முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ…! பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம் முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ…! கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வேர்க்கலையோ…! ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோறுக்கும் இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரை காண்கிலையோ…! அய்யோ உலகே ! அய்யகோ பேருலகே ! பொய்யோ உலகசபை ? புனைவுகளோ சபைவிதிகள் ? கையேந்தி வந்தாரை கரமேந்தி காத்த… Continue reading முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய / தணிகைச் செல்வன் கவிதைகள்
Category: Tamil Poetry
கல்லறை காயாது / தணிகைச் செல்வன் கவிதைகள்
சிரித்தபடியேதான் நீ சாவையும் சந்தித்திருப்பாய் என்பதில் சந்தேகமில்லை எமக்கு. சமர்க்கள வீச்சாயினும் சமாதானப் பேச்சாயினும் இரண்டிலும்- சலவை செய்த உன் சிரிப்பைச் சந்திக்க எதிரிகளே அஞ்சினார்கள். உன்-புன்னகையின் வெண்ணிறமே புரட்சியின் விடிவெள்ளியாய்த் தோன்றியது புலித் தோழர்களுக்கு அந்தப் – புன்னகைக்குள்ளே ஒரு புரட்சியே பதுங்கியிருப்பதாகத் தோன்றியது பகைவர்களுக்கு. ஞாலச் சிறப்புக்கு வான்படையை ஊக்கிய உன் ஞானச் சிரிப்புக்கு நடுங்கினான் மகிந்தன். கருவிப் போரில் யுத்த தந்திரத்யுைம் அறிவுப் போரில் ராஜதந்திரத்தையும் கற்றுச் செரித்த களகர்த்தனே, எதிரிகள் உன்னைக்… Continue reading கல்லறை காயாது / தணிகைச் செல்வன் கவிதைகள்
எனக்கான வெளிச்சம் / தி. பரமேசுவரி கவிதைகள்
பனிமூடி இருக்கும் வனம் நிறை சூலியாய்க் காடு பூத்திருக்கும் மலர்கள் அடர்த்தியான மரம் செடி கொடிகள் திரியும் விலங்குகள் வெள்ளி நீர் வீழ்ச்சிகள் பனியில் குளிர்ந்து வெயிலில் கருகி மழையில் நனைந்து அசையா மோனத்தில் சூன்யத்தின் நிழல் தேடித் திரும்புகிறது சக மனுஷியை! பாட்டியின் உடலில் உயிர்ப்பு மெல்லிசாய்.. பேத்தியின் திருமணம் பார்க்க ஆசைப்பட்டதில் பத்தாம் வகுப்பு மாணவி மனைவி ஆனாள். முகமற்ற மனிதன் கைப்பிடித்து ஏழு அடி எடுத்து வைக்கையில் மாலை மாற்றுகையில் பக்கத்தில் அமர்கையில்… Continue reading எனக்கான வெளிச்சம் / தி. பரமேசுவரி கவிதைகள்
ஓசை புதையும் வெளி / தி. பரமேசுவரி கவிதைகள்
உரக்கப் பேசுவதாய்க் கோபப் பட்டாய் மிகுந்த ஓசையுடன் காரியமாற்றுவதாய்க் குற்றஞ்ச் சாட்டினாய் புணர்ச்சியில் கூட முனகல்கள் தெருவெங்கும் இறைவதாய் எரிச்சல் பட்டாய் வெடிக்கும் என் ஆர்ப்பரிப்புகள் உனக்குள் வெந்நீர்க் கொப்புளங்களையே உருவாக்கின எப்போதும் மெல்ல அடங்கிய என் சப்தங்கள் புதைக்கப்பட்டன உன் வெளியில்!
