நீ என் தேவதை / தபு ஷங்கர் கவிதைகள்

உன்னை என் தேவதை என்று நினைத்துதான் வழிபட ஆரம்பித்திருக்கிறேன் . ஒரு வேளை நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும் என் வழிபாடுகள் உன்னை தேவதை ஆக்கிவிடும் !

தி / தபு ஷங்கர் கவிதைகள்

தினந்தோறும் குழந்தைக்கு ஆடை அணிவித்து பள்ளிக்கு அனுப்பும் தாயைப்போல ஒரு நாளாவது உனக்கு ஆடை அணிவித்து கல்லூரிக்கு அனுப்பவேண்டும்

உ / தபு ஷங்கர் கவிதைகள்

உப்பைக் கொட்டியவர்கள்கூட அள்ளிக்கொண்டு போகிறார்கள் ஆனால் நீயோ உன் உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு அலட்சியமாய்ப் போகிறாயே

அவளிடம் மயங்கு / தபு ஷங்கர் கவிதைகள்

உனக்கென்று பிறந்தவள் இந்த உலகத்தில்தான் இருப்பாள். அவளை நீ தேடாதே. தேடிக் கண்டுபிடித்து விடக்கூடியவள் இல்லை அவள். உனக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு காதல் கணத்தில், சட்டென்று அவளே உன் கண் முன்னே தோன்றுவாள். அவ்வளவுதான்… உன் மதி மயங்கிப் போய்விடும். முதல்முறையாக உன் உடல்வேறு; மனம் வேறு என நீ இரண்டாகிப் போவாய். அதன்பிறகு… வானத்தைப் பார்த்தபடியே எங்கெங்கோ திரியும் உன் உடல். வாசலைப் பார்த்தபடியே, அவள் வீடிருக்கும் வீதியில் ஓர் ஆனந்த மயக்கத்தில் அசையாது கிடக்கும்… Continue reading அவளிடம் மயங்கு / தபு ஷங்கர் கவிதைகள்

எனக்கு இரண்டு காதலிகள் / தபு ஷங்கர் கவிதைகள்

ஒருத்தி உன் வீட்டில் வசிக்கிறாள் இன்னொருத்தி என் இதயத்தில் வசிக்கிறாள் …………………………………………. உன்னைக் கண் திறந்து பார்க்கிறேன் அவளை கண் மூடிப் பார்க்கிறேன் …………………………………………. அவளைக் கூட்டிக் கொண்டுதான் உன்னைப் பார்க்க வருகிறேன் உன்னைப் பார்த்துவிட்டு அவளோடுதான் வீடு திரும்புகிறேன் …………………………………………. உன்னிடம் ஒருமுறை காதலைச் சொல்வதற்காக அவளிடம் ஓராயிரம்முறை ஒத்திகை பார்த்திருக்கிறேன் …………………………………………. நீ அவளைப் பார்க்கவேண்டுமென்றால் சொல் அனுமன் தன் நெஞ்சைப் பிளந்து ராமனிடமே ராமனைக் காட்டியது மாதிரி உன்னிடமே உன்னைக் காட்டுகிறேன் ………………………………………….

தேவதைகளின் தேவதை / தபு ஷங்கர் கவிதைகள்

தேவதைகளின் தேவதை. *********************** எதற்காக நீ கஷ்டப்பட்டுக் கோலம் போடுகிறாய். பேசாமல் வாசலிலேயே சிறுது நேரம் உட்கார்ந்திரு போதும். **************** நீ குளித்து முடித்ததும் துண்டெடுத்து உன்கூந்தலில் சுற்றிக் கொள்கிறாயே… அதற்குப் பெயர்தான் முடி சூட்டிக்கொள்வதா. *************** தான் வரைந்த ஓவியத்தை கடைசியாக ஒரு முறை சரி செய்யும் ஓவியனைப்போல நீ ஒவ்வொரு முறையும் சரிசெய்கிறாய் உன் உடையை. *************** இலைகள் காய்ந்தால் உயிர் உள்ள கொடியும் பட்டுப் போகிறது. உன் உடைகள் காய்ந்தால் உயிரற்ற கொடியும்… Continue reading தேவதைகளின் தேவதை / தபு ஷங்கர் கவிதைகள்