சந்தேகத்துடனே தொட்டுப்பார்த்தேன் பையிலிருந்த பேனாவைக் காணோம் வழியில் எங்கோ விழுந்து விட்டது நீண்ட நாட்களாய்ப் பழகிய பேனா எங்கே விழுந்ததோ யாரெடுத்தாரோ ஒருகணம் நினைத்தேன் வழியில் அதன்மேல் வண்டி ஒன்று ஏறிவிட்டதாய். எண்ணிப் பார்த்ததும் உடம்பு நடுங்கிற்று வண்டி எதுவும் ஏறியிராது. பள்ளிக்கூடத்துப் பிள்ளையின் கையில் கிடைத்திருக்கலாமென்று எண்ணிக் கொண்டேன். முள்ளைக் கழற்றிக் கழுத்தைத் திருகிப் பல்லால் கடித்துத் தரையில் எழுதி அந்தப் பையன் பார்ப்பதாய் எண்ணினேன் அதற்கும் நடுங்கி எண்ணத்தை மாற்றினேன் எவனோ ஒருவன் கிழவன்… Continue reading இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும் / ஞானக்கூத்தன் கவிதைகள்
குப்பைத் துணை / ஞானக்கூத்தன் கவிதைகள்
அவருடன் காகிதக் குப்பைச் சுருளொன்று அவருக் கிணையாய் விரைந்து வந்தது அவரால் அழைத்து வரப்படுவதைப் போல் அன்னார் என்னைக் கடந்து சென்றார் அதுவும் அவரைத் தொடர்ந்து சென்றது என்னைப் பார்த்துக் கண் சிமிட்டி.
மழையில் / ஞானக்கூத்தன் கவிதைகள்
மழையில் நனைந்த கந்தல்த் துணி மீது பாத சாரியின் செருப்புக் கால் ஊன்றி அகன்றது. கந்தல்த் துணியின் தண்ணீர் பிழியப்பட்டு ஊர்ந்ததைக் கண்டேன் நெஞ்சம் நெகிழ்ந்தது. உவமை ஒன்று துன்புற்ற தென்று.
பிரிவு / ஞானக்கூத்தன் கவிதைகள்
ஊர்புகழும் மார்கழியை ஏன் டிஸம்பர் கைவிட்டுப் போகிறது.
கடற்கரையில் சில மரங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்
கடற் கரையில் சில மரங்க ளென்று நான் கவிதை எழுத நினைத்திருந் தேன். எதையும் நி னைத்ததும் மு டிக்க வேண் டும். மு டிக்க வில்லை யென்றால் ஏ தும் மாற் றம் ஆ கிவிடும். அம் ம ரத்திலொன்றை இன்று நி லைகு லையச் சாய்த்து தொடர்ந்து பி ளந்து தொ டர்ந்து வா ளாலறுத் துத் துண் டுதுண் டுதுண் டுதுண் டாக்கிக் கி ளைமு றித்துப் பூ சிதறி இ லை… Continue reading கடற்கரையில் சில மரங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்
ஓட்டை ரூவா / ஞானக்கூத்தன் கவிதைகள்
நடத்துநர் பக்கம் நீட்டிய பொழுதே நெஞ்சம் சற்று தடதடத்தது. இடமும் வலமும் தலையை அசைத்துத் திருப்பித் தந்தார் இரண்டு ரூவாயை. வாங்கிக் கொண்டேன் வீதிப் பக்கம் விரித்துப் பார்த்தேன். நடுவில் ஓட்டை… ஓட்டை வழியாய்ப் பார்த்தேன். கட்டிடங்கள் ஓடிச் சென்றன விரைவாய். அக்குளைக் காட்டிப் பரத நாட்டியம் ஆடும் ஒருவனின் வண்ணச் சித்திரம் இசைக் கேடான இடத்தில் மசியால் தடவப் பட்ட ஒருத்தியின் படமும் தலைவரின் படங்கள் கோஷங்கள் சென்றன. ரூவாய்த் தாளை மடித்துப் பைக்குள் வருத்தத்தோடு… Continue reading ஓட்டை ரூவா / ஞானக்கூத்தன் கவிதைகள்
சொல் / ஞானக்கூத்தன் கவிதைகள்
எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளியில் சொல்லும் பழக்கம் எனக்கு நண்பன் ஒருவனோ நேரெதிர் இதற்கு ஒன்றையும் சொல்ல மாட்டான் எதற்கும் மௌனமாய் இருப்பதே அவன் வழியாகும் பலரும் சொன்னோம் ‘சொல்லப்படுதலே என்றும் சிறந்தது’ அதற்குப் பிறகும் அவன் சொல்லவில்லை. நாங்கள் வியந்தோம். இறக்கும் பொழுதும் சொல்ல மாட்டானா ஒருநாள் அவனும் இறந்தான் கட்டைப் புகையிலை போல அவன் எரிந்ததைப் பார்த்துத் திரும்பும் பொழுது தெருவில் வெயிலில் சேவல் கூவிற்று ஒருமுறை விறைத்து. வழக்கம் போல நான்… Continue reading சொல் / ஞானக்கூத்தன் கவிதைகள்
என்ன மாதிரி / ஞானக்கூத்தன் கவிதைகள்
என்னை நோக்கி ஒருவர் வந்தார் எதையோ கேட்கப் போவது போல கடையா? வீடா? கூடமா? கோயிலா? என்ன கேட்கப் போகிறாரென்று எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில் அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம் ஒன்றும் கேளாமல் சென்றார். என்ன மாதிரி உலகம் பார் இது.
காட்சி / ஞானக்கூத்தன் கவிதைகள்
வரப்பு காக்கிப் பயிர் கம்பி குத்தி நெட்டைக் கம்பம் கேடயம் வாள் குறுக்கில் விரையும் பறவை உதைக்கும் சப்தம் சப்தத்தில் பூமி ஒரு மீசை பூசப்பட்ட வானம் நகராத புரவி நகர்ந்து போன பகை நெல்லுப்பயிர் கள்ளு குடி குளத்துப்படிக் கட்டில் வெட்டுப் புண்ணில் சொட்டு ஸ்வஸ்தி ஸ்ரீ ராஜாதி ராஜர்க்கு யாண்டு… யாண்டு? அல்லிப் பூவில் ரத்தக கறை சூரியனின் சேப்புத் தலை தோப்பு தெம்மாங்கு தலை முழுகிய தண்ணீர் அலை இடி அலை இடி… Continue reading காட்சி / ஞானக்கூத்தன் கவிதைகள்
உள்ளும் புறமும் / ஞானக்கூத்தன் கவிதைகள்
உள்ளும் புறமும் ஒருங்கே தெரிய ஒன்றிருப்பது அழகுதான். மற்றவை யெல்லாம் உள்ளும் புறமும் தனியே தெரிய இருக்கும் பொழுது. எந்தப் பொருளின் முடிப்பாகமோ அடிப்பாகமோ உள்ளும் புறமும் ஒருங்கே தெரிய இருக்கும் இப்பொருள்? ஒன்றையும் காணாமல் உள்ளும் புறமும் தெரிய பொருளின் ஊடு உலகைப் பார்த்தேன் உலகம் கோமாளி ஒருவனின் மீசையாய் நகர்கிறது பக்கவாட்டில்.