யாரோ ஒருத்தர் தலையிலே / ஞானக்கூத்தன் கவிதைகள்

நாங்கள் நாலு பேர் எலிகளைத் தின்றோம் ஒரு காலத்தில் நாங்களே எலிகளாய்ப் போகலாமென்று எலிகளாய்ப் போனபின் நெல்களைத் தின்கிறோம் ஒரு காலத்தில் நாங்களே நெல்களாய்ப் போகலாமென்று. நெல்களாய் நாங்கள் ஆனதன் பின்பு நாங்கள் நாலுபேர் மண்ணைத் தின்கிறோம் ஒரு காலத்தில் நாங்களே மண்ணாய்ப் போகலாமென்று

பதில் / ஞானக்கூத்தன் கவிதைகள்

தெருக்களில் திரிந்தேன். வானக் காட்டிலே மாலைப்போதின் குழப்பத்தில் சிக்கிக்கொண்டேன். நான்நின்றால் தானும் நின்று நான் சென்றால் தானும் மேலே தொடர்கிற நிலவைப் பார்த்தேன். வானத்தில் வர்ணக்கோலம் விசிறிடத் திகைத்த மீனைப் போய்க் கொத்தும் பறவை போல ஒரு கேள்வி மனசுக்குள்ளே. என்னடா செய்வாய் தம்பி பெரியவன் ஆனபின்பு என்றொரு கேள்வி கேட்டார் இளமையில் சிலபே ரென்னை, அன்று நான் அதற்குச் சொன்ன பதிலொன்றும் நினைவில் இல்லை இன்று நான் என்ன சொல்வேன்? அதைக் கேட்க அவர்கள் இல்லை.

ஞாதுரு / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஓவியம் வரைந்தேன் ஒன்று அதிலொரு மனிதன் வந்தான் அவன் முகம் மேசை மீது படிந்திட இமைகளின் ரோமம் நீண்டு நெற்றிமேல் விரைக்கக் கண்ணை மூடினேன் வெறுப்புக் கொண்டு அவன் என்னைக் கேட்டான். கண்களை எதற்கிவ்வாறு மூடினாய்? உன்னால் பார்க்க முடிந்ததா? என்றேன் இப்போ நான் உன்னைப் பார்த்துக் கொண்டு அல்லவா இருந்தேன் என்றான் மடிப்புகள் பலவாறாகப் பண்ணினேன் அவனைக் கண்கள் வெளிப்படக் கூர்மையாக்கிச் சென்றுபார் மேலே என்றேன் புலப்படாக் காக்கை தூக்கிச் செல்கின்ற கரண்டியைப் போல் ஏகினான்… Continue reading ஞாதுரு / ஞானக்கூத்தன் கவிதைகள்

நம்பிக்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்

பசித்த வயிற்றுடன் சுற்றிலும் பார்த்தான் பார்வையில் பட்டன பற்பல தாவரம் ஒன்று ஆல். ஒன்று அரசு ஒன்று வேம்பு… அவனுக்கு வேண்டிய ஒன்றோ நாற்றங்காலாய் இன்னமும் இருந்தது.

மருதம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஊருக்கெல்லாம் கோடியிலே முந்திரிக் கொல்லே உக்காந்தால் ஆள்மறையும் முந்திரிக் கொல்லே செங்கமலம் குளிச்சுப்புட்டு அங்கிருந்தாளாம் ஈரச்சேலை கொம்பில் கட்டி காத்திருந்தாளாம் நாட்டாண்மைக்காரன் மகன் அங்கே போனானாம் வெக்கப்பட்டு செங்கமலம் எந்திரிச்சாளாம் நாட்டாண்மைக்காரன் மகன் கிட்டே போனானாம் வெக்கப்பட்டு செங்கமலம் சிரிச்சிக்கிட்டாளாம் உக்காந்தால் ஆள்மறையும் முந்திரிக் கொல்லே ஊருக்கெல்லாம் கோடியிலே முந்திரிக் கொல்லே.

தேரோட்டம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

காடெ கோழி வெச்சுக் கணக்காக் கள்ளும் வெச்சு சூடம் கொளுத்தி வெச்சு சூரன் சாமி கிட்ட வரங்கேட்ட வாரீங்களா ஆரோ வடம் புடிச்சி அய்யன் தேரு நின்னுடுச்சி கற்கண்டு வாழெ வெச்சு விருட்சீப் பூவ வெச்சுப் பொங்கல் மணக்க வெச்சு வடக்கன் சாமி கிட்ட வரங்கேட்ட வாரீங்களா ஆரோ வடம் புடிச்சி அய்யன் தேரு நின்னுடுச்சி இளநீ சீவி வெச்சு இரும்பாக் கரும்ப வெச்சுக் குளிராப் பால வெச்சுக் குமரன் சாமி கிட்ட வரங்கேட்டு வாரீங்களா தெரு… Continue reading தேரோட்டம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

உள் உலகங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

வயல்களைக் குளங்களென்று நினைத்திடும் மீனும் நண்டும் குசலங்கள் கேட்டுக் கொள்ளும் கொய்கிற அரிவாளுக்குக் களைவேறு கதிர்வேறில்லை என்கிற அறிவை இன்னும் வயல்களோ அடையவில்லை மீனுடன் நண்டும் சேறும் நாற்றிசைக் கரையும் பார்த்துக் குளத்திலே இருப்பதாகத் தண்ணீரும் சலனம் கொள்ளும் பறைக்குடிப் பெண்கள் போல வயல்களில் களைத்துத் தோன்றும் பெருவிரல் அனைய பூக்கள் மலர்த்தும் சஸ்பேனியாக்கள் படுத்தவை கனவில் மூழ்கி நிற்பவையாகி எங்கும் எருமைகள். அவற்றின் மீது பறவைகள் சவாரி செய்யும் சரி மனை திரும்பும் எருமைமேலே எவ்விடம்… Continue reading உள் உலகங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

எட்டுக் கவிதைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

1 சாத்துயர் கேட்டுப் போகும் சுற்றத்தார் சாயல் காட்டிக் கழன்றது ரத்த வெள்ளம் குத்துண்ட விலாப்புறத்தில் அவர் பெயர் ஒன்றினோடு என்பெயர் ஒன்றிப் போச்சாம் படுக்கையில் தூங்கும் என்னைக் கந்தர்வர்கொன்று போனார் பெயரையே சொல்லிப் பார்த்து திகைக்கிறேன் எனக்கென் பேரே எப்படித் துரோக மாச்சு. 2 வெளியில் வந்தான் நடுநிசியில் ஒன்றுக் கிருந்தான் மரத்தடியில் நெற்றுத் தேங்காய் அவன் தலையில் வீழ்ச்சியுற்று உயிர் துறந்தான் ரத்தக் களங்கம் இல்லாமல் விழுந்த நோவும் தெரியாமல் தேங்காய் கிடக்கு போய்ப்பாரும்… Continue reading எட்டுக் கவிதைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்