எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளியில் சொல்லும் பழக்கம் எனக்கு நண்பன் ஒருவனோ நேரெதிர் இதற்கு ஒன்றையும் சொல்ல மாட்டான் எதற்கும் மௌனமாய் இருப்பதே அவன் வழியாகும் பலரும் சொன்னோம் ‘சொல்லப்படுதலே என்றும் சிறந்தது’ அதற்குப் பிறகும் அவன் சொல்லவில்லை. நாங்கள் வியந்தோம். இறக்கும் பொழுதும் சொல்ல மாட்டானா ஒருநாள் அவனும் இறந்தான் கட்டைப் புகையிலை போல அவன் எரிந்ததைப் பார்த்துத் திரும்பும் பொழுது தெருவில் வெயிலில் சேவல் கூவிற்று ஒருமுறை விறைத்து. வழக்கம் போல நான்… Continue reading சொல் / ஞானக்கூத்தன் கவிதைகள்
Category: Tamil Poetry
என்ன மாதிரி / ஞானக்கூத்தன் கவிதைகள்
என்னை நோக்கி ஒருவர் வந்தார் எதையோ கேட்கப் போவது போல கடையா? வீடா? கூடமா? கோயிலா? என்ன கேட்கப் போகிறாரென்று எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில் அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம் ஒன்றும் கேளாமல் சென்றார். என்ன மாதிரி உலகம் பார் இது.
காட்சி / ஞானக்கூத்தன் கவிதைகள்
வரப்பு காக்கிப் பயிர் கம்பி குத்தி நெட்டைக் கம்பம் கேடயம் வாள் குறுக்கில் விரையும் பறவை உதைக்கும் சப்தம் சப்தத்தில் பூமி ஒரு மீசை பூசப்பட்ட வானம் நகராத புரவி நகர்ந்து போன பகை நெல்லுப்பயிர் கள்ளு குடி குளத்துப்படிக் கட்டில் வெட்டுப் புண்ணில் சொட்டு ஸ்வஸ்தி ஸ்ரீ ராஜாதி ராஜர்க்கு யாண்டு… யாண்டு? அல்லிப் பூவில் ரத்தக கறை சூரியனின் சேப்புத் தலை தோப்பு தெம்மாங்கு தலை முழுகிய தண்ணீர் அலை இடி அலை இடி… Continue reading காட்சி / ஞானக்கூத்தன் கவிதைகள்
உள்ளும் புறமும் / ஞானக்கூத்தன் கவிதைகள்
உள்ளும் புறமும் ஒருங்கே தெரிய ஒன்றிருப்பது அழகுதான். மற்றவை யெல்லாம் உள்ளும் புறமும் தனியே தெரிய இருக்கும் பொழுது. எந்தப் பொருளின் முடிப்பாகமோ அடிப்பாகமோ உள்ளும் புறமும் ஒருங்கே தெரிய இருக்கும் இப்பொருள்? ஒன்றையும் காணாமல் உள்ளும் புறமும் தெரிய பொருளின் ஊடு உலகைப் பார்த்தேன் உலகம் கோமாளி ஒருவனின் மீசையாய் நகர்கிறது பக்கவாட்டில்.
தெரு / ஞானக்கூத்தன் கவிதைகள்
எல்லாத் தெருக்களையும் போலவே எனதும் இரண்டு வரிசை வீடுகளுக் கிடையில் அமைந்தது பிள்ளைப் பருவத்திலிருந்து இன்று வரைக்கும் அதன் மேல் நடக்காத நாளொன்று கிடையாது தெருவில் அதிக மாற்றமும் இல்லை இரண்டு தென்னைகள் அகற்றப்பட்டன பச்சைப் புல்லின் புதர்கள் இப்போது இடம்மாறித் தெருவில் வளர்ந்து வருகின்றன தெருவை நான்காய்ப் பிரித்தால் முதலாம் பகுதியில் அமைந்ததென் வீடு பழசு ஓடு சரிந்தது எடுப்பிலேயே வீடிருந்ததால் தெருவை முழுக்க வயதான பிறகு ஒருமுறைகூட நடந்து பார்க்கவில்லை. ஒன்றிலிருந்து திரும்பிய பிறகே… Continue reading தெரு / ஞானக்கூத்தன் கவிதைகள்
பாலை / ஞானக்கூத்தன் கவிதைகள்
