முன்னிற்க மணநாளில் பவ்யமாய் விடை பெறுகிறாள் மணப்பெண் அவளது பர்தாவுக்குள் முகம் புதைத்தபடி மலர்களின் வாசனையோடிணைந்த புணர்ச்சியைப் போதிக்கிறாள் தமக்கை. தானே அறிந்திராத தடித்த புத்தகத்தின் பக்கங்களை துரிதகதியில் புரட்டுகிறாள் எந்த நாளில் புணர்ந்து கருவைத் தள்ளிவைக்கலாம் எனவும் ஹராமாக்கப்பட்டதெனவும் கூடவே புணர்ச்சிக்குப் பிந்தைய சுத்த பத்தங்களையும் தன் குள்ள உருவத்திற்கேற்ற குற்றக் கண்களில் குறுக்கிடுகிற வாழ்வின் சுகவீனங்களையும் நைந்து போன புணர்ச்சியின் வெற்றுச் சூத்திரங்களையும் தனக்குள்ளாக ஒளித்தபடி அவ்வப்போது வெட்கத்தில் துவண்டு விழுகிற வார்த்தைகளை சிறுமியின்… Continue reading மாலை நேரக்காற்று / சல்மா கவிதைகள்
சுவாசம் / சல்மா கவிதைகள்
எப்பொழுதும் எனது எல்லாக் காரியங்களும் நான் இல்லாத போதே நிகழ்ந்துவிடுகின்றனே ஒவ்வொரு முறையும் எதையும் ஸ்பரிசித்து உணர்வதற்குள் அவை நிகழ்ந்து முடிகின்றன நான் முயன்றுதான் பார்க்கிறேன் என்றாவது எதுவாயினும் நிகழ்வதற்கு முன்பே நான் அதைத் தொடுவதற்கு ஆயினும் என் முயற்சிகளைத் தோற்கடித்து எனக்காக நிகழும் அவை நானில்லாமலேயே நடந்துவிடுகின்றன மலர்கள் மனிதர்களுடனான உலகம் மிகப் பெரியது என்னை விட நான் அனுமதிக்கத்தான் வேண்டுமா என் சுவாசம் நானின்றி நிகழ்வதை
விலகிப் போகும் வாழ்க்கை / சல்மா கவிதைகள்
இன்றும் ஒருவரை என்னை விட்டு வழியனுப்ப நேர்கிறது நேற்றும் அதற்கு முன்பும் கூட நீங்கள் நினைப்பது போல இது வாசல் வரை சென்று வெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல ஒவ்வொரு வழியனுப்புதலும் வயதை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வை வழியனுப்புதல் போல இதயத்தைக் கனக்க வைக்கிறது இப்படியே நம் நண்பர்களை நினைவூகளை சிந்தனைகளை தினமும் ஏதேனும் ஒன்றை வழியனுப்பிக்கொண்டிருப்பதை நீங்கள் யாரும் ஆழமாய் அறிவதில்லை அதனாலேயே உங்களால் சிரித்த முகத்துடன் இருக்கவூம் பத்திரிகை படிக்கவும் முடிகிறது நானோ பயணத்தில்… Continue reading விலகிப் போகும் வாழ்க்கை / சல்மா கவிதைகள்
பட வீட்டின் தனிமை / சல்மா கவிதைகள்
சுவரில் தொங்கும் வரைபட மர நிழலும் ஒற்றைக் குடிசையும் கொஞ்சம் பூக்களும் ஒரு வானமும். கண்கள் பூக்கள் மீதிருக்க மனம் தேடிப் போகிறது வரைபட வீட்டின் தனிமையை.
