உடலை விட்டு எப்படி வெளியேறுவது? / குட்டி ரேவதி கவிதைகள்

பகல் இரவு என்றில்லாது எலும்பின் மஜ்ஜையும் நிணம் பாய்ந்த வெளிகளும் கூட ஒவ்வொரு கணமும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றன கனவுகளின் பெருவெளிகளாய் சிதறிக்கிடந்த அங்கங்களை வாரிச்சுருட்டி அள்ளி எடுக்கவே நூறாண்டுகள் ஆயிற்று இவ்விடம் இக்கணம் என்னிடம் மிச்சமிருப்பது இவ்வுடல் மட்டுமே நீ கூட உடனில்லை புழுக்கள் நெளியும் சிந்தனை வெளியை விசிறி விசிறி தின்றுக் கொழுத்தப் புழுக்களிடமிருந்து எலும்புகளின் திட மிச்சங்களைப் பொறுக்கி எடுப்பதற்கே வாழ்வின் வறண்ட பாலைகளையும் பாறைகளையும் கடக்க வேண்டியிருந்தது மொழியைத் துலக்கித் தான் கண்கள் என்றும்… Continue reading உடலை விட்டு எப்படி வெளியேறுவது? / குட்டி ரேவதி கவிதைகள்

பிராண வேதனை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்

விடாது ஒலிக்கட்டும் பேச்சிழந்த குரல்கள் புலமெங்கும் காற்றுவீச மரங்கள் உரச ஒலிகள் மோதிக் கலந்து பற்றி எரியட்டும் உனது மொழியின் பிராண வேதனை திடும்மென எழுந்த வெப்பத்தின் அதிர்ச்சியில் பொசுங்காதிருக்கட்டும் உனது இறக்கைகள் மேலெழுந்து உடலை இலேசாக்கி ஒரு விண்கலத்தைப் போல மிதவையாக்கிச் சுழல் சுழன்றுகொண்டே இருக்கட்டும் உனது உடல் நடனத்தில் மூர்ச்சையுற்றுக் கீழே விழாதிருக்க வேகமாய்ப் பயணி இப்பொழுதும் தீ அணையாதிருக்கட்டும் விடாது ஒலிக்கட்டும் பேச்சிழந்த குரல்களின் பிராண வேதனை

இங்கே ஒரு கவிதை – உடலின் கதவு / குட்டி ரேவதி கவிதைகள்

கடலை வரைந்தவள் அவளுக்குள் உயிருள்ள கடலொன்றை வரைந்திருக்கிறாள். எதிர்நோக்காப் பொழுதொன்றில் கொந்தளித்து உறங்கும் நகரத்தின் கரைகளை விழுங்கிவிடுகிறது கூந்தலின் அலைக்குள் மீன்கள் குதூகலமாய்க் கொந்தளிக்கின்றன பவளப்பாறைகளின் மடிப்புகளில் புனைவுகளில் விளையும் காலம் உறங்குகின்றது அவளது இதழ் நீலஒளி கீறிய புன்னகையுடன் இரவினை முத்தமிடுகின்றது உடலெங்கும் படர்ந்திருக்கிறது பெளர்ணமியின் ஈரஒளி அவளின் வனாந்தரத்தில் சங்குப்பூச்சிகள் மேய்கின்றன காலத்தின் சிந்தனையேயிலாது கடல் ஆமைகள் ஊமைப்பெண்களாய் அழகு சிந்த நோக்குகின்றன பார்வைக்குள் அடக்கியிருக்கும் பாடல்களை விடுவிக்க முடியாத ஏக்கம் ததும்ப அவளது… Continue reading இங்கே ஒரு கவிதை – உடலின் கதவு / குட்டி ரேவதி கவிதைகள்

மின்வெளி / குட்டி ரேவதி கவிதைகள்

திரைப்பரப்பை ஒளியூட்டி கடவுச்சொற்களை அனுப்பியதும் மெல்லிய முனகலுடன் அவ்வுலகின் கதவுகள் திறந்து கொள்ளுகின்றன தட்டையான உடலுடைய சிட்டுக்குருவிகள் பறந்து பறந்து கொத்தித்தின்னும் தானியச்சொற்கள் விளம்பரமாகின்றன உடலை எப்பொழுதோ அவ்வெளியில் மிதந்தலைய விட்டிருந்தேன் நீள்வட்டப்பாதைகளில் இயங்கும் பால்வெளிக்கோளைப்போல ஓயாத துடிப்புடன் எந்தவொரு எரிநட்சத்திரத்தையும் தின்றுச் செரித்துவிடும் வேட்கையுடன் மினுமினுப்புடன் பசுமாட்டின் கனத்த முலைகளைப் போல விரல்களால் காமம் கறப்பதற்காய் மட்டும் தொழுவத்தில் தொங்கவில்லை ஆண் பெண் இரு சுனைகளையும் எனதேயாக்கி என் பிரக்ஞை சுடர்விட்டெரிய மிதந்தலைகிறேன் ஒரு பால்வெளிக்கோளென… Continue reading மின்வெளி / குட்டி ரேவதி கவிதைகள்

