அழிவுப் பாதை / ஞானக்கூத்தன் கவிதைகள்

சொல்லப் பட்டது போலில்லை அழிவுப்பாதை அண்மையில் அல்லது சேய்மையில் ஏதோ ஒன்றுக் கேற்ப அஃதிருந்தாலும்: பறவையின் சாதி உடன்வந்தழைக்க காலுக் கடியில் பூமி குழைய நாளையின் வாயில் பெருகிய கானம் வருகையில் இருப்பவர் பெருமையை விரிக்க சொல்லப்பட்டது போலில்லை அழிவுப் பாதை எந்தக் கணமும் கழுத்தில் இறங்க வானவில்லொன்று எதிரே நகரும் தாரகை கடந்த ஒருபெரும் விசும்பில் முடிவின் அருள்முகப் புன்னகை பொலியும்… நடக்கலாம்; இருக்கலாம்; நிற்கலாம்; படுக்கலாம் அனைத்தும் ஒன்றுதான் அழிவுப் பாதையில் முதலடி பதியுமுன்… Continue reading அழிவுப் பாதை / ஞானக்கூத்தன் கவிதைகள்

மழைநாள் பாதை / ஞானக்கூத்தன் கவிதைகள்

மழை நாள்த் திவசம் தாத்தாவுக்குத் தந்தை செய்தது. வீட்டுக் குள்ளே பெரிய காலித் தகர டப்பியில் காற்றின் பேச்சு கண்ணை மூடிக் கொண்டு நடக்கும் பழக்கம் உள்ள நான் ஆசாரத்தை அஞ்சி வீட்டின் பின் பக்கம் வந்தேன் கொல்லைச் சுவரின் புராதன ஈரத்தில் பளபளக்கும் சுவடு வைத்து ஊர்ந்தது நத்தை ஒன்று நத்தைக்குத் தெரியாதா செங்குத்துச் சுவரென்று மீண்டும் ஊர்ந்தது மீண்டும் விழுந்தது திவசச் சோற்றுக்குக் காத்திருக்கும் தேவதைகள் நத்தையைப் பிடித்துதள்ளி விளையாடுகிறார்கள் பொழுது போக இன்றும்… Continue reading மழைநாள் பாதை / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஆகஸ்டு 15 / ஞானக்கூத்தன் கவிதைகள்

இரண்டு விரல்களுக்கிடையில் எச்சிலைக் காறித் துப்பிய ஒணசல் மனிதன் நுகத்தடியில் தன்னை மீண்டும் பொருத்திக் கொள்கிறான் சிறிய காற்றுக்கும் பெரிதும் அசைந்தன சிறு மரங்கள் உலோகத் தட்டில் உணவை முடித்து வீட்டுக்குள்ளேயே கையைக் கழுவி மதியத் தூக்கத்தில் சிலபேர் தங்களை மறந்தனர் வேம்பில் பழக் குலையை எட்டிப் பிடித்துக் காக்கைகள் ஒற்றைப் பழத்தை ஈர்த்துச் சுவைத்தன இடித்துக் கட்டப்படும் வீடுகள் முக்கோண வட்டச் சிதறலாய்க் கவிழ்ந்து மீண்டும் எழுந்தன விண்ணில் குறுக்கு நெடுக்கு வளைவில் நெடுக்கு நெடுக்கில்… Continue reading ஆகஸ்டு 15 / ஞானக்கூத்தன் கவிதைகள்

என் உலகம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

என் உலகம் சிறியது அங்கே மூங்கில் ஆல் ஆன வேலி ஒன்றும் அந்த வேலிஇல் இருக்கும் ஓணான் ஒன்றும் உண்டு ; குச்சிப் பூச்சியும் ஒன்றுண்டதிலே வீட்டுக்கும் இல்லை; வீட்டுப் பக்கம் வளர்ந்து கனியாத மரத்துக்கும் இல்லை வேலி வேலியைப் போட்டதும் நானில்லை மரத்தைப் பற்றி கூறினேன் அல்லவா? இன்னும் ஒன்றைச் சொல்லணும் மரத்தின் கிளையில் தொங்கும் கூடொன்றுண்டு. பழங்கூடு இத்தனை சொன்ன பின் எனது உலகம் எப்படிச் சிறிய தென்று யாரேனும் என்னைக் கேட்கக் கூடுமோ… Continue reading என் உலகம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

