வானம் / தபு ஷங்கர் கவிதைகள்

நீ எப்போதும் தலையைக் குனிந்தே வெட்கப்படுவதால் உன் மதிப்புமிக்க வெட்கத்தையெல்லாம் இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க முடிகிறது! ஒரேயரு முறை கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி வெட்கப்படேன்… வெகுநாட்களாய் உன் வெட்கத்தைத் தரிசிக்கத் துடிக்கிறது வானம்!

நான் ஒரு குடுகுடுப்புகாரன் / தபு ஷங்கர் கவிதைகள்

என்னை ஒரு குடுகுடுப்பைக்காரனாய் நினைத்துக்கொண்டு ஓர் அதிகாலையில் உன் வீட்டுமுன் நின்று இந்த வீட்டில் ஒரு தேவதை வாழ்கிறது என்று கத்திவிட்டு குடுகுடுவென நான் ஓடிவந்திருக்கிறேன்.

காதல் எனக்குள் ஊட்டியதுதான் இந்த வாழ்க்கை / தபு ஷங்கர் கவிதைகள்

ஒரு தாய் தன் குழந்தைக்குச் சோறூட்டுகையில் நிலவைக் காட்டுவது மாதிரி காதல் எனக்கு உன்னைக் காட்டியது. குழந்தை பரவசமாய் நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கையில் தாய், தன் குழந்தையின் வாய்க்குள் உணவை ஊட்டுவது மாதிரி நான் உன்னைப் பரவசமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கையில்… காதல் எனக்குள் ஊட்டியதுதான் இந்த வாழ்க்கை

என்னை மறந்து விட்டேன் / தபு ஷங்கர் கவிதைகள்

நான் எப்போது உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ அப்போதே என்னை மறந்து விட்டேன். அதனால்தான் என் காதலை உன்னிடம் சொல்லவேண்டும் என்கிற ஞாபகம் கூட எனக்கு வரவில்லை.

நீ முகம் கழுவுகையில் / தபு ஷங்கர் கவிதைகள்

நீ முகம் கழுவுகையில் ஓடிய தண்ணீரை பார்த்து திடுக்கிடுவிட்டேன் நான். ஒவ்வொரு நாளும் இவ்வளவு அழகையா வேண்டாம் என்று நீ நீரில் விடுகிறாய்!

நீ அருகில் / தபு ஷங்கர் கவிதைகள்

உறக்கத்திலிருந்து சட்டென்று விழித்து பார்த்த போது நீ அருகில் அமர்ந்து என்னையே பார்த்துகொண்டிருந்தாய் … அப்புறம் விழிப்பு வராதா என்ன ………