதியாக ஒரு முறை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்

சூல் – உயிருடலின் பேரற்புதமான பணி – உடலின் கதவு / குட்டி ரேவதி கவிதைகள்

பாம்போடு பாம்பு பிணையும் அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும் வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும் உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ முட்டை மீது முட்டையடுக்கி அவயங்காக்கும் மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு உடல் விரித்து ஆனந்திக்கும் உயிரிழுத்துப் போட்ட பின்னும் கண் துஞ்சாமல் சூல் கொள்ளும் பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும் உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும் ஆணொன்று விரட்டிப் புணர உடலெல்லாம் கருக்கொள்ளும் வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத் தாய் மரிக்கும் உடலின் சிறகடியில் நினைவு குவித்து… Continue reading சூல் – உயிருடலின் பேரற்புதமான பணி – உடலின் கதவு / குட்டி ரேவதி கவிதைகள்

யோனியின் மதகைத் திறக்கிறது உன் நினைவின் பெருக்கு – உடலின் கதவு / குட்டி ரேவதி கவிதைகள்

உனது நினைவின் மதகு ஒரு மழைக்காலத்தின் வருகையை அறிவிப்பதாய்ப் பெருகி வீழ்கிறது என் வெயில் பிரதேசமெங்கும் கொஞ்சமும் தளராத வேட்கையுடன் நுரை சுழித்த திமிரில் எனது பூமியில் குழிபறிக்கிறது அது ஒரே நாளை ஆயிரம் முறைகள் வாழநேர்ந்ததாய்ச் சலிப்பூட்டும் அதிகாலைகளைக் கசக்கி எறிகிறது குகையினூடே ஒளி துளைக்கும் அதன் சீற்றத்தின் கொதிப்பு உணர்ந்தும் கைகள் பொசுங்க அள்ளிப் பருகுகிறேன் நெடிய மரங்களினூடே அலையும் என் பார்வை ஓர் அற்புதமான குறிஞ்சிப்பூவைக் கண்டுகளிக்கிறது தொடுவானத்தை இடித்துவிடாமல் இருக்கட்டும் நமது… Continue reading யோனியின் மதகைத் திறக்கிறது உன் நினைவின் பெருக்கு – உடலின் கதவு / குட்டி ரேவதி கவிதைகள்

முலைகள் நான்கு – உடலின் கதவு / குட்டி ரேவதி கவிதைகள்

உடலெங்கும் நீர்மொக்குகளுடன் அவள் எழும்பிவருகையில் ஒரு மொக்கும் முறியாது நாவினால் பறித்துக் கனிகளாக்கி உண்பேன் நீரலை கரையேறிச் சறுக்குவதைப் போல அவள் இதயத்தின் பெருஞ்சுவாசம் மார்புகளின் மீது அலையெனப் புரண்டடங்கும் உள்ளங்கைகளை அகலவிரித்து இலையின் குழிவோடு உந்தியை விரித்துக்கொடுப்பாள் ஒரு கிளி கவ்வியிருக்கும் கனியைப் போல தன்னுடலைத் தானே ஏந்திவந்து என்னிதழுக்குள் வழங்குவாள் ஒருவரது பரவசத்தின் தேநீரை மற்றவர் குடித்துக் களிப்போம் நிரம்பப் புகையும் கூந்தலுக்குள் மூழ்கி திசை குழம்பி மூச்சுத்திணறி மீளுவேன் நான் கால்தடங்களால் தரையெங்கும்… Continue reading முலைகள் நான்கு – உடலின் கதவு / குட்டி ரேவதி கவிதைகள்

குளிர்ந்த விதை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்

ஏற்கெனவே இதயத்தின் கனிவான சதைப்பகுதிகளையெல்லாம் அவன் தின்று தீர்த்திருந்தான். விதையைத் தரிசுநிலப் பாழ்வெளியில் விட்டெறிந்தான். முன்னோர்களின் எச்சம் என்னோடு தீர்ந்துவிடாதபடிக்கு ஆயிரமாயிரம் மரங்கள் பருவமெய்துவதற்கான ஊட்டத்தை எனது கால்களுக்கிடையே ஒளித்து வைத்திருந்தேன் எறும்புகளும் சுவைத்திடா வண்ணம் ஓட்டை வலியதாக்கிக் கொண்டேயிருந்தேன் தளிரற்ற மரக்கிளையில் பறவைகள் வந்தமர்வதில்லை சூரியன் ஒளியை வெப்பமாய் எங்கெங்கும் ஊற்றிக் கொண்டிருந்தான் அவ்வழியே களைப்பாறிய எருமை சொரசொரப்பான தனது நாவால் எனை முழுதுமாய் விழுங்கியது அதன் சீரணமண்டலம் குளிரூட்டியது சிறிதும் சேதமிலாது வெளியே பாய்ந்தேன்… Continue reading குளிர்ந்த விதை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்