வெளுக்கத் துவைத்து முதல் நாள் வெயிலில் உலர்த்தி எடுத்த வண்ணச் சீருடை அனைத்தும் கொண்டு கந்தலை நீக்கி பூசைப்பசு கோயிலுள் நுழையுமுன் விழித்துக் காலை குடிக்கும் பால்கொணர்ந்து வைத்து விடியற் பறவைகள் ஒருசில கூவ வந்தேன் என்றாள் வராது சென்றாள் யாருடன் சென்றாள் அவரை ஊரார் பலரும் அறியத் தானறியா மடச்சி உருக்கி ஊற்றும் சாலைக் கரும்பிசின் எஞ்சின் உருளைக் கலன்கள் சிதறி நடப்பார்க் கெளிதாய் வெண் மணல் தூவி மதியச்சோறு நெடுங்கிளைப் புளியின் நிழலில் உண்போர்… Continue reading பாலை / ஞானக்கூத்தன் கவிதைகள்
கரப்பானைப் பற்றிக் கொண்டது பல்லி / ஞானக்கூத்தன் கவிதைகள்
கரப்பானைப் பற்றிக் கொண்டது பல்லி கரப்பான் தண்ணீர் பக்கெட்டின் வெளியில் கனாக்காண உள்ளேயிருந்து வெளிப்பட்டபோது. அவசரப் படாமல் தின்றது பல்லி அதன் குறிகள் கரப்பானுக்கு மௌனமாய்ப் போதித்ததெவ் வுண்மை? விலக்கிவிடாமல் இருந்து பார்த்து கரப்பான் மிஞ்சாமல் மறைந்ததும் எழுந்துபோய்த் தண்ணீர் குடித்துத் திரும்பிப் பக்கெட்டைப் பார்த்தேன் கவிஞன் எதிரில் கொலைக்கிடம் கொடுத்ததைக் காட்டிக் கொள்ளாதிருந்ததந்த நீல பக்கெட்டு
நகர மறுக்கிறது பொழுது… / ஞானக்கூத்தன் கவிதைகள்
நகர மறுக்கிறது பொழுது இன்னும் நெடுநேரம் ஆகும் இரவுக்கு நித்தியத்தின் வெயிலில் நன்றாக உலர்ந்து பக்குவம் அடைகிறது அன்றைய இரவு இன்னும் நேரமாகும் இரவு வர காற்றைக் கிழவன் வாயால் வெளிப்படுத்திக் கொண்டு கேட்கப் பிடிக்காத ஒருவனிடம் மறதியை ஊதி அந்தநாள்க் கதையைக் கூறுகிறான் குந்திக் குறிவிறைத்த யாளித் தலையிலிருந்து சாமித் தண்ணீர் கொட்டுகிறது மாலைக் கூட்டத்தில் பேச்சாளி மேற்கோள் கட்டுகளை வீசிக் கிளர்கிறான் காலட்சேபக் கூட்டத்தில் பிரசங்கிக்கும் பக்தர்க்கும் கூவம் உடம்பில் கமழ வத்திப் புகையும்… Continue reading நகர மறுக்கிறது பொழுது… / ஞானக்கூத்தன் கவிதைகள்
கல்லும் கலவையும் / ஞானக்கூத்தன் கவிதைகள்
கல்லும் கலவையும் கொண்டு கரணையால் தடவித் தடவி சாவிப் பொத்தல் மாதிரித் தெரியும் ஆட்கள் சிலரால் கட்டப்பட்டாலும் கட்டிடம் இல்லை பாலம். முன்னாளெல்லாம் பாலம் தியானித்திருக்கும் நீருக்கு மேலே இந்நாளெல்லாம் பாலம்… நிலத்திலும் உண்டு அதன் முதுகெலும்பு. ஆதியில் இந்தப் பாலம் தென்னையாய்ப் பனையாய்க் கிடந்ததென்றாலும் போகப் போகப் போக மூங்கிற் சிம்பும் ஆணியும் விரும்பி ஒருவாறாகிப் பிறந்தது பூமியில் ஒருநாள் அதனுடன் பேசும் பொழுது வேலியும் படியும் கம்பமும் ஏணியும் தானே என்றது பாலம் இன்னும்… Continue reading கல்லும் கலவையும் / ஞானக்கூத்தன் கவிதைகள்
எங்கெங்கும் போவேன் / ஞானக்கூத்தன் கவிதைகள்
எங்கெங்கும் போவேன் என்ன வேண்டுமென்றாலும் பார்ப்பேன் எங்கெங்கும் போவேன் யாரை வேண்டுமென்றாலும் பார்ப்பேன் காலரைப் பிடித்துக் கொண்டு எங்கெங்கு போனாய் என்று கேட்குமா நியாயம் என்னை.