யானுமிட்ட தீ / குட்டி ரேவதி கவிதைகள்

அவளை அப்படியே விட்டிருக்கலாம் நீங்கள் முட்டும் இரவைக் கானகத்தின் முதுகென்றும் மெல்ல திரளும் உதிரப்பெருக்கைக் கடலென்றும் கனலும் காமத்தைக் காயும் நிலவென்றும் உங்களுக்கான பிரபஞ்ச நீள்வட்ட வலயத்தை மறுக்கிறாள் மெளனிக்கிறாலென்பதைக் கூறிக்கொள்கிறேன் உடலெங்கிலும் ஆயுதம் புதைத்த வனமாகியவள் என்றறியாமல் அம்பெய்தின உங்கள் கைகள் வழியெங்கும் சமிக்ஞைகளால் அவளெழுப்பிய வேட்டை அம்புகளால் கிடங்குகளுக்குள் சேகரப்படுத்திய வெடிமருந்துருண்டைகளால் உம்முடல் வெடித்துச்சிதறலாம் எதிர்பாராத ஒரு காலையில் தொடைகளுக்கு இடையே விரியும் கானகப்பாதை பால்வெளியாக நீளும் என்றுஅவள் வானம் வரைந்தாலும் உருண்ருண்டு ஓடும்… Continue reading யானுமிட்ட தீ / குட்டி ரேவதி கவிதைகள்

பிரசவம் / குட்டி ரேவதி கவிதைகள்

நீர்ப்பாத்தியில் நிழலேதும் வேண்டாது தாவர இச்சையின் மிடுக்குடன் எழும் திரண்ட கவர்ச்சியின் வாழை யான் குலைதள்ளும் நாளில் வெட்டிச் சாய்த்தது உமது அரிவாள் தோலுரித்தது உடல் கிழித்தது என்றாலும் காலைச் சுற்றிலும் கணுக்கால் உயரத்தில் மீண்டும் மீண்டும் முளைத்தெழும் என் கம்பீரத்தோகைகள்

மீன்தொட்டி / குட்டி ரேவதி கவிதைகள்

மென்னுதடுகள் பேசும் மீன்குஞ்சுகள் வளையவரும் தொட்டியாய் இருந்தேன் இரவு பகல் எழுச்சியுறும் கடலில்லை பழம்பெரும் பாசிபடர்ந்த கூழாங்கற்களை உருட்டிக் கொரித்தது குஞ்சின்பசி குத்துயிர்க்கனவுகள் உடலை முட்டும் உயிர்ப்பற்ற குமிழிகள் மேடுதட்டும் ஓர் இரவும் அதனோடவியும் உம் ஆண்மையும் கடலாக்கியது என்னை சுவரை எட்டியுதைத்தன என்குஞ்சுகள்…

விஷ கன்னிகையின் காமநொதி – இறுதி விருந்து – முலைகள் / குட்டி ரேவதி கவிதைகள்

நட்சத்திரங்கள் பொடிந்து உதிரும்படியாக இரவு அதிர்கிறது கனவு பிரமாண்டமாகையில் விஷமாய் இரசாயனம் மாறிக்கொண்டிருக்கிறது வழிய இயலாத கண்ணீரும் இருளில் மக்கும் கனவுகளும் இவரா அவரா எனத்தீண்டிப் பார்க்கின்றன சுருண்டு தவிக்கும் காமத்தின் நீலநரம்புகள் எனது ஒவ்வொரு வார்த்தையையும் கூர்மையாகச் சீவுகிறேன் பற்களினூடே நுரையீரலுக்குள் காற்றின் புயல் இருதயத்துக்குள் ரத்தத்தின் சுழல் மார்புகள் கனிந்து தொங்குகின்றன அதன் இரு கிண்ணங்களிலும் திடமான விஷம் திரண்ட ஒவ்வொரு துளிவிஷமும் மலையைக் குடையக் கூடியது இந்த விருந்தின் சுவையானதொரு பதார்த்தமாய் உன்… Continue reading விஷ கன்னிகையின் காமநொதி – இறுதி விருந்து – முலைகள் / குட்டி ரேவதி கவிதைகள்

உடல் நன்று புலன்கள் மிகவும் இனியன – முலைகள் / குட்டி ரேவதி கவிதைகள்

இந்த ஒரே ஒரு வாழ்க்கைக்குள்… வாழ்க்கையே… இந்த ஒரே ஒரு வாழ்க்கைக்குள் மலை முகட்டிலிருந்து ஒரு சிறு பாறையென என்னை உருட்டித் தள்ளிவிடு துயரங்கள் எழும்பி அடங்கும் கடலுக்குள் உணர்ச்சிகளில் உடலை நீந்தவிடு சிதிலங்களின் மறைவில் வாழப்பணி முலைகள் பூக்கத் தொடங்கும் போது பருவத்தின் படகில் வந்து மிதந்து பறித்துச்செல் மலைகளின் உடலுக்குள்ளிருந்து புறப்படும் மிருகங்களின் வாயினைச் சந்திக்கவை இரத்தம் சூடாகிப் பிளிறும்போது கண்ணாடிகளை அழைத்துவா எதிரில் நெருப்புக்கங்குகளான எனது வார்த்தைகளாலேயே என்னைச் சாம்பலாக்கித் தூவிவிடு பிசாசுகள்… Continue reading உடல் நன்று புலன்கள் மிகவும் இனியன – முலைகள் / குட்டி ரேவதி கவிதைகள்