வெண்மணியில் மாமிசங்கள் கருகியவாடை – வீசி விலகுமுன்னே கண்டதென்ன நீதியின் பாதை? வெண்மணியின் தீயில் செத்தான் நீதிதேவனும் – . எங்கள் வேதனையில் வளருகிறான் ஜாதி தேவனும்
Category: Thanikaiselvan Kavithaigal
முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய / தணிகைச் செல்வன் கவிதைகள்
முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ…! பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம் முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ…! கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வேர்க்கலையோ…! ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோறுக்கும் இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரை காண்கிலையோ…! அய்யோ உலகே ! அய்யகோ பேருலகே ! பொய்யோ உலகசபை ? புனைவுகளோ சபைவிதிகள் ? கையேந்தி வந்தாரை கரமேந்தி காத்த… Continue reading முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய / தணிகைச் செல்வன் கவிதைகள்
கல்லறை காயாது / தணிகைச் செல்வன் கவிதைகள்
சிரித்தபடியேதான் நீ சாவையும் சந்தித்திருப்பாய் என்பதில் சந்தேகமில்லை எமக்கு. சமர்க்கள வீச்சாயினும் சமாதானப் பேச்சாயினும் இரண்டிலும்- சலவை செய்த உன் சிரிப்பைச் சந்திக்க எதிரிகளே அஞ்சினார்கள். உன்-புன்னகையின் வெண்ணிறமே புரட்சியின் விடிவெள்ளியாய்த் தோன்றியது புலித் தோழர்களுக்கு அந்தப் – புன்னகைக்குள்ளே ஒரு புரட்சியே பதுங்கியிருப்பதாகத் தோன்றியது பகைவர்களுக்கு. ஞாலச் சிறப்புக்கு வான்படையை ஊக்கிய உன் ஞானச் சிரிப்புக்கு நடுங்கினான் மகிந்தன். கருவிப் போரில் யுத்த தந்திரத்யுைம் அறிவுப் போரில் ராஜதந்திரத்தையும் கற்றுச் செரித்த களகர்த்தனே, எதிரிகள் உன்னைக்… Continue reading கல்லறை காயாது / தணிகைச் செல்வன் கவிதைகள்