தெய்வமே என்னைக் கைவிட்டு விடாதே! / தபு ஷங்கர் கவிதைகள்

தெய்வமே, உன்னை என் இதயத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, ஒரு பெண்ணைக் குடிவைத்ததற்காகக் கோபித்துக்கொண்டு என்னைக் கைவிட்டு விடாதே! உன்னால் தூணிலோ, துரும்பிலோகூட வாசம் செய்ய முடியும். அவளால் முடியுமா?

என் காதல் கடிகாரம் / தபு ஷங்கர் கவிதைகள்

உன் பிறந்த நாளையும் பிறந்த நேரத்தையும் காட்டுகிற ஒரு கடிகாரம் என் அறையிலிருக்கிறது. “கடிகாரம் ஓடலியா?” என யாராவது கேட்டால் சிரிப்புத்தான் வரும்.. அது காலக் கடிகாரம் அல்ல என் காதல் கடிகாரம்

உன் பிறந்த நாள் / தபு ஷங்கர் கவிதைகள்

உன் பிறந்த நாளையும் பிறந்த நேரத்தையும் காட்டுகிற ஒரு கடிகாரம் என் அறையிலிருக்கிறது. “கடிகாரம் ஓடலியா?” என யாராவது கேட்டால் சிரிப்புத்தான் வரும்.. அது காலக் கடிகாரம் அல்ல என் காதல் கடிகாரம்

கொடுமையாய் இருக்கும் என் காதல் / தபு ஷங்கர் கவிதைகள்

வரதட்சிணை எல்லாம் கேட்டு உன்னைக் கொடுமைப்படுத்திவிட மாட்டேன். ஆனால் அதைவிடக் கொடுமையாய் இருக்கும் என் காதல்.