Leena Manimegalai Kavithaigal Archive

ஒரு நாள் / லீனா மணிமேகலை கவிதைகள்

ஒரு நாள் என் தோலைக் கழற்றி வீசினேன் கூந்தலை உரித்து எறிந்தேன் துவாரங்களில் ரத்தம் ஒழுகும் மொழுக்கைப் பெண்ணென காதல் கொள்ள அழைத்தேன் காதலர்கள் வந்தார்கள் கரிய விழிகள் கொணட அவர்கள் நெய்தலின் நுட்பம் கூடிய சிலந்திகள் குருதியை நூலாக்கித் திரித்து செந்நிறத்தின் ஊடுபாவிய வலையை எட்டுக் கால்களில் விரித்தார்கள் அந்தியில் வந்த சூரியன் சிவப்பில் …

Blind Date / லீனா மணிமேகலை கவிதைகள்

Blind Date என்ற வார்த்தையை கூகிள் மொழிபெயர்ப்பில் இட்டுப்பார்த்தேன் குருட்டு தேதி என வந்தது இக்கவிதைக்கு குருட்டு தேதி எனப் பெயரிடுகிறேன் குருட்டு தேதி ஒரு அநாதியான நாளில் முற்றிலும் புதியவனைத் தேர்ந்தெடுத்தேன். நேற்றோ. நாளையோ இல்லாத இன்றானவன். அறிதல் இல்லாத அவன் தொடுதலில் கேள்விகளும் இல்லை பெயர், ஊர், வயது, முகவரி, படிப்பு, வேலை, …

பாவனைகள் / லீனா மணிமேகலை கவிதைகள்

மதுக்கோப்பைக்கும் உதடுகளுக்கும் இடையே விழுந்த கண்ணீர்த் துளியில் அன்பை யாசித்து நிற்கும் என் பிரதிமையை கண்டதாக அவன் சத்தியம் செய்தான். அது என் கண்ணீரை மேலும் பெருக்கியது நான் எதுவும் சொல்லாமலேயே எல்லாம் விளங்குகிறது என்ற அவனை அப்போதைக்கு பிடித்திருந்தது அவன் கொண்டு வந்த கோப்பையால் மதுவும் தனக்கொரு துணையை தேடிக்கொண்டது வாழ்க்கையின் போக்கில் போய்விடுவது …

ஒரு மாலைப்பொழுது / லீனா மணிமேகலை கவிதைகள்

அன்பு என்னோடு கஞ்சா அடித்தது பரிவாக மிகப் பரிவாக நெஞ்சு நிறைய புகையை நிரப்ப சொன்னது கரிக்கிறதா எனக் கேட்டது ஆமாம் என்றேன் இல்லை என்று பொய் செல்வதில் உனக்கென்ன பிரச்சினை என்றது எரியும் மணத்தில் யார் மணக்கிறார்கள் அடுத்த கேள்வி அவனா மௌனம் இவனா மௌனம் அவளா மௌனம் நான் என்றேன் அமர்ந்த கனலை …

வேடிக்கை / லீனா மணிமேகலை கவிதைகள்

நீ உன் சொற்களை என்னை வல்லுறவு செய்ய ஏவினாய் மலம் மூத்திரம் கழுவப்படாத கழிப்பறை அழுகல் அலறல் செத்த எலி வீச்சம் நிணம் ஊசிய மீன் வலி உதிரம் கறை இருள் பிடுங்கி எறியப்பட்ட உன் விதைப்பைகள் என்னிடமும் சொற்கள் இருந்தன அவர்களிடமும் சொற்கள் இருந்தன அவரவர் விதைப்பைகளின் பாதுகாப்பை சரி பார்த்துக் கொண்டு வாளா …

பசி / லீனா மணிமேகலை கவிதைகள்

இறுதியில் காவல் அதிகாரி என் கவிதையைப் பிடித்துக் கொண்டு சென்றார் விசாரணையின் போது அவர் கண்களைக் கட்டிக் கொண்டிருந்தார் ஆடையில்லாத என் கவிதையைக் காண அவருக்கு அச்சமாக இருந்ததாம். குற்றங்கள் விளைவிப்பதே தன் தலையாயப் பணி என்பதை என் கவிதை ஒத்துக் கொண்டதால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை, பிணை இல்லையென்று ஆணையிட்ட நீதிபதி தன் கண்களோடு …

புள்ளிவிவரம் / லீனா மணிமேகலை கவிதைகள்

ஒவ்வொரு மூன்று நிமிடமும் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் ஒவ்வொரு பத்து நிமிடமும் ஒரு பெண் மானபங்கம் ஒரு பெண் சிசுக்கொலை ஒரு பெண் துன்புறுத்தப்படுதல் மூன்று எங்கே ஐந்து ஏன் பத்து எப்போது கைகளுக்கு ஏன் பத்து விரல்கள் கடந்தேன் சாலை மிக நீளம் ஒரு சூயிங் கம்மை விட கடைக்கார கிழவன் தன் மனைவியை …