ஒரு நாள் / லீனா மணிமேகலை கவிதைகள்
ஒரு நாள் என் தோலைக் கழற்றி வீசினேன் கூந்தலை உரித்து எறிந்தேன் துவாரங்களில் ரத்தம் ஒழுகும் மொழுக்கைப் பெண்ணென காதல் கொள்ள அழைத்தேன் காதலர்கள் வந்தார்கள் கரிய விழிகள் கொணட அவர்கள் நெய்தலின் நுட்பம் கூடிய சிலந்திகள் குருதியை நூலாக்கித் திரித்து செந்நிறத்தின் ஊடுபாவிய வலையை எட்டுக் கால்களில் விரித்தார்கள் அந்தியில் வந்த சூரியன் சிவப்பில் விழுந்தான் அப்பொழுதும் சொன்னேன் நான் பூரணமாய் காதலிக்கப்பட்டவள் மறுபடி நானே உலகின் அழகிய முதல் பெண்
Blind Date / லீனா மணிமேகலை கவிதைகள்
Blind Date என்ற வார்த்தையை கூகிள் மொழிபெயர்ப்பில் இட்டுப்பார்த்தேன் குருட்டு தேதி என வந்தது இக்கவிதைக்கு குருட்டு தேதி எனப் பெயரிடுகிறேன் குருட்டு தேதி ஒரு அநாதியான நாளில் முற்றிலும் புதியவனைத் தேர்ந்தெடுத்தேன். நேற்றோ. நாளையோ இல்லாத இன்றானவன். அறிதல் இல்லாத அவன் தொடுதலில் கேள்விகளும் இல்லை பெயர், ஊர், வயது, முகவரி, படிப்பு, வேலை, சாதி,தந்தை பெயர் பரிமாறிக்கொண்ட முத்தங்களில் தகவல்கள் பொதிந்திருக்கவில்லை கொள்தலின் கைவிடுதலின் பதற்றங்கள் இல்லாத கலவி அவனை வெறும் ஆணாக்கி என்னை… Continue reading Blind Date / லீனா மணிமேகலை கவிதைகள்
பாவனைகள் / லீனா மணிமேகலை கவிதைகள்
மதுக்கோப்பைக்கும் உதடுகளுக்கும் இடையே விழுந்த கண்ணீர்த் துளியில் அன்பை யாசித்து நிற்கும் என் பிரதிமையை கண்டதாக அவன் சத்தியம் செய்தான். அது என் கண்ணீரை மேலும் பெருக்கியது நான் எதுவும் சொல்லாமலேயே எல்லாம் விளங்குகிறது என்ற அவனை அப்போதைக்கு பிடித்திருந்தது அவன் கொண்டு வந்த கோப்பையால் மதுவும் தனக்கொரு துணையை தேடிக்கொண்டது வாழ்க்கையின் போக்கில் போய்விடுவது நல்லது என்றான் தலை நிமிர்ந்துப் பார்த்தால் தெரியும் காட்சிகளை மட்டுமே நம்புவது சிறந்தது என்றும் சொன்னான் என் தலையை ஆதுரமாக… Continue reading பாவனைகள் / லீனா மணிமேகலை கவிதைகள்
ஒரு மாலைப்பொழுது / லீனா மணிமேகலை கவிதைகள்
அன்பு என்னோடு கஞ்சா அடித்தது பரிவாக மிகப் பரிவாக நெஞ்சு நிறைய புகையை நிரப்ப சொன்னது கரிக்கிறதா எனக் கேட்டது ஆமாம் என்றேன் இல்லை என்று பொய் செல்வதில் உனக்கென்ன பிரச்சினை என்றது எரியும் மணத்தில் யார் மணக்கிறார்கள் அடுத்த கேள்வி அவனா மௌனம் இவனா மௌனம் அவளா மௌனம் நான் என்றேன் அமர்ந்த கனலை ஊதி ஊதி பெருக்கிய கணத்தில் கண் சிமிட்டி விசுவாசத்தை கைவிடு என்றது என் கையை வெட்டிவிட்டது போல இருந்தது. காயும்… Continue reading ஒரு மாலைப்பொழுது / லீனா மணிமேகலை கவிதைகள்
வேடிக்கை / லீனா மணிமேகலை கவிதைகள்
நீ உன் சொற்களை என்னை வல்லுறவு செய்ய ஏவினாய் மலம் மூத்திரம் கழுவப்படாத கழிப்பறை அழுகல் அலறல் செத்த எலி வீச்சம் நிணம் ஊசிய மீன் வலி உதிரம் கறை இருள் பிடுங்கி எறியப்பட்ட உன் விதைப்பைகள் என்னிடமும் சொற்கள் இருந்தன அவர்களிடமும் சொற்கள் இருந்தன அவரவர் விதைப்பைகளின் பாதுகாப்பை சரி பார்த்துக் கொண்டு வாளா விருந்தன
பசி / லீனா மணிமேகலை கவிதைகள்
இறுதியில் காவல் அதிகாரி என் கவிதையைப் பிடித்துக் கொண்டு சென்றார் விசாரணையின் போது அவர் கண்களைக் கட்டிக் கொண்டிருந்தார் ஆடையில்லாத என் கவிதையைக் காண அவருக்கு அச்சமாக இருந்ததாம். குற்றங்கள் விளைவிப்பதே தன் தலையாயப் பணி என்பதை என் கவிதை ஒத்துக் கொண்டதால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை, பிணை இல்லையென்று ஆணையிட்ட நீதிபதி தன் கண்களோடு காதுகளையும் பொத்திக் கொண்டிருந்தார் என் கவிதை பேசிய சொற்களின் புதிய அர்த்தங்கள் அவரை திடுக்கிடச் செய்தனவாம் அபராதம் கட்ட பணம்… Continue reading பசி / லீனா மணிமேகலை கவிதைகள்