எல்லாமும் முதலில் பாழாய் இருந்தது / ஞானக்கூத்தன் கவிதைகள்

எல்லாமும் முதலில் பாழாய் இருந்தது கடவுள் சொன்னார் தோன்றுக தெருக்கள் என்று எழுந்தன தெருக்கள் பாழில் வைத்தன நடனக் காலை ஆடின தழுவிக் கொண்டு இசைத்தன மூங்கில்க் கீதம் ஊசிகள் சூர்யனாகித் திரும்பின என்றாற் போல எங்கணும் தெருக்கள் பாடிப் பறந்தன. தெருக்கள் தாத்தாப் பூச்சியாய்ப் பாழில் எங்கும் திரிந்தன இடங்கள் தேடி எல்லாமும் முதலில் பாழாய் இருந்தது கடவுள் சொன்னார் தோன்றுக தெருக்கள் என்று கோடுகள் முதுகில் ரெண்டு சுமந்திடும் அணிலைப் போல போகிறேன் முதுகில்… Continue reading எல்லாமும் முதலில் பாழாய் இருந்தது / ஞானக்கூத்தன் கவிதைகள்

மீண்டும் அவர்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மழைபொழியக் கடமைப் படாதவை எனினும் அழகாய் இருந்தன காலை மேகங்கள். பறக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன் எழும்பினேன் வானில் சிறகை விரித்து புனித கோபுரக் கலசங்கள் சில பறக்கும் எனது கால்களுக்கிடையில் பூமியில். சலனமற்ற மரங்களின் முடிப்பந்தின் ஊடே ஒளிந்திருந்து அவர்கள் சுட்டார்கள் எங்கும் அமராத அந்த பறவை அதோ என்று புகைக் கோலத்தை வானில் வரைந்து நான் விழும்போது அவர்கள் சென்றார்கள் அன்றைய நாளின் பூரணம் கண்டு. எங்கும் அமராத பறவை ஒன்றை உங்களப்பா சுட்டு… Continue reading மீண்டும் அவர்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மண்டையைத் திறந்தால் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மண்டையைத் திறந்தால் மூளைக் களிமண்ணாய்க் காணும் என்று யாரோ சொன்னார். கண்ணால் பார்த்தால் தவிர நான் எதையும் நம்புவதில்லை. என் தலையைத் திறந்து பார்த்தேன் திறந்த இஸ்திரிப் பெட்டியில் போல் மின் சாரம் பாய்ந்திருக்கக் கண்டேன்.

வந்தனம் என்றான் ஒருவன் / ஞானக்கூத்தன் கவிதைகள்

வந்தனம் என்றான் ஒருவன் இளங்காலைக் கதிரைக் கண்டு நன்றென்றான் ஒருவன் இரவில் முகிழ்கிற நிலவைக் கண்டு அவன் நின்றான் கால்கள் ஊன்றி ஒரு போதில் வருதல் மற்றப் போதிலே மறைதல் என்னும் இயல் பில்லா முகிலைப் பார்த்து.

எங்கள் வீட்டு பீரோ / ஞானக்கூத்தன் கவிதைகள்

எங்கள் வீட்டில் ஒரு பீரோ ஒரு காலத்தில் வாங்கியது. வீட்டுக் குள்ளே வந்தவழி எவ்வாறென்றும் தெரியாது. பட்டுத்துணிகள் புத்தகங்கள் உள்ளே வைத்துப் பூட்டியது. உயரம் நல்ல ஆளுயரம் கனத்தைப் பார்த்தால் ஆனைக்கனம். வீட்டுக்குள்ளே இரண்டிடங்கள் கூடம் மற்றும் தாழ்வாரம் இரண்டில் ஒன்றை மாற்றிடமாய் வைத்துக் கொள்ளும் பழம்பீரோ, குப்பை அகற்றும் பொருட்டாக ஆளை அழைத்துப் பேர்த்தெடுத்து இன்னோரிடமாய் முற்றத்தில் கொண்டு வைத்தால் அங்கிருந்து வானைக் கொஞ்சம் பார்க்கிறது காற்றில் கொஞ்சம் உணர்கிறது எடுக்கப் போனால் கால்விரல்கள் ரத்தம்… Continue reading எங்கள் வீட்டு பீரோ / ஞானக்கூத்தன் கவிதைகள்

எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன் / ஞானக்கூத்தன் கவிதைகள்

எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன் என்றான் ஒருவன் இல்லை என்றேன் அவன் சொன்னான் என்னை இன்று உண்பித்தால் உனக்குச் சில நாள் உழைப்பேன் ஒன்றும் வேண்டாம் போ என்றேன் இன்னும் சொன்னான். ‘என்னைப் பார் கண்டதுண்டா நீ முன்பு என்னைப் போல் சப்பட்டை யான மனிதன்’ நானும் பார்த்தேன் அதுசரி தான் ‘எனக்குக் கொஞ்சம் சோற்றைப்போடு பலவிதமாகப் பயன் படுவேன் கதவில்லாத உன் குளியலறைக்கு மறைப்பு போல நான் இருப்பேன் வேண்டுமென்றால் என்னைக் கிடத்திப் பொருள்கள் உலர்த்தலாம்… Continue reading எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன் / ஞானக்கூத்தன் கவிதைகள்

யாரோ ஒருத்தர் தலையிலே / ஞானக்கூத்தன் கவிதைகள்

நாங்கள் நாலு பேர் எலிகளைத் தின்றோம் ஒரு காலத்தில் நாங்களே எலிகளாய்ப் போகலாமென்று எலிகளாய்ப் போனபின் நெல்களைத் தின்கிறோம் ஒரு காலத்தில் நாங்களே நெல்களாய்ப் போகலாமென்று. நெல்களாய் நாங்கள் ஆனதன் பின்பு நாங்கள் நாலுபேர் மண்ணைத் தின்கிறோம் ஒரு காலத்தில் நாங்களே மண்ணாய்ப் போகலாமென்று

பதில் / ஞானக்கூத்தன் கவிதைகள்

தெருக்களில் திரிந்தேன். வானக் காட்டிலே மாலைப்போதின் குழப்பத்தில் சிக்கிக்கொண்டேன். நான்நின்றால் தானும் நின்று நான் சென்றால் தானும் மேலே தொடர்கிற நிலவைப் பார்த்தேன். வானத்தில் வர்ணக்கோலம் விசிறிடத் திகைத்த மீனைப் போய்க் கொத்தும் பறவை போல ஒரு கேள்வி மனசுக்குள்ளே. என்னடா செய்வாய் தம்பி பெரியவன் ஆனபின்பு என்றொரு கேள்வி கேட்டார் இளமையில் சிலபே ரென்னை, அன்று நான் அதற்குச் சொன்ன பதிலொன்றும் நினைவில் இல்லை இன்று நான் என்ன சொல்வேன்? அதைக் கேட்க அவர்கள் இல்லை.

ஞாதுரு / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஓவியம் வரைந்தேன் ஒன்று அதிலொரு மனிதன் வந்தான் அவன் முகம் மேசை மீது படிந்திட இமைகளின் ரோமம் நீண்டு நெற்றிமேல் விரைக்கக் கண்ணை மூடினேன் வெறுப்புக் கொண்டு அவன் என்னைக் கேட்டான். கண்களை எதற்கிவ்வாறு மூடினாய்? உன்னால் பார்க்க முடிந்ததா? என்றேன் இப்போ நான் உன்னைப் பார்த்துக் கொண்டு அல்லவா இருந்தேன் என்றான் மடிப்புகள் பலவாறாகப் பண்ணினேன் அவனைக் கண்கள் வெளிப்படக் கூர்மையாக்கிச் சென்றுபார் மேலே என்றேன் புலப்படாக் காக்கை தூக்கிச் செல்கின்ற கரண்டியைப் போல் ஏகினான்… Continue reading ஞாதுரு / ஞானக்கூத்தன் கவிதைகள்

நம்பிக்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்

பசித்த வயிற்றுடன் சுற்றிலும் பார்த்தான் பார்வையில் பட்டன பற்பல தாவரம் ஒன்று ஆல். ஒன்று அரசு ஒன்று வேம்பு… அவனுக்கு வேண்டிய ஒன்றோ நாற்றங்காலாய் இன்னமும் இருந்தது.