தலையணை / ஞானக்கூத்தன் கவிதைகள்

விழுவதால் சேதமில்லை குலுக்கினால் குற்றமில்லை மூலைகள் முட்களல்ல உருவமோர் எளிமையாகும் வாழ்க்கையில் மனிதன் கண்டு பிடித்ததில் சிறந்ததாகும் தலையணை. அதற்குள் ஒன்றும் பொறி இயற் சிக்கல் இல்லை பாயில்லை என்றால் வேண்டாம் தலையணை ஒன்றைப் போடும்

சைக்கிள் கமலம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான் மைதானத்தில் சுற்றிச் சுற்றி எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள் தம்பியைக் கொண்டு போய்ப் பள்ளியில் சேர்ப்பாள் திரும்பும் பொழுது கடைக்குப் போவாள் கடுகுக்காக ஒரு தரம் மிளகுக்காக மறு தரம் கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள் வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும் வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும் இறங்கிக் கொள்வாள் உடனடியாக குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள் எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை எங்கள் ஊர்க்கமலம்… Continue reading சைக்கிள் கமலம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

யெதிரெதிர் உலகங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

கண்ணிமையாக் கால்தோயாத் தேவர் நாட்டில் திரிசங்கைப் போகவிட மாட்டேன் என்று ஒருமுட்டாள் சொன்னதுபே ராபத்தாச்சு தன்னாளைத் திருப்பியதும் விஸ்வா மித்ரன் கொதித்தெழுந்தான். பிரம்மாவுக் கெதிர்ப்படைப்புத் தான் செய்வே னென்று சொல்லி ஆரம்பித்தான் கண்ணிமையாக் கால்தோயாத் தேவரெல்லாம் ஓடிவந்தார் கடவுளுடன். வேண்டாமென்று முனிவர்களில் மாமணியைக் கெஞ்சிக் கேட்டார். சினம்தணிந்தான் தவஞானி. ஆனால் அந்தக் கணம்மட்டும் படைத்தவைகள் உலகில் என்றும் இருந்துவர வேண்டுமென்றான். வரமும் பெற்றான் அன்றுமுதல் பிரம்மாவும் விஸ்வாமித்ர மாமுனியும் படைத்தவைகள் அடுத்தடுத்து வாழ்ந்துவரல் வழக்காச்சு. எடுத்துக்காட்டு: மயிலுக்கு… Continue reading யெதிரெதிர் உலகங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஸ்ரீலஸ்ரீ / ஞானக்கூத்தன் கவிதைகள்

யாரோ முனிவன் தவமிருந்தான் வரங்கள் பெற்றான் அதன் முடிவில் நீர்மேல் நடக்க தீபட்டால் எரியாதிருக்க என்றிரண்டு ஆற்றின் மேலே அவன் நடந்தான் கொடுக்குத் தீயைச் சந்தனம் போல் உடம்பில் பூசிச் சோதித்தான் மக்கள் அறிந்தார் கும்பிட்டார் மறுநாள் காலை நீராட முனிவன் போனான் ஆற்றுக்கு நீருக்குள்ளே கால்வைக்க முடியாதவனாய்த் திடுக்கிட்டான் கண்ணால் கண்டால் பேராறு காலைப் போட்டால் நடைபாதை சிரித்துக் கொண்டு கண்ணெதிரே ஆறு போச்சு தந்திரமாய் காலைக் குளியல் போயிற்றா கிரியை எல்லாம் போயிற்று வேர்த்துப்… Continue reading ஸ்ரீலஸ்ரீ / ஞானக்கூத்தன் கவிதைகள்

உயர்திரு பாரதியார் / ஞானக்கூத்தன் கவிதைகள்

சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில் பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப் பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார் சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில் சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான் எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான் மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத் துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக் கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும் கலைகின்ற கூட்டத்தின்… Continue reading உயர்திரு பாரதியார் / ஞானக்கூத்தன் கவிதைகள்

