கல்லும் கலவையும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

கல்லும் கலவையும் கொண்டு கரணையால் தடவித் தடவி சாவிப் பொத்தல் மாதிரித் தெரியும் ஆட்கள் சிலரால் கட்டப்பட்டாலும் கட்டிடம் இல்லை பாலம். முன்னாளெல்லாம் பாலம் தியானித்திருக்கும் நீருக்கு மேலே இந்நாளெல்லாம் பாலம்… நிலத்திலும் உண்டு அதன் முதுகெலும்பு. ஆதியில் இந்தப் பாலம் தென்னையாய்ப் பனையாய்க் கிடந்ததென்றாலும் போகப் போகப் போக மூங்கிற் சிம்பும் ஆணியும் விரும்பி ஒருவாறாகிப் பிறந்தது பூமியில் ஒருநாள் அதனுடன் பேசும் பொழுது வேலியும் படியும் கம்பமும் ஏணியும் தானே என்றது பாலம் இன்னும்… Continue reading கல்லும் கலவையும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

எங்கெங்கும் போவேன் / ஞானக்கூத்தன் கவிதைகள்

எங்கெங்கும் போவேன் என்ன வேண்டுமென்றாலும் பார்ப்பேன் எங்கெங்கும் போவேன் யாரை வேண்டுமென்றாலும் பார்ப்பேன் காலரைப் பிடித்துக் கொண்டு எங்கெங்கு போனாய் என்று கேட்குமா நியாயம் என்னை.

மூலைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

பூமியிலிருந்து சூரியன் வரைக்கும் அடுக்கிக் கொண்டு போகலாம் உலகில் உள்ள மூலைகளை எல்லாம் கணக்கெடுத்தால். இருந்தாலும் மூலை எல்லோருக்கும் சரிசமமாகக் கிடைப்பது கிடையாது தனக்கொரு மூலை கிடைக்கப் பெறாமல் இங்கும் அங்குமாய்ப் பலபேர் அலைகிறார் அழுக்கானாலும் சரி சிறிதென்றாலும் சரி உண்மையில் எதற்கும் பயனில்லை என்றாலும் சரி மூலை வேண்டும் ஒரு மூலை எல்லா மூலைகளையும் யாரோ பதுக்கி வைத்திருக்க லாமென்றும் பரவலாகச் சிலபேர் கருதுகிறார்கள் இனிமேல் மூலைகள் கிடைக்கும் வழியற்று வெதும்பிப் போனவர்கள் கோணம் வரைந்து… Continue reading மூலைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

அங்கம்மாளின் கவலை / ஞானக்கூத்தன் கவிதைகள்

பலகைக் கதவில் நான்காவதனைக் கஷ்டப்பட்டு விலக்கி எடுக்கையில் அங்கம்மாளின் கண்ணில் நாராயணன் வருவது தெரிந்ததும் அலுத்துக் கொண்டாள் ஊதுவத்தியில் இரண்டைக் கொளுத்திப் பூ கிடைக்காத சாமிப் படத்துக்கும் கல்லாப் பெட்டிக்கும் காட்டிவிட்டு இடத்தில் அமர்ந்தாள் அங்கம்மாள். கடைக்கு நாராயணன் வந்து சேர்ந்தான் சங்கடமான சிரிப்பொன்று காட்டினான். பார்க்காதவள் போல் அவளிருந்தாள் சுருட்டுக்காக அவன் வந்திருந்தான் முதல் வியாபாரத்தில் கடனைச் சொல்ல கூச்சப்பட்டு ஓரமாய் நின்றான் என்ன வென்று அவள் கேட்கவில்லை என்ன வென்று அறிந்திருந்ததால் சைக்கிளில் வந்தான்… Continue reading அங்கம்மாளின் கவலை / ஞானக்கூத்தன் கவிதைகள்

என் சிவனே / ஞானக்கூத்தன் கவிதைகள்

இந்நாள் வரைக்கும் நானமர்ந்தால் சப்திக்காத நாற்காலி எழுந்தால் அமர்ந்தால் ஓசை எழுப்பத் தொடங்கிற்று நீரை நோக்கிக் குனிந்தால் என் பிரதிபலிப்பின் சுமை பொறாமல் அலைகள் விரையும் மறுகரைக்கு. ஒரு ஜீவனுக்கும் என் பொருட்டால் துன்பமில்லாத நாள் மறைந்து ஒவ்வொரடிக்கும் ஒரு ஜீவன் மிதிபட்டுக் கூவக் கண்டேன் என் சிவனே

