மதுக்கோப்பைக்கும் உதடுகளுக்கும் இடையே விழுந்த கண்ணீர்த் துளியில் அன்பை யாசித்து நிற்கும் என் பிரதிமையை கண்டதாக அவன் சத்தியம் செய்தான். அது என் கண்ணீரை மேலும் பெருக்கியது நான் எதுவும் சொல்லாமலேயே எல்லாம் விளங்குகிறது என்ற அவனை அப்போதைக்கு பிடித்திருந்தது அவன் கொண்டு வந்த கோப்பையால் மதுவும் தனக்கொரு துணையை தேடிக்கொண்டது வாழ்க்கையின் போக்கில் போய்விடுவது நல்லது என்றான் தலை நிமிர்ந்துப் பார்த்தால் தெரியும் காட்சிகளை மட்டுமே நம்புவது சிறந்தது என்றும் சொன்னான் என் தலையை ஆதுரமாக… Continue reading பாவனைகள் / லீனா மணிமேகலை கவிதைகள்
Category: Tamil Poetry
ஒரு மாலைப்பொழுது / லீனா மணிமேகலை கவிதைகள்
அன்பு என்னோடு கஞ்சா அடித்தது பரிவாக மிகப் பரிவாக நெஞ்சு நிறைய புகையை நிரப்ப சொன்னது கரிக்கிறதா எனக் கேட்டது ஆமாம் என்றேன் இல்லை என்று பொய் செல்வதில் உனக்கென்ன பிரச்சினை என்றது எரியும் மணத்தில் யார் மணக்கிறார்கள் அடுத்த கேள்வி அவனா மௌனம் இவனா மௌனம் அவளா மௌனம் நான் என்றேன் அமர்ந்த கனலை ஊதி ஊதி பெருக்கிய கணத்தில் கண் சிமிட்டி விசுவாசத்தை கைவிடு என்றது என் கையை வெட்டிவிட்டது போல இருந்தது. காயும்… Continue reading ஒரு மாலைப்பொழுது / லீனா மணிமேகலை கவிதைகள்
வேடிக்கை / லீனா மணிமேகலை கவிதைகள்
நீ உன் சொற்களை என்னை வல்லுறவு செய்ய ஏவினாய் மலம் மூத்திரம் கழுவப்படாத கழிப்பறை அழுகல் அலறல் செத்த எலி வீச்சம் நிணம் ஊசிய மீன் வலி உதிரம் கறை இருள் பிடுங்கி எறியப்பட்ட உன் விதைப்பைகள் என்னிடமும் சொற்கள் இருந்தன அவர்களிடமும் சொற்கள் இருந்தன அவரவர் விதைப்பைகளின் பாதுகாப்பை சரி பார்த்துக் கொண்டு வாளா விருந்தன
பசி / லீனா மணிமேகலை கவிதைகள்
இறுதியில் காவல் அதிகாரி என் கவிதையைப் பிடித்துக் கொண்டு சென்றார் விசாரணையின் போது அவர் கண்களைக் கட்டிக் கொண்டிருந்தார் ஆடையில்லாத என் கவிதையைக் காண அவருக்கு அச்சமாக இருந்ததாம். குற்றங்கள் விளைவிப்பதே தன் தலையாயப் பணி என்பதை என் கவிதை ஒத்துக் கொண்டதால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை, பிணை இல்லையென்று ஆணையிட்ட நீதிபதி தன் கண்களோடு காதுகளையும் பொத்திக் கொண்டிருந்தார் என் கவிதை பேசிய சொற்களின் புதிய அர்த்தங்கள் அவரை திடுக்கிடச் செய்தனவாம் அபராதம் கட்ட பணம்… Continue reading பசி / லீனா மணிமேகலை கவிதைகள்
புள்ளிவிவரம் / லீனா மணிமேகலை கவிதைகள்
ஒவ்வொரு மூன்று நிமிடமும் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் ஒவ்வொரு பத்து நிமிடமும் ஒரு பெண் மானபங்கம் ஒரு பெண் சிசுக்கொலை ஒரு பெண் துன்புறுத்தப்படுதல் மூன்று எங்கே ஐந்து ஏன் பத்து எப்போது கைகளுக்கு ஏன் பத்து விரல்கள் கடந்தேன் சாலை மிக நீளம் ஒரு சூயிங் கம்மை விட கடைக்கார கிழவன் தன் மனைவியை ஒரு முப்பது நிமிடத்திற்குள் அடித்திருப்பானா பைக்கில் செல்பவன் தன் வீட்டு சிறுமியின் முலையைப் பற்றியிருப்பானா நேற்று சென்ற வாரம் கைபேசியில்… Continue reading புள்ளிவிவரம் / லீனா மணிமேகலை கவிதைகள்
வரலாறு / லீனா மணிமேகலை கவிதைகள்
அவள் ஒரு கண்ணாடி அவளருகே சில கற்கள் அவள் நேசிக்கும் கற்கள் அவள் வெறுக்கும் கற்கள் அவள் முன் பின் அறிந்திராத கற்கள்
அப்பா / கனிமொழி கவிதைகள்
அப்பா சின்ன வயதில் செய்த தவறுகளுக்கெல்லாம் பூச்சாண்டியாய் உன் பெயரைத்தான் சொன்னாள் அம்மா காலையில் கணக்குப் பாடம் குழம்பியபோது பத்திரிகையில் புதைந்த உன் தியானத்தை எப்பிடிக் கலைப்பது? விடுமுறை நாள்களில் சினிமாவுக்குப் போக அம்மாவைத் தூதுவிடுவதே ஆபத்தற்றதாய் இருந்தது வாரம் ஒருமுறை பின் சீட்டில் வைத்து தேக்காவுக்கு அழைத்துச் சென்றது உன் கால் செருப்பு ஓசையில் வீடு அமைதியானது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்று குட்டை ஸ்கர்ட்டை அம்மா எதிர்த்தது இதுதான் நீ என்று பதிந்துபோய்விட்டது பெருமாள் கோயிலில்… Continue reading அப்பா / கனிமொழி கவிதைகள்
கருவறை வாசனை / கனிமொழி கவிதைகள்
அன்புள்ள அம்மா , கடவுளின் மடியில் விளையாடிக் கொண்டிருந்தேன். கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி , என்னை , உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் ! இருட்டாக இருந்தாலும் , இதமாக இருந்தது இந்தப் புதிய இடம்.. முதலில் பயமாக இருந்தாலும் , பிறகு சந்தோஷமாக வளரத் தொடங்கினேன் ! நீ சிரிக்கும் பொழுது , நானும் சிரித்தேன்.. நீ அழும் பொழுது , நானும் கண்ணீரில் … பிறகு தான் புரிந்தது நம்மிடையே ஒரு… Continue reading கருவறை வாசனை / கனிமொழி கவிதைகள்
நீ என் தேவதை / தபு ஷங்கர் கவிதைகள்
உன்னை என் தேவதை என்று நினைத்துதான் வழிபட ஆரம்பித்திருக்கிறேன் . ஒரு வேளை நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும் என் வழிபாடுகள் உன்னை தேவதை ஆக்கிவிடும் !
நீயும் நீயும் / தபு ஷங்கர் கவிதைகள்
நீயும் நீயும் அடிக்கடி சந்தித்து அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள் கண்ணாடி முன்