மாலை நேரக்காற்று / சல்மா கவிதைகள்
முன்னிற்க மணநாளில் பவ்யமாய் விடை பெறுகிறாள் மணப்பெண் அவளது பர்தாவுக்குள் முகம் புதைத்தபடி மலர்களின் வாசனையோடிணைந்த புணர்ச்சியைப் போதிக்கிறாள் தமக்கை. தானே அறிந்திராத தடித்த புத்தகத்தின் பக்கங்களை துரிதகதியில் புரட்டுகிறாள் எந்த நாளில் புணர்ந்து கருவைத் தள்ளிவைக்கலாம் எனவும் ஹராமாக்கப்பட்டதெனவும் கூடவே புணர்ச்சிக்குப் பிந்தைய சுத்த பத்தங்களையும் தன் குள்ள உருவத்திற்கேற்ற குற்றக் கண்களில் குறுக்கிடுகிற வாழ்வின் சுகவீனங்களையும் நைந்து போன புணர்ச்சியின் வெற்றுச் சூத்திரங்களையும் தனக்குள்ளாக ஒளித்தபடி அவ்வப்போது வெட்கத்தில் துவண்டு விழுகிற வார்த்தைகளை சிறுமியின்… Continue reading மாலை நேரக்காற்று / சல்மா கவிதைகள்
சுவாசம் / சல்மா கவிதைகள்
எப்பொழுதும் எனது எல்லாக் காரியங்களும் நான் இல்லாத போதே நிகழ்ந்துவிடுகின்றனே ஒவ்வொரு முறையும் எதையும் ஸ்பரிசித்து உணர்வதற்குள் அவை நிகழ்ந்து முடிகின்றன நான் முயன்றுதான் பார்க்கிறேன் என்றாவது எதுவாயினும் நிகழ்வதற்கு முன்பே நான் அதைத் தொடுவதற்கு ஆயினும் என் முயற்சிகளைத் தோற்கடித்து எனக்காக நிகழும் அவை நானில்லாமலேயே நடந்துவிடுகின்றன மலர்கள் மனிதர்களுடனான உலகம் மிகப் பெரியது என்னை விட நான் அனுமதிக்கத்தான் வேண்டுமா என் சுவாசம் நானின்றி நிகழ்வதை
விலகிப் போகும் வாழ்க்கை / சல்மா கவிதைகள்
இன்றும் ஒருவரை என்னை விட்டு வழியனுப்ப நேர்கிறது நேற்றும் அதற்கு முன்பும் கூட நீங்கள் நினைப்பது போல இது வாசல் வரை சென்று வெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல ஒவ்வொரு வழியனுப்புதலும் வயதை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வை வழியனுப்புதல் போல இதயத்தைக் கனக்க வைக்கிறது இப்படியே நம் நண்பர்களை நினைவூகளை சிந்தனைகளை தினமும் ஏதேனும் ஒன்றை வழியனுப்பிக்கொண்டிருப்பதை நீங்கள் யாரும் ஆழமாய் அறிவதில்லை அதனாலேயே உங்களால் சிரித்த முகத்துடன் இருக்கவூம் பத்திரிகை படிக்கவும் முடிகிறது நானோ பயணத்தில்… Continue reading விலகிப் போகும் வாழ்க்கை / சல்மா கவிதைகள்
பட வீட்டின் தனிமை / சல்மா கவிதைகள்
சுவரில் தொங்கும் வரைபட மர நிழலும் ஒற்றைக் குடிசையும் கொஞ்சம் பூக்களும் ஒரு வானமும். கண்கள் பூக்கள் மீதிருக்க மனம் தேடிப் போகிறது வரைபட வீட்டின் தனிமையை.
ஒரு நாள் / லீனா மணிமேகலை கவிதைகள்
ஒரு நாள் என் தோலைக் கழற்றி வீசினேன் கூந்தலை உரித்து எறிந்தேன் துவாரங்களில் ரத்தம் ஒழுகும் மொழுக்கைப் பெண்ணென காதல் கொள்ள அழைத்தேன் காதலர்கள் வந்தார்கள் கரிய விழிகள் கொணட அவர்கள் நெய்தலின் நுட்பம் கூடிய சிலந்திகள் குருதியை நூலாக்கித் திரித்து செந்நிறத்தின் ஊடுபாவிய வலையை எட்டுக் கால்களில் விரித்தார்கள் அந்தியில் வந்த சூரியன் சிவப்பில் விழுந்தான் அப்பொழுதும் சொன்னேன் நான் பூரணமாய் காதலிக்கப்பட்டவள் மறுபடி நானே உலகின் அழகிய முதல் பெண்
Blind Date / லீனா மணிமேகலை கவிதைகள்
Blind Date என்ற வார்த்தையை கூகிள் மொழிபெயர்ப்பில் இட்டுப்பார்த்தேன் குருட்டு தேதி என வந்தது இக்கவிதைக்கு குருட்டு தேதி எனப் பெயரிடுகிறேன் குருட்டு தேதி ஒரு அநாதியான நாளில் முற்றிலும் புதியவனைத் தேர்ந்தெடுத்தேன். நேற்றோ. நாளையோ இல்லாத இன்றானவன். அறிதல் இல்லாத அவன் தொடுதலில் கேள்விகளும் இல்லை பெயர், ஊர், வயது, முகவரி, படிப்பு, வேலை, சாதி,தந்தை பெயர் பரிமாறிக்கொண்ட முத்தங்களில் தகவல்கள் பொதிந்திருக்கவில்லை கொள்தலின் கைவிடுதலின் பதற்றங்கள் இல்லாத கலவி அவனை வெறும் ஆணாக்கி என்னை… Continue reading Blind Date / லீனா மணிமேகலை கவிதைகள்