ஆவதும் என்னாலே / ஞானக்கூத்தன் கவிதைகள்

முதலிலிவர் போட்டியிட்டார் ஜாமீன்போச்சு மறுபடியும் இவர் நின்றார் எவனெல்லாமோ உதவுவதாய் வாக்களித்துக் கைவிரிச்சான் கடைசிநாள் நான்போனேன் சுவரிலென்பேர் கண்டதனால் முன்கூட்டி மக்கள் வெள்ளம் கைதட்டல் நானெழுந்து பேசும் போது ரெண்டுமணி. எதிரிகளைப் பிட்டுவைச்சேன் பத்தாய்ரம் வாக்கதிகம். இவர் ஜெயித்தார்.

உறவு / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஈரக் கைகளைப் புடவையில் துடைத்தவா றெதிர் வீட்டம்மாள் எட்டிப் பார்த்தாள் அம்மா தபால். அஞ்சலட்டையை நொடியில் படித்ததும் எரவாணத்தில் செருகிப் போனாள் எரவாணத்தில் செருகிய கடிதம் வருத்தப்பட்டு மூக்குக் கறுத்ததே.

யோஜனை / ஞானக்கூத்தன் கவிதைகள்

அம்மிக்கல் குழவிக்கல் செதுக்கித் தள்ளும் ஒரு சிற்பக் கூடத்தில் மைல்கல் ஒன்று வான் பார்த்துக் காட்டிற்று நாற்பதென்று.

போராட்டம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

கைவசமிருந்த காதற் கடிதங்கள் எரித்தேன் வாசல்க் கதவுமுன் குவித்துப் போட்டு காகிதம் எரிந்து கூந்தல் சுருளெனக் காற்றில் ஏறி அறைக்குள்ளே மீளப் பார்க்கக் கதவினைத் தாழ்ப்பாளிட்டேன் வெளிப்புறத் தாழ்ப்பாள் முன்னே கரிச்சுருள் கூட்டம் போட்டுக் குதித்தது அறைக்குள் போக காகிதம் கரியானாலும் வெறுமனே விடுமா காதல்.

இக்கரைப் பச்சை / ஞானக்கூத்தன் கவிதைகள்

பொக்கைவாய் அய்யர்ப் பெரிய கண்ணாலத்தில் வக்குமாப் பிள்ளைக்கு மட்டுமோ? நிற்கின்ற வாழைக்கும் தோரணத்துக்கும் சூழ்மனிதருக்கும் சேர்த்து அயலூரே!

நாயகம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மனிதர் போற்றும் சாமிகளில் ஒற்றைக் கொம்பு கணபதியை எனக்கு பிடிக்கும். ஏனெனில் வே றெந்த தெய்வம் வணங்கியபின் ஒப்புக் கொள்ளும் நாம் உடைக்க?

பரிசில் வாழ்க்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்

வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம் வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு காரத்தில் பேசத்துப் பாக்கிச் சூடு கல் பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை நேரத்தில் களிப்பூட்ட அகநானூறு நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப் பார்த்த தீரத்தில் தெரிந்தெடுத்த நகைத்துணுக்கு தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும் புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும் பேச்சாளர் மனதில் கையொலிகள் கேட்கும் பேச்சாளர் வாய் திறக்க வாய் திறந்து பழங்குடிகள் கேட்டார் தம் எளிய மூக்கின் மூச்சுக்கு வயதுமூவா யிரமாம் என்று முதல்… Continue reading பரிசில் வாழ்க்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்

யோசனை / ஞானக்கூத்தன் கவிதைகள்

உனக்கென்ன தோன்றுது கருத்துக்கு மாறாகப் போலீஸார்கள் கட்டிவைத்துக் கையெழுத்து வாங்கலாமா எனக்கென்ன தோன்றுது வருத்தத்துக் காளானான் புலவன் என்றால் யாப்பிலொரு கவிபாடச் சொன்னால் போச்சு

பிரம்மம் ஏகம் / ஆவுடை அக்காள் கவிதைகள்

மூக்கைப் பிடித்து முழுமோசம் போனதும் போரும்போரும் நமக்குள் ஈசன் நடுவாயிருப்பதைப் பாரும்பாரும் உன்தெய்வம் என்தெய்வம் என்றுழன்றதும் போரும்போரும் தன்னுள் தெய்வம் தானாயிருப்பதை எண்ணிப் பாரும்பாரும்”