உடலெல்லாம் கதம்ப மணம் வீச யார் வந்து தழுவிச் சென்றார் இரவின் கடும் இருட்டின் கரையிலும் பொழுதற்ற வேளையிலும் யார் வந்து தொடுகிறார் மணம் கவ்விய பெரு நீரோட்டத்தில் உடல் குழைந்து சாகும் வேளை யாரும் ஏதும் சொல்லிலார் நரம்புகள் தோறும் பெருவெள்ளம் பாய செஞ்சந்தனம் குளிர யார் வந்து அணைக்கிறார் காலமென்ற வேதனையைக் மண்குடமதில் நீராக்கி கணக்கில்லாமல் சுமக்கும் போது யார் வந்து கை மாற்றுவார் கண்ணிலார் காதிலார் மனமிலார் எண்ணிலார் இம்மண்ணிலே ஒன்றாகக் குழுமிடவே… Continue reading கதம்பம் / குட்டி ரேவதி கவிதைகள்
உன்னிடம் உண்டா ஓர் அரண்மனை? / குட்டி ரேவதி கவிதைகள்
ஒவ்வொரு நாளும் அவன் ஒரு பெண்ணாக மாறிக்கொண்டே இருந்தான் பெண்ணின் அடையாளங்களை முதலில் புற உடலில் வரைந்து கொண்டான் உடலின் வரைபடத்தில் நீர் ஓவியத்தைப்போல காமத்தின் எழுச்சிகளும் வரையப்பட்டிருந்தன கண்குழியில் ஆழக்கடலின் ரகசியங்களை பொதிந்து கொண்டான் உணர்ச்சியின் நீரோட்டங்களை ஆறாகப் பெருக விட்டான் உடல் சமவெளியில் விறைத்த குறியை அதன் ஆண்மைய முட்களை அறுத்தெறிந்து சமனப்படுத்திக் கொண்டான் இப்பொழுதிருந்து அவனை அவள் என்றே அழைக்கலாம் என்று அறிவித்துக் கொண்டாள் நம்பிக்கையின் தாரகைகள் முளைத்து உடல் ஒரு வானமாக… Continue reading உன்னிடம் உண்டா ஓர் அரண்மனை? / குட்டி ரேவதி கவிதைகள்
கண்காட்சி / குட்டி ரேவதி கவிதைகள்
வீட்டின் கூரை மீது விரிந்த வேப்பமரம் தங்க நிறப்பழங்கள் சொரிய கோடைப்பகலில் உன்வீடு தீச்சட்டியாய் கனன்றது அறைகளின் சுவர்களில் உலர்ந்த பூக்களென பட்டாம்பூச்சிகள் ஒட்டியிருந்த வண்ணம் காட்டி பரவசம் கண்டாய் நிழலின் தோகைகள் இருளென படர்ந்து தாபங்கள் எழுந்த வேளை தனிமையை நீருற்றி வளர்த்த உன் கண்கள் வேகமாய் இன்னோர் அறைக்கு வாசல் திறந்தன அறைகள் பெருகி தாழுடன் தவிப்புடன் இறுகியிருந்தன வீசும் வெக்கையை குயிலின் பூக்கள் பாடி ஆற்றின கிளைகளின் பாதையில் பந்தயம் வென்ற அணில்களின்… Continue reading கண்காட்சி / குட்டி ரேவதி கவிதைகள்
கரையேதுமில்லை / குட்டி ரேவதி கவிதைகள்
மீன்கள் அள்ளிய வலையாய்க் கடலை கரையிழுத்து வந்த அதிகாலைப் பெண்டிர் நாம் இரவின் ரகசியங்களைக் கிழிக்கும் மூர்க்கத்துடன் நம்மிருவரின் கணக்கற்ற இயக்கங்களாலான உடல்களால் இரவின் நீலவர்ணத்தை அளந்தவர்கள் தோலுரித்தவர்கள் நாம் அங்கே தந்திரங்கள் ஏதுமில்லை கடலை அளக்க நீந்திய இரு மீன் குஞ்சுகளைப் போல அளந்து நடக்கப்பணித்த கால்களைத் துறந்தோம் நீந்தி நீந்திக் கரை மறந்தோம் ஆழக்கடலில் சூரியன் தெரிந்தது மெலிந்த உதடால் மழைநீரின் ஒவ்வொரு துளியையும் கவ்விச் சுவைத்த முத்துச்சிப்பியைப் போல் உன் காமத்தின் பெருமழையைத்… Continue reading கரையேதுமில்லை / குட்டி ரேவதி கவிதைகள்
செங்கொடி – சுழன்றாடும் பெருந்தீ / குட்டி ரேவதி கவிதைகள்
துயரங்களாலான அம்மாவின் கந்தல் சேலை காற்றில் அலைந்து பற்றிய தீ, நீ! பற்றிக் கொண்ட தீயுடன் அவள் தெருவிறங்கி ஓடுகையில் கடைசி நினைவாய் அவள் பாதங்களைச் சுட்டெரித்த தார்ச்சாலை ஆனவளும் நீ தீப்பந்தமாய் அவள் ஓடி ஓடி எரிந்த அத்திருப்பத்தைக் கடக்கும் போதெல்லாம் ஓர் எரிநட்சத்திரம் உன் மண்டைக்குள் பரபரவென்று பற்றி எரிகிறது என்பாய் உன் தாயின் நினைவு பீடித்த பொழுதுகளை அக்குளக்கரையில் கழித்தோம் நீயும் நானும் அவள் அழுத கண்ணீராலானது என்பதால் நம்மை மீன்களாக்க முடியாது… Continue reading செங்கொடி – சுழன்றாடும் பெருந்தீ / குட்டி ரேவதி கவிதைகள்
