என்னை மறந்து விட்டேன் / தபு ஷங்கர் கவிதைகள்

நான் எப்போது உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ அப்போதே என்னை மறந்து விட்டேன். அதனால்தான் என் காதலை உன்னிடம் சொல்லவேண்டும் என்கிற ஞாபகம் கூட எனக்கு வரவில்லை.

நீ முகம் கழுவுகையில் / தபு ஷங்கர் கவிதைகள்

நீ முகம் கழுவுகையில் ஓடிய தண்ணீரை பார்த்து திடுக்கிடுவிட்டேன் நான். ஒவ்வொரு நாளும் இவ்வளவு அழகையா வேண்டாம் என்று நீ நீரில் விடுகிறாய்!

நீ அருகில் / தபு ஷங்கர் கவிதைகள்

உறக்கத்திலிருந்து சட்டென்று விழித்து பார்த்த போது நீ அருகில் அமர்ந்து என்னையே பார்த்துகொண்டிருந்தாய் … அப்புறம் விழிப்பு வராதா என்ன ………

தெய்வமே என்னைக் கைவிட்டு விடாதே! / தபு ஷங்கர் கவிதைகள்

தெய்வமே, உன்னை என் இதயத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, ஒரு பெண்ணைக் குடிவைத்ததற்காகக் கோபித்துக்கொண்டு என்னைக் கைவிட்டு விடாதே! உன்னால் தூணிலோ, துரும்பிலோகூட வாசம் செய்ய முடியும். அவளால் முடியுமா?

என் காதல் கடிகாரம் / தபு ஷங்கர் கவிதைகள்

உன் பிறந்த நாளையும் பிறந்த நேரத்தையும் காட்டுகிற ஒரு கடிகாரம் என் அறையிலிருக்கிறது. “கடிகாரம் ஓடலியா?” என யாராவது கேட்டால் சிரிப்புத்தான் வரும்.. அது காலக் கடிகாரம் அல்ல என் காதல் கடிகாரம்

உன் பிறந்த நாள் / தபு ஷங்கர் கவிதைகள்

உன் பிறந்த நாளையும் பிறந்த நேரத்தையும் காட்டுகிற ஒரு கடிகாரம் என் அறையிலிருக்கிறது. “கடிகாரம் ஓடலியா?” என யாராவது கேட்டால் சிரிப்புத்தான் வரும்.. அது காலக் கடிகாரம் அல்ல என் காதல் கடிகாரம்