காக்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்

காக்கையை எனக்குத் தெரியும் யாருக்குத்தான் தெரியாது. ஆனால் இந்தக் காக்கையை எனக்குத் தெரியாது. எனக்கு நேரே ஏதோ என்னிடம் பேச வந்தாற் போலப் பரபரப்பில் அமர்ந்திருக்கும் இந்தக் காக்கை ஊரில் எனது குடும்பத்தினருக்குப் பழக்கமுள்ள காக்கை ஒன்று எங்கள் வீட்டுச் சிறிய கரண்டியை எடுத்துச் சென்று பெரிய கரண்டியைப் பதிலாய் ஒரு நாள் முற்றத்தில் போட்டதாம் இந்தக் காக்கை என்ன செய்யுமோ ? காலும் உடம்பும் கழுத்தின் நிறமும்… அதற்கு நவீன உலகம் பழகிவிட்டது காக்கையின் மூக்கில்… Continue reading காக்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்

அழிவுப் பாதை / ஞானக்கூத்தன் கவிதைகள்

சொல்லப் பட்டது போலில்லை அழிவுப்பாதை அண்மையில் அல்லது சேய்மையில் ஏதோ ஒன்றுக் கேற்ப அஃதிருந்தாலும்: பறவையின் சாதி உடன்வந்தழைக்க காலுக் கடியில் பூமி குழைய நாளையின் வாயில் பெருகிய கானம் வருகையில் இருப்பவர் பெருமையை விரிக்க சொல்லப்பட்டது போலில்லை அழிவுப் பாதை எந்தக் கணமும் கழுத்தில் இறங்க வானவில்லொன்று எதிரே நகரும் தாரகை கடந்த ஒருபெரும் விசும்பில் முடிவின் அருள்முகப் புன்னகை பொலியும்… நடக்கலாம்; இருக்கலாம்; நிற்கலாம்; படுக்கலாம் அனைத்தும் ஒன்றுதான் அழிவுப் பாதையில் முதலடி பதியுமுன்… Continue reading அழிவுப் பாதை / ஞானக்கூத்தன் கவிதைகள்

மழைநாள் பாதை / ஞானக்கூத்தன் கவிதைகள்

மழை நாள்த் திவசம் தாத்தாவுக்குத் தந்தை செய்தது. வீட்டுக் குள்ளே பெரிய காலித் தகர டப்பியில் காற்றின் பேச்சு கண்ணை மூடிக் கொண்டு நடக்கும் பழக்கம் உள்ள நான் ஆசாரத்தை அஞ்சி வீட்டின் பின் பக்கம் வந்தேன் கொல்லைச் சுவரின் புராதன ஈரத்தில் பளபளக்கும் சுவடு வைத்து ஊர்ந்தது நத்தை ஒன்று நத்தைக்குத் தெரியாதா செங்குத்துச் சுவரென்று மீண்டும் ஊர்ந்தது மீண்டும் விழுந்தது திவசச் சோற்றுக்குக் காத்திருக்கும் தேவதைகள் நத்தையைப் பிடித்துதள்ளி விளையாடுகிறார்கள் பொழுது போக இன்றும்… Continue reading மழைநாள் பாதை / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஆகஸ்டு 15 / ஞானக்கூத்தன் கவிதைகள்

இரண்டு விரல்களுக்கிடையில் எச்சிலைக் காறித் துப்பிய ஒணசல் மனிதன் நுகத்தடியில் தன்னை மீண்டும் பொருத்திக் கொள்கிறான் சிறிய காற்றுக்கும் பெரிதும் அசைந்தன சிறு மரங்கள் உலோகத் தட்டில் உணவை முடித்து வீட்டுக்குள்ளேயே கையைக் கழுவி மதியத் தூக்கத்தில் சிலபேர் தங்களை மறந்தனர் வேம்பில் பழக் குலையை எட்டிப் பிடித்துக் காக்கைகள் ஒற்றைப் பழத்தை ஈர்த்துச் சுவைத்தன இடித்துக் கட்டப்படும் வீடுகள் முக்கோண வட்டச் சிதறலாய்க் கவிழ்ந்து மீண்டும் எழுந்தன விண்ணில் குறுக்கு நெடுக்கு வளைவில் நெடுக்கு நெடுக்கில்… Continue reading ஆகஸ்டு 15 / ஞானக்கூத்தன் கவிதைகள்

என் உலகம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

என் உலகம் சிறியது அங்கே மூங்கில் ஆல் ஆன வேலி ஒன்றும் அந்த வேலிஇல் இருக்கும் ஓணான் ஒன்றும் உண்டு ; குச்சிப் பூச்சியும் ஒன்றுண்டதிலே வீட்டுக்கும் இல்லை; வீட்டுப் பக்கம் வளர்ந்து கனியாத மரத்துக்கும் இல்லை வேலி வேலியைப் போட்டதும் நானில்லை மரத்தைப் பற்றி கூறினேன் அல்லவா? இன்னும் ஒன்றைச் சொல்லணும் மரத்தின் கிளையில் தொங்கும் கூடொன்றுண்டு. பழங்கூடு இத்தனை சொன்ன பின் எனது உலகம் எப்படிச் சிறிய தென்று யாரேனும் என்னைக் கேட்கக் கூடுமோ… Continue reading என் உலகம் / ஞானக்கூத்தன் கவிதைகள்