இரை/ குட்டி ரேவதி கவிதைகள்
மின்னும் செதில்களுடனும் துருத்திய விழிகளுடனும் அலைகடல் கரையின் பொன்மணலில் ஒற்றைக் கால் உந்திஉந்தி நீ துடித்துக்கொண்டிருக்கிறாய் ஆகாயத்தில் விசையுடன் சுழலும் அவ்வேகத்திலேயே என்னுடல் கணையால் அக்கரைபாய்ந்து என் இரை உன்னைக் கொத்திப்போகும் தருணம் மீதில் சலனம் கலைத்த பறவையாய் பறத்தலில் மிதக்கிறேன் வானம் பூமி இடைவெளிப் பாய்ச்சல் பழக்கமெனக்கு என்றாலும் கடைசிச் சுவாசமும் சீற விழிபிதுங்கக் காட்சிதரும் பரிதாபமான இரையை ஏனோ நான் விரும்பவில்லை நீர்ச்சுழலில் துள்ளியோடி நீந்தி நீ ஆர்ப்பரிக்க சர்ரென்று பாய்ந்து உன்முதுகில் என்… Continue reading இரை/ குட்டி ரேவதி கவிதைகள்
வீட்டிற்குள் வளரும் மரம் / குட்டி ரேவதி கவிதைகள்
அகத்தின் சுவர்களில் இதயத்தின் தரையில் சுயவரலாற்றுப் புத்தகம் ஒன்று நூலாம்படை பூத்து வேர்களோடி கிடக்கிறது அதை விரித்துப் பார்க்கும் துணிவில் வேர்களைப் பிய்த்தெடுக்கும் வன்முறை இல்லை புத்தகம் தன் இலட்சம் கைகளை விரித்துக் கொண்டு நிமிர்ந்தெழுந்து நிற்கிறது கூரையை முட்டி மோதி கைவிரித்த கிளைகளில் நான் கையூன்றி நகர்ந்த சம்பவங்கள் சில குறிப்புகள் துளிர்த்து இலைகளாகி சில சருகுகளாகி அந்தகாரத்தில் மிதந்தலைகின்றன காற்று ஒரு பொழுதும் அதைத் தூக்கிச்செல்லாது அதன் ஒரு கனியையும் எந்த அம்பும் வீழ்த்தாது… Continue reading வீட்டிற்குள் வளரும் மரம் / குட்டி ரேவதி கவிதைகள்
சோழிகள் ஆக்கிய உடல் / குட்டி ரேவதி கவிதைகள்
உருட்டிவிடப்பட்ட சோழிகளால் ஆன இப்பெருஉடலின் நற்சோழிகள் உமது நீவிர் உருட்டி விளையாட உருண்டோடி விளையாடும் நண்டுகளின் மத்தியில் நவ சோழிகளின் பொலிவு உம் கண்களைத் திருடும் கைப்பற்றி உருட்டி விளையாட இம்சிக்கும் சோழிகளை அலை வந்து கலைக்க வழி மறந்து திணறி நீருக்குள் உருளும் சோழிகளற்ற கடலாகா கரையை என் உடலென்று ஆக்கினால் தன்னைத் தானே இயக்கும் மகிழ்ச்சியறியா கூழாங்கற்களே மிஞ்சும் உமக்கு
அணிலாகி நின்ற மரம் / குட்டி ரேவதி கவிதைகள்
அதிகாலை மரத்தில் தன் குரல் சப்தத்தை கிளையெங்கும் பூத்துக்குலுங்கும் பூக்களாக்கிய அணில் ஒரு மழையால் அடங்கியது வானம் தன் இசையை ஒரு பெருமழையாக்க பூக்களை உதிர்த்த கிளையிலும் இலையிலும் வந்து தங்கியது நீரின் குரல் அணிலாகி நின்ற மரத்தில் எப்பொழுது பூக்கள் மீண்டும் குலுங்குமென எல்லோரும் காத்திருக்க சுள்ளென்று வெயில் வந்து மர உச்சியில் அமர, காலம் ஒரு மரமாய் நின்றது பூக்களற்ற மரம் மதிய வேளையின் சாபம்.
விதை முளையும் யோனி / குட்டி ரேவதி கவிதைகள்
விதையுடன் கூடிய சிறு செடியொன்று யோனியில் முளைத்து வந்த அம்முத்திரையை* வரலாறு தன் அகண்ட பூமியின் வயிற்றிலிருந்து எமக்கு எடுத்துக் காட்டியது எதேச்சையானது அன்று சூரியன் தன் பழுக்கக் கொதித்த நரைத்த கரங்களை வரலாற்றின் மண் கிளறி நம் காட்சிக்கு ஒரு சித்திரம் வரைந்து கொடுக்கிறது அதைத் தொடரச் சொல்கிறது மறைதொனியில் இச்சிக்கிறது நம் தேடலை காலத்தின் பாதையைத் திறந்து கொடுக்கிறது இன்னும் உறையாத இரத்தத்தை அது தன்னில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது இன்னொரு நாளை எப்படித் தொடங்குவது… Continue reading விதை முளையும் யோனி / குட்டி ரேவதி கவிதைகள்