நாலு தலைக்காரன் / ஞானக்கூத்தன் கவிதைகள்

நாலு தலைக்காரன் அற்புத நாக்குக்காரன் நாலு தலைக்குள்ளும் நாக்குகள் நான்கிருக்கும் நாக்குகள் ஒன்றுக்குள்ளே நல்லதாய்ப் பூவிருக்கும் பூவுக்கு வாய்திறந்தால் மெல்லிதாய்க் கானம் வரும் நாக்குகள் ஒன்றுக்குள்ளே வேறொரு பூவிருக்கும் பூவுக்கு வாய்திறந்தால் ஒரு மின்னல் பெண்மைகொள்ளும் நாக்குகள் ஒன்றுக்குள்ளே இன்னொரு பூவிருக்கும் பூவுக்கு வாய்திறந்தால் எங்கெங்கும் நானிருப்பேன் நாலு தலைக்காரன் அற்புத நாக்குக்காரன் நாலு தலைக்காரன் பூக்கிற நாக்குக்காரன்.

எதை எடுத்துக் கூறுவது / ஞானக்கூத்தன் கவிதைகள்

எதை எடுத்துக் கூறுவது நீஙகள் இடமொன்றைத் தெரிவிக்க வேண்டுமென்றால் ஆலமரம் ஒன்றுண்டு அதற்கு நேரே கிளைவிட்டுப் போகிறதில் தெற்கு நோக்கிப் போகுமொன்றில் தொடர்ந்து செல்லக் கிட்டும் என்போம் கோலை நட்டுக் கட்டாத அச்சுத் தேர்க்கு மேற்காகப் பிரிகின்ற தெருவில் என்போம் தோப்புகளின் தலைவிளிம்பு பொக்கைப் போரை ஆனதற்குப் பக்கத்தில் உள்ள தென்போம். இன்ன பொருள் இத்திசையில் அதற்குப் பக்கம் இஃதிருக்கப் பாரென்று சொல்லக் கூடும் எதை எடுத்து நான்கூற கேட்கப்பட்டால் எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது

தற்செயலாய் என் நிழலை / ஞானக்கூத்தன் கவிதைகள்

தற்செயலாய் என் நிழலைத் தெருவில் பார்த்தேன் அதில் எனது அண்ணன் தோள் இருக்கப் பார்த்தேன். வீட்டுக்குத் திரும்பிவந்து முகத்தைப் பார்த்தேன் அண்ணன் முகம் பிம்பத்தில் கலங்கப் பார்த்தேன் இது என்ன இவ்வாறாய்ப் போயிற் றென்று தெருவுக்குத் திரும்பிவர ஒருத்தன் என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டான். நானும் நின்றேன் அவன்தானா நீ என்றான் இல்லை என்றேன். அவனைப் போல் இருந்தாய் நீ அழைத்தேன் என்றான் சில சொற்கள் நான்பேசத் தொண்டைக்குள்ளே அவன் இசைந்து பேசுவதைக் கேட்டுக் கொண்டேன் தோப்புகளின்… Continue reading தற்செயலாய் என் நிழலை / ஞானக்கூத்தன் கவிதைகள்

எல்லாமும் முதலில் பாழாய் இருந்தது / ஞானக்கூத்தன் கவிதைகள்

எல்லாமும் முதலில் பாழாய் இருந்தது கடவுள் சொன்னார் தோன்றுக தெருக்கள் என்று எழுந்தன தெருக்கள் பாழில் வைத்தன நடனக் காலை ஆடின தழுவிக் கொண்டு இசைத்தன மூங்கில்க் கீதம் ஊசிகள் சூர்யனாகித் திரும்பின என்றாற் போல எங்கணும் தெருக்கள் பாடிப் பறந்தன. தெருக்கள் தாத்தாப் பூச்சியாய்ப் பாழில் எங்கும் திரிந்தன இடங்கள் தேடி எல்லாமும் முதலில் பாழாய் இருந்தது கடவுள் சொன்னார் தோன்றுக தெருக்கள் என்று கோடுகள் முதுகில் ரெண்டு சுமந்திடும் அணிலைப் போல போகிறேன் முதுகில்… Continue reading எல்லாமும் முதலில் பாழாய் இருந்தது / ஞானக்கூத்தன் கவிதைகள்