ஆண்மை இல்லை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்

அன்று மழையோ மழை நதியின் மீதெல்லாம் மழைக்குஞ்சுகள் அடிவயிற்றின் பயிர்மேடு பரவசத்தில் சிலிர்த்து எழ ரம்மியமான மந்தகாசப் புன்னகையை உடலெங்கும் நழுவவிட்டபடி மழை தரையிறங்கியது நனைந்து உடலொட்டிய பாவாடையை உயர்த்தி நின்றது காடு ஓய்ந்த மழையை அம்மாவின் சொல் மீறித் திமிறிப் பறந்த பறவை சொன்னது நினைவுகளின் தடயங்களை மழையால் அழிக்கமுடிவதில்லை பகல் முழுதும், பின்னும் அதன் பாடல் ஓயவேயில்லை மகரந்தச்சேர்க்கைக்குப் பின் தளும்பும் மலர் சோர்வுடன் பூமியில் எங்குமே ஆண்மையில்லை

நிர்வாணம் – நூறு கோடி விளக்குகளின் வெளிச்சம் / குட்டி ரேவதி கவிதைகள்

உனக்கும் எனக்கும் அவளுக்கும் நிர்வாணம் தான் பளபளக்கும் ஆயுதம்; குருதியின் வியர்வையில் நனையும் போதெல்லாம் ஒரு பயிற்சியின் முழுமையை அடைகிறது மரங்கள் நிர்வாணத்தை யடையும் போதுதான் இறக்கைகள் துளிர்க்கும் பறவைகளாயின சீனப் போர்வீரன் சொல்லுவான்: ‘உறையிலிருந்து ஒரு பொழுதும் வாளை வெளியே இழுக்காதே அவசியமின்றி’ நிர்வாணம் வளர வளரத் தீயின் கொழுந்தைப் போல். நிர்வாணத்துடன் வாழ்வது எளிதன்று அது உன்னை அலைக்கழிக்கும் உபயோகிக்கும் வாய்ப்பைத் தேடி வாளை ஒரு போதும் வெளியே இழுக்காதே அவசியமின்றி அது துருப்பிடித்துச்… Continue reading நிர்வாணம் – நூறு கோடி விளக்குகளின் வெளிச்சம் / குட்டி ரேவதி கவிதைகள்

நம்மை அது தப்பாதோ? / ஞானக்கூத்தன் கவிதைகள்

1. ஓர் ஏழையின் சிரிப்பில் அவனது அப்பாவைப் பார்த்தேன் அவரும் ஓர் ஏழைதான் அவரது சிரிப்பில் அவரது மனைவியைப் பார்த்தேன் அவளும் ஓர் ஏழைதான். அம்மா அப்பா பிள்ளை மூன்று பேரும் தனித்தனி யாக நாடு நாடாகப் பாசி மணிகளும் கருமணிகளும் ஊசிகளும் விற்றார்கள். மான் கொம்பும் புலிப் பல்லும் விற்றார்கள் எருமைக் கொம்பில் செய்த சின்னப் பல் பெரிய பல் சீப்புகளும் விற்றார்கள் நிறைய சம்பாதித்து நாடு திரும்பினாள் அம்மா அவளைப் பார்த்து சிரித்தார் அப்பா… Continue reading நம்மை அது தப்பாதோ? / ஞானக்கூத்தன் கவிதைகள்

சொன்னதைக் கேட்ட ஜன்னல் கதவு / ஞானக்கூத்தன் கவிதைகள்

மருத்துவ மனையில் படுத்திருந்தான் தலையில் கட்டுடன். நர்ஸ் வந்தாள்; ஊசி போட்டாள். நான்கைந்து மாத்திரைகள் தந்தாள். போனாள் வழக்கம் போல அன்றும் அந்தக் கதவை அவன் பார்த்தான். அடுத்த நிமிஷம் அந்தக் கதவு விழுந்தே விட்டது அவன் மேல். அந்தத் தெருவில் அவ்வீட்டைக் கடந்து சென்ற ஒவ்வொரு நாளும் அவன் அதைப் பார்த்தான். மேலே இரண்டு கீழே இரண்டென்று நான்கு கதவுகள் கொண்ட மாடிப் பக்கத்து ஜன்னல் பச்சை வண்ணம் பூசப்பட்ட சதுர ஜன்னல். ஜன்னல்களில் ஒன்று… Continue reading சொன்னதைக் கேட்ட ஜன்னல் கதவு / ஞானக்கூத்தன் கவிதைகள்