ஒரு ரோஜா / தபு ஷங்கர் கவிதைகள்

என்னிடம் பரிசுப் பொருளாக
ஒரு ரோஜாவை கேட்கிறது
உன் மௌனம்

ஆனால்
உன்னை காதலிக்க ஆரம்பித்தபோதே
பூக்களயும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டது மனசு

எப்படி பறிப்பேன் ஒரு ரோஜாவை