இரட்டை நிழல் / ஞானக்கூத்தன் கவிதைகள்

பறவைகள் சிலவும் மீன்கள் சிலவும் புலம்பு புலம்பென்று புலம்பின. நண்டுகள் வளைகளை மேலும் மேடாக்கின. வானத்தின் கருமையில் வஞ்சனை உண்டெனறு அறிவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்களை ஐந்து திணைக் காரர்களும் கல்லால் அடித்துக் குன்றங்களுக்கு விரட்டி விட்டுச் சிறிய பூசலைப் போன்ற மழையின் மின்னலைப் பாராட்டி மகிழ்ந்திருந்தார்கள். ஆனால் மழையோ போராய்ப் பெருகியது. ஏரிகள் குளங்கள் ஆறுகள் குட்டைகள் கேணிகள் என்பன மாலைக்குள் மாறி எங்கும் தண்ணீர் ஓடாமல் விம்மியது. கட்டழிந்த முந்நீர் ஊருக்குள் கால்வைக்க அங்காடிகள்… Continue reading இரட்டை நிழல் / ஞானக்கூத்தன் கவிதைகள்

காலி / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஒன்றும் அவனுக்குப் பெரிதல்ல எதுவும் புனிதமும் அல்ல. காலி கயவாளி மைதுனத்தில் முடிக்கமுடியாமல் சிக்கிக் கொண்டவன். தந்தையைப் போக்கடித்தான் தாயைக் கொலைசெய்து கடல்நீரில் கைகழுவிக் கப்பலிலே சென்று வந்தான் போக்கடித்த தந்தைக்குத் திவசம் தந்து கொலைசெய்த தாயைக் கள்குடித்து வசைபொழிந்தான். அவனுக்குத் தெரியாதது ஒன்றும் கிடையாது. நாற்றத்தை முள்ளை நெருப்பைப் பிணைத்து குதத்தி லிருந்து தொண்டைக் குழிவரைக்கும் வழிய நிரப்பிக் காலி பவனி வந்தால் கோயில் கடவுள்கள் குலை நடுக்கம் கொண்டார்கள். தங்கள் கனவுகளில் விடாமல் புகமுயலும்… Continue reading காலி / ஞானக்கூத்தன் கவிதைகள்

நாலு தலைக்காரன் / ஞானக்கூத்தன் கவிதைகள்

நாலு தலைக்காரன் அற்புத நாக்குக்காரன் நாலு தலைக்குள்ளும் நாக்குகள் நான்கிருக்கும் நாக்குகள் ஒன்றுக்குள்ளே நல்லதாய்ப் பூவிருக்கும் பூவுக்கு வாய்திறந்தால் மெல்லிதாய்க் கானம் வரும் நாக்குகள் ஒன்றுக்குள்ளே வேறொரு பூவிருக்கும் பூவுக்கு வாய்திறந்தால் ஒரு மின்னல் பெண்மைகொள்ளும் நாக்குகள் ஒன்றுக்குள்ளே இன்னொரு பூவிருக்கும் பூவுக்கு வாய்திறந்தால் எங்கெங்கும் நானிருப்பேன் நாலு தலைக்காரன் அற்புத நாக்குக்காரன் நாலு தலைக்காரன் பூக்கிற நாக்குக்காரன்.

எதை எடுத்துக் கூறுவது / ஞானக்கூத்தன் கவிதைகள்

எதை எடுத்துக் கூறுவது நீஙகள் இடமொன்றைத் தெரிவிக்க வேண்டுமென்றால் ஆலமரம் ஒன்றுண்டு அதற்கு நேரே கிளைவிட்டுப் போகிறதில் தெற்கு நோக்கிப் போகுமொன்றில் தொடர்ந்து செல்லக் கிட்டும் என்போம் கோலை நட்டுக் கட்டாத அச்சுத் தேர்க்கு மேற்காகப் பிரிகின்ற தெருவில் என்போம் தோப்புகளின் தலைவிளிம்பு பொக்கைப் போரை ஆனதற்குப் பக்கத்தில் உள்ள தென்போம். இன்ன பொருள் இத்திசையில் அதற்குப் பக்கம் இஃதிருக்கப் பாரென்று சொல்லக் கூடும் எதை எடுத்து நான்கூற கேட்கப்பட்டால் எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது

தற்செயலாய் என் நிழலை / ஞானக்கூத்தன் கவிதைகள்

தற்செயலாய் என் நிழலைத் தெருவில் பார்த்தேன் அதில் எனது அண்ணன் தோள் இருக்கப் பார்த்தேன். வீட்டுக்குத் திரும்பிவந்து முகத்தைப் பார்த்தேன் அண்ணன் முகம் பிம்பத்தில் கலங்கப் பார்த்தேன் இது என்ன இவ்வாறாய்ப் போயிற் றென்று தெருவுக்குத் திரும்பிவர ஒருத்தன் என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டான். நானும் நின்றேன் அவன்தானா நீ என்றான் இல்லை என்றேன். அவனைப் போல் இருந்தாய் நீ அழைத்தேன் என்றான் சில சொற்கள் நான்பேசத் தொண்டைக்குள்ளே அவன் இசைந்து பேசுவதைக் கேட்டுக் கொண்டேன் தோப்புகளின்… Continue reading தற்செயலாய் என் நிழலை / ஞானக்கூத்தன் கவிதைகள்