மீண்டும் அவர்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மழைபொழியக் கடமைப் படாதவை எனினும் அழகாய் இருந்தன காலை மேகங்கள். பறக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன் எழும்பினேன் வானில் சிறகை விரித்து புனித கோபுரக் கலசங்கள் சில பறக்கும் எனது கால்களுக்கிடையில் பூமியில். சலனமற்ற மரங்களின் முடிப்பந்தின் ஊடே ஒளிந்திருந்து அவர்கள் சுட்டார்கள் எங்கும் அமராத அந்த பறவை அதோ என்று புகைக் கோலத்தை வானில் வரைந்து நான் விழும்போது அவர்கள் சென்றார்கள் அன்றைய நாளின் பூரணம் கண்டு. எங்கும் அமராத பறவை ஒன்றை உங்களப்பா சுட்டு… Continue reading மீண்டும் அவர்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மண்டையைத் திறந்தால் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மண்டையைத் திறந்தால் மூளைக் களிமண்ணாய்க் காணும் என்று யாரோ சொன்னார். கண்ணால் பார்த்தால் தவிர நான் எதையும் நம்புவதில்லை. என் தலையைத் திறந்து பார்த்தேன் திறந்த இஸ்திரிப் பெட்டியில் போல் மின் சாரம் பாய்ந்திருக்கக் கண்டேன்.

வந்தனம் என்றான் ஒருவன் / ஞானக்கூத்தன் கவிதைகள்

வந்தனம் என்றான் ஒருவன் இளங்காலைக் கதிரைக் கண்டு நன்றென்றான் ஒருவன் இரவில் முகிழ்கிற நிலவைக் கண்டு அவன் நின்றான் கால்கள் ஊன்றி ஒரு போதில் வருதல் மற்றப் போதிலே மறைதல் என்னும் இயல் பில்லா முகிலைப் பார்த்து.

எங்கள் வீட்டு பீரோ / ஞானக்கூத்தன் கவிதைகள்

எங்கள் வீட்டில் ஒரு பீரோ ஒரு காலத்தில் வாங்கியது. வீட்டுக் குள்ளே வந்தவழி எவ்வாறென்றும் தெரியாது. பட்டுத்துணிகள் புத்தகங்கள் உள்ளே வைத்துப் பூட்டியது. உயரம் நல்ல ஆளுயரம் கனத்தைப் பார்த்தால் ஆனைக்கனம். வீட்டுக்குள்ளே இரண்டிடங்கள் கூடம் மற்றும் தாழ்வாரம் இரண்டில் ஒன்றை மாற்றிடமாய் வைத்துக் கொள்ளும் பழம்பீரோ, குப்பை அகற்றும் பொருட்டாக ஆளை அழைத்துப் பேர்த்தெடுத்து இன்னோரிடமாய் முற்றத்தில் கொண்டு வைத்தால் அங்கிருந்து வானைக் கொஞ்சம் பார்க்கிறது காற்றில் கொஞ்சம் உணர்கிறது எடுக்கப் போனால் கால்விரல்கள் ரத்தம்… Continue reading எங்கள் வீட்டு பீரோ / ஞானக்கூத்தன் கவிதைகள்

எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன் / ஞானக்கூத்தன் கவிதைகள்

எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன் என்றான் ஒருவன் இல்லை என்றேன் அவன் சொன்னான் என்னை இன்று உண்பித்தால் உனக்குச் சில நாள் உழைப்பேன் ஒன்றும் வேண்டாம் போ என்றேன் இன்னும் சொன்னான். ‘என்னைப் பார் கண்டதுண்டா நீ முன்பு என்னைப் போல் சப்பட்டை யான மனிதன்’ நானும் பார்த்தேன் அதுசரி தான் ‘எனக்குக் கொஞ்சம் சோற்றைப்போடு பலவிதமாகப் பயன் படுவேன் கதவில்லாத உன் குளியலறைக்கு மறைப்பு போல நான் இருப்பேன் வேண்டுமென்றால் என்னைக் கிடத்திப் பொருள்கள் உலர்த்தலாம்… Continue reading எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன் / ஞானக்கூத்தன் கவிதைகள்