உள் உலகங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

வயல்களைக் குளங்களென்று நினைத்திடும் மீனும் நண்டும் குசலங்கள் கேட்டுக் கொள்ளும் கொய்கிற அரிவாளுக்குக் களைவேறு கதிர்வேறில்லை என்கிற அறிவை இன்னும் வயல்களோ அடையவில்லை மீனுடன் நண்டும் சேறும் நாற்றிசைக் கரையும் பார்த்துக் குளத்திலே இருப்பதாகத் தண்ணீரும் சலனம் கொள்ளும் பறைக்குடிப் பெண்கள் போல வயல்களில் களைத்துத் தோன்றும் பெருவிரல் அனைய பூக்கள் மலர்த்தும் சஸ்பேனியாக்கள் படுத்தவை கனவில் மூழ்கி நிற்பவையாகி எங்கும் எருமைகள். அவற்றின் மீது பறவைகள் சவாரி செய்யும் சரி மனை திரும்பும் எருமைமேலே எவ்விடம்… Continue reading உள் உலகங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

எட்டுக் கவிதைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

1 சாத்துயர் கேட்டுப் போகும் சுற்றத்தார் சாயல் காட்டிக் கழன்றது ரத்த வெள்ளம் குத்துண்ட விலாப்புறத்தில் அவர் பெயர் ஒன்றினோடு என்பெயர் ஒன்றிப் போச்சாம் படுக்கையில் தூங்கும் என்னைக் கந்தர்வர்கொன்று போனார் பெயரையே சொல்லிப் பார்த்து திகைக்கிறேன் எனக்கென் பேரே எப்படித் துரோக மாச்சு. 2 வெளியில் வந்தான் நடுநிசியில் ஒன்றுக் கிருந்தான் மரத்தடியில் நெற்றுத் தேங்காய் அவன் தலையில் வீழ்ச்சியுற்று உயிர் துறந்தான் ரத்தக் களங்கம் இல்லாமல் விழுந்த நோவும் தெரியாமல் தேங்காய் கிடக்கு போய்ப்பாரும்… Continue reading எட்டுக் கவிதைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

உள்ளோட்டம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

பூமியின் பிச்சைக்கார முகத்திலே ஒரு வெள்ளோட்டம் வயல்களில் தண்ணீரோட்டம் விளையாட்டுப் பிள்ளை ஓட்டம் புளியன் பூ வைத்தாயிற்று காவிப்பல் தெரிந்தாற் போல கிளைகளில் அக்கா பட்சி கூவின வெட்கத்தோடு தானொரு முதலை போலப் புதுப்புனல் ஆற்றில் ஓடும் ஊர்க்கூட்டம் கரையில் ஓட போகிறார் தலைக்குடத்தில் ஆற்றுநீர் துள்ளத் துள்ள நீர்மொண்ட குருக்கள் வர்ணக் குடையின்கீழ் ஈரத்தோடு கச்சேரி ஆசை உள்ள கோயிலின் மேளக்காரன் உற்சாகம் ஒன்றில்லாமல் தொடர்கிறான் ஊதிக்கொண்டு.

தவளைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

(1) தவளையின் கூச்சல் கேட்டுத் தமிழ்க்கூச்சல் என்றான் கம்பன் ஆயிரம் வருஷம் போச்சு போயிற்றா தவளைக் கூச்சல் மாதத்தில் ஒன்றைக் கண்ணன் மட்டுமா பிடிக்கும் என்றான் தவளைக்கும் பிடித்த மாதம் ஒன்றுண்டு பன்னிரண்டில் குளத்திலே இலைத் தண்ணீரில் குதூகலத் தவளைக் கூட்டம் குதித்திடும் கூச்சல் போடும் படித்துறை ஏறித்தாவும் நீர்மட்டத் தளவு தோன்றித் தாமதித்து நீரில் மீளும் தவளையின் வயிற்றைப் பார்த்தால் சந்தனக் கட்டி தோற்கும் கண் மறைவாக எங்கோ கதிரவன் தேர்க்கால் சிக்கி உருள்கிற சப்தம்… Continue reading தவளைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

காலைநடை / ஞானக்கூத்தன் கவிதைகள்

வில்லைத்தகர எழுத்துகளால் வெட்டுப்பட்ட விளம்பரம் போல் நிலத்தின் மீது வயல்வரப்பு விடிந்த நாளின் முதல் சிகரெட் நெருப்பைத் தவிர மற்றெல்லாம் பச்சை பொலியும் செழும்பூமி தோப்புப் பனைகள் தொலைவாக தாழைப் புதர்கள் உரசாமல் நடக்கும் அவரைத் தெரிகிறதா? கையில் கொஞ்சம் நிலமுண்டு ஸ்டேஷன் மாஸ்டர் கொடிபோல உமக்கும் இருந்தால் தஞ்சையிலே நீரும் நடப்பீர் அதுபோல

நஷ்டக் கணக்கு / ஞானக்கூத்தன் கவிதைகள்

வாகனம் தூக்கிக் கொண்டு தீவட்டி பிடித்துக்கொண்டு வாத்தியம் இசைத்துக்கொண்டு பலூன்கள் விற்றுக்கொண்டு தெருக்காரர் ஊர்வலத்தில் இருப்பதால் நஷ்டப்பட்டார் எங்களூர் அரங்கநாதர்

பார்த்தல் / ஞானக்கூத்தன் கவிதைகள்

கூடைக்காரி சிலசமயம் குடும்பக்காரி வரும் தெருவில் டீச்சர் வந்தாள் குடைவிரித்து. …… ஒற்றைமாட்டு வண்டியிலே …… வைக்கோல் பாய்க்கு …… நெளிந்து தரும் …… மருத்துவச்சி தேடுகிறாள் …… எட்டிப் பார்த்து ஒரு வீட்டை விளக்குக் கம்பம் நடைக் கொம்பாய் நிற்கும் தெருவில் பிறபெண்கள் வந்தார் போனார் அவள் வரலே.

பவழமல்லி / ஞானக்கூத்தன் கவிதைகள்

கதை கேட்கப் போய் விடுவாள் அம்மா. மாடிக் கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத் தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு விசிறியதும் அவரோடு வீடு தூங்கும் பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும் தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத் தனிமையிலே என் நினைப்புத் தோன்றுமோடி?