கணக்குப் போட்டான் விடை பிறர்க்குத் தெரியாதிருக்க அவன் மறைத்தான் ஒருத்தன் பார்த்தால் அவனுக்குக் கண்ணிரண்டும் முஷ்டிகளாகும் பலகைகள் எல்லாம் கீழ்வைத்தார் இடைவேளைக்கும் உணவுக்கும் பள்ளிக்கூட மணி அசைய பலகை அடுக்கப் படுகிறது ஒன்றின் மேல் ஒன்றாக சரியும் தப்பும் சரியாக அவனைப் பார்த்தான் அவன் சரியாய்ச் செய்தான் என்றே கருதியதால் இவனைப் பார்த்தான் இவன் சரியாய்ச் செய்தான் என்றே கருதியதால் ஆமாம் என்று நினைத்தேன் உனதென்றாலும் எனதென் றாலும் என்ன நம்விடைகள் இன்னொன்றுக்கு பொருந்தணுமே.
தணல் / ஞானக்கூத்தன் கவிதைகள்
தெரியுமா மாமி இந்தப் பிராமணன் கதையை? வெட்கக் கேடுதான் சொன்னால் போங்கள் இத்தனை வருஷமாக இருக்கலை அநியாயங்கள் மனசொரு சமயம் வேகும். அமைதியாய் இருந்தேன் தானே ஒருவழி வருவாரென்று ராகுவின் பார்வை பட்டால் பீஷ்மனும் தாசி கேட்பான். ஜாதகம் பார்த்தேன் நாலு மந்திரம் செய்தேன் ஆனால் யாதொரு பலனும் இல்லை. தலைக்குமேல் போவதற்குள் தடுக்கலை யென்றால் மானம் என்னதும் சேர்ந்து போகும். காதிலே விழுந்ததெல்லாம் புரளியாம். எனக்கு மட்டும் நிஜமெனத் தெரியும் மாமி. ‘நேற்றுநான் உங்களோடு நின்றதை… Continue reading தணல் / ஞானக்கூத்தன் கவிதைகள்
காலவழுவமைதி / ஞானக்கூத்தன் கவிதைகள்
“தலைவரார்களேங்… தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம். தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த் தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம் கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம் காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்” ‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’ “வளமான தாமிழர்கள் வாட லாமா? கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா? தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக் கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய் நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர் தலைவரார்களேங் பொதுமாக்களேங் நானின்னும் யிருகூட்டம் பேசயிருப்பதால்… Continue reading காலவழுவமைதி / ஞானக்கூத்தன் கவிதைகள்
நாய் / ஞானக்கூத்தன் கவிதைகள்
காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான் எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான் ஆள் நடவாத தெருவில் இரண்டு நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும் அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன நகர நாய்கள் குரைப்பது கருதிச் சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக் கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில் கடைசி நாயை மறித்துக் காரணம் கேட்டால் என்னத்தைக்… Continue reading நாய் / ஞானக்கூத்தன் கவிதைகள்
விட்டுப்போன நரி / ஞானக்கூத்தன் கவிதைகள்
குதிரையாகாமல் விட்டுப் போனதில் ஒருவன் சாமீ குதிரையாகாமல் விட்டுப் போனதில் ஒருவன் சாமீ மேற்படிக் குரலைக் கேட்டார் மாதொரு பாகர். குற்றம் ஏற்பட வியந்தார். தேவி ஏளனம் செய்தாள் சற்று “வாதவூரடிகட்காக நரிகளைத் தேர்ந்த போது நீதியோ என்னை மட்டும் விலக்கிய செய்கை சாமீ!” திருவருட் திட்டம் பொய்த்த தற்கொரு ஊளைச் சான்றாம் நரி எதிர் உதித்துக் கீற்று நிலாத் திகழ் ஈசர் சொன்னார்: நரிகளைப் பரிகளாக்கும் திருவிளையாடல் முற்றும் விடுபட்ட பேரை நாங்கள் கவனிக்க மாட்டோம்… Continue reading விட்டுப்போன நரி / ஞானக்கூத்தன் கவிதைகள்
கீழ்வெண்மணி / ஞானக்கூத்தன் கவிதைகள்
மல்லாந்த மண்ணின் கர்ப்ப வயிறெனத் தெரிந்த கீற்றுக் குடிசைகள் சாம்பற் காடாய்ப் போயின புகையோடு விடிந்த போதில் ஊர்க்காரர் திரண்டு வந்தார் குருவிகள் இவைகள் என்றார் குழந்தைகள் இவைகள் என்றார் பெண்களோ இவைகள்? காலி கன்றுகள் இவைகள் என்றார் இரவிலே பொசுக்கப்பட்ட அனைத்துக்கும் அஸ்தி கண்டார் நாகரிகம் ஒன்று நீங்க
ஆவதும் என்னாலே / ஞானக்கூத்தன் கவிதைகள்
முதலிலிவர் போட்டியிட்டார் ஜாமீன்போச்சு மறுபடியும் இவர் நின்றார் எவனெல்லாமோ உதவுவதாய் வாக்களித்துக் கைவிரிச்சான் கடைசிநாள் நான்போனேன் சுவரிலென்பேர் கண்டதனால் முன்கூட்டி மக்கள் வெள்ளம் கைதட்டல் நானெழுந்து பேசும் போது ரெண்டுமணி. எதிரிகளைப் பிட்டுவைச்சேன் பத்தாய்ரம் வாக்கதிகம். இவர் ஜெயித்தார்.
உறவு / ஞானக்கூத்தன் கவிதைகள்
ஈரக் கைகளைப் புடவையில் துடைத்தவா றெதிர் வீட்டம்மாள் எட்டிப் பார்த்தாள் அம்மா தபால். அஞ்சலட்டையை நொடியில் படித்ததும் எரவாணத்தில் செருகிப் போனாள் எரவாணத்தில் செருகிய கடிதம் வருத்தப்பட்டு மூக்குக் கறுத்ததே.
யோஜனை / ஞானக்கூத்தன் கவிதைகள்
அம்மிக்கல் குழவிக்கல் செதுக்கித் தள்ளும் ஒரு சிற்பக் கூடத்தில் மைல்கல் ஒன்று வான் பார்த்துக் காட்டிற்று நாற்பதென்று.
போராட்டம் / ஞானக்கூத்தன் கவிதைகள்
கைவசமிருந்த காதற் கடிதங்கள் எரித்தேன் வாசல்க் கதவுமுன் குவித்துப் போட்டு காகிதம் எரிந்து கூந்தல் சுருளெனக் காற்றில் ஏறி அறைக்குள்ளே மீளப் பார்க்கக் கதவினைத் தாழ்ப்பாளிட்டேன் வெளிப்புறத் தாழ்ப்பாள் முன்னே கரிச்சுருள் கூட்டம் போட்டுக் குதித்தது அறைக்குள் போக காகிதம் கரியானாலும் வெறுமனே விடுமா காதல்.