அன்று வேறு கிழமை / ஞானக்கூத்தன் கவிதைகள்

நிழலுக்காகப் பாடையின் கீழ் பதுங்கிப் போச்சு நாயொன்று பதுங்கிச் சென்ற நாய்வயிற்றில் கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி காலால் உதைத்தான். நாய் நகர மேற்குக் கோடிப் பிணந்தூக்கி எட்டி உதைத்தான். அது நகர தெற்குக் கோடிப் பிணந்தூக்கி தானும் உதைத்தான். அது விலக வடக்குக் கோடிப் பிணந்தூக்கி முந்தி உதைத்தான். இடக்கால்கள் எட்டா நிலையில் மையத்தில் பதுங்கிப் போச்சு நாய்ஒடுக்கி நான்கு பேரும் இடக்காலை நடுவில் நீட்டப் பெரும்பாடை நழுவித் தெருவில் விழுந்துவிட ஓட்டம் பிடித்து அவர் மீண்டும்… Continue reading அன்று வேறு கிழமை / ஞானக்கூத்தன் கவிதைகள்

மண்ணும் மந்திரியும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

ராமன் கால் பட்ட பின்பு கல்லெல்லாம் பூக்களாச்சாம் அதிசயம் என்ன. எங்கள் அமைச்சர் கால் படுமுன்னேயே என்னென்ன மண்ணுக் காச்சு?

அம்மாவின் பொய்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால் காதறுந்து போகும் என்றாய் தவறுகள் செய்தால் சாமி கண்களைக் குத்தும் என்றாய் தின்பதற் கேதும் கேட்டால் வயிற்றுக்குக் கெடுதல் என்றாய் ஒருமுறை தவிட்டுக்காக வாங்கினேன் உன்னை என்றாய் எத்தனைப் பொய்கள் முன்பு என்னிடம் சொன்னாய் அம்மா அத்தனைப் பொய்கள் முன்பு சொன்ன நீ எதனாலின்று பொய்களை நிறுத்திக் கொண்டாய் தவறு மேல் தவறு செய்யும் ஆற்றல் போய் விட்டதென்றா? எனக்கினி பொய்கள் தேவை இல்லையென் றெண்ணினாயா? அல்லது வயதானோர்க்குத் தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்… Continue reading அம்மாவின் பொய்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு / ஞானக்கூத்தன் கவிதைகள்

‘மாணவர்காள் மனிதர்களின் எலும்புக் கூட்டைப் பார்த்திருக்க மாட்டீர்கள் மன்னார்சாமி ஆணியிலே அதைப் பொருத்து. பயப்படாமல் ஒருவர்பின் னொருவராகப் பார்க்க வேண்டும் ஏணியைப் போல் இருந்திருப்பான். ஆறடிக்குக் குறைவில்லை இது கபாலம் மார்புக்கூடு… போணிசெய்த பெருங்கைகள்… கைகால் மூட்டு பூரான்போல் முதுகெலும்பு… சிரிக்கும் பற்கள்… சுழித்துவிடும் கோபாலன் ஆண்டு தோறும் புதுசு புதுசாய்ப் பார்ப்பான் இல்லையாடா?’ மாணவர்கள் சிரித்தார்கள் விலாவெடிக்க ஒட்டிவைத்தாற் போலிருக்கும் சிரிப்பைக் காட்டி அறைநடுவில் நின்றதந்த எலும்புக்கூடு

கொள்ளிடத்து முதலைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஒன்றிரண்டு நான்கைந்து… பத்துப் பத்தாய்… ஒரு நூறா? ஆயிரமா? கணக்கில் வாரா… கொள்ளிடத்தின் மணல்வெளியில் நடுச்சாமத்தில் கரைமரங்கள் தூக்கத்தில் ஆடும் போதில் ஒன்றிரண்டு நான்கைந்து பத்துப் பத்தாய் ஒரு நூறா? ஆயிரமா? கணக்கில் வாரா… சிறிது பெரிதாய் முதலைக் கூட்டம் சற்றும் அமைதி கலையாமல் அவை பேசிக் கொள்ளும் சில நொடிக்குள் முடிவெடுத்துக் கலையும் முன்னே குறுங்காலால் மணலிலவை எழுதிப் போட்ட மருமமொழித் தீர்மானம் என்ன கூறும்?