வீட்டிற்குள் வளரும் மரம் / குட்டி ரேவதி கவிதைகள்

அகத்தின் சுவர்களில் இதயத்தின் தரையில் சுயவரலாற்றுப் புத்தகம் ஒன்று நூலாம்படை பூத்து வேர்களோடி கிடக்கிறது அதை விரித்துப் பார்க்கும் துணிவில் வேர்களைப் பிய்த்தெடுக்கும் வன்முறை இல்லை புத்தகம் தன் இலட்சம் கைகளை விரித்துக் கொண்டு நிமிர்ந்தெழுந்து நிற்கிறது கூரையை முட்டி மோதி கைவிரித்த கிளைகளில் நான் கையூன்றி நகர்ந்த சம்பவங்கள் சில குறிப்புகள் துளிர்த்து இலைகளாகி சில சருகுகளாகி அந்தகாரத்தில் மிதந்தலைகின்றன காற்று ஒரு பொழுதும் அதைத் தூக்கிச்செல்லாது அதன் ஒரு கனியையும் எந்த அம்பும் வீழ்த்தாது… Continue reading வீட்டிற்குள் வளரும் மரம் / குட்டி ரேவதி கவிதைகள்

சோழிகள் ஆக்கிய உடல் / குட்டி ரேவதி கவிதைகள்

உருட்டிவிடப்பட்ட சோழிகளால் ஆன இப்பெருஉடலின் நற்சோழிகள் உமது நீவிர் உருட்டி விளையாட உருண்டோடி விளையாடும் நண்டுகளின் மத்தியில் நவ சோழிகளின் பொலிவு உம் கண்களைத் திருடும் கைப்பற்றி உருட்டி விளையாட இம்சிக்கும் சோழிகளை அலை வந்து கலைக்க வழி மறந்து திணறி நீருக்குள் உருளும் சோழிகளற்ற கடலாகா கரையை என் உடலென்று ஆக்கினால் தன்னைத் தானே இயக்கும் மகிழ்ச்சியறியா கூழாங்கற்களே மிஞ்சும் உமக்கு

அணிலாகி நின்ற மரம் / குட்டி ரேவதி கவிதைகள்

அதிகாலை மரத்தில் தன் குரல் சப்தத்தை கிளையெங்கும் பூத்துக்குலுங்கும் பூக்களாக்கிய அணில் ஒரு மழையால் அடங்கியது வானம் தன் இசையை ஒரு பெருமழையாக்க பூக்களை உதிர்த்த கிளையிலும் இலையிலும் வந்து தங்கியது நீரின் குரல் அணிலாகி நின்ற மரத்தில் எப்பொழுது பூக்கள் மீண்டும் குலுங்குமென எல்லோரும் காத்திருக்க சுள்ளென்று வெயில் வந்து மர உச்சியில் அமர, காலம் ஒரு மரமாய் நின்றது பூக்களற்ற மரம் மதிய வேளையின் சாபம்.

விதை முளையும் யோனி / குட்டி ரேவதி கவிதைகள்

விதையுடன் கூடிய சிறு செடியொன்று யோனியில் முளைத்து வந்த அம்முத்திரையை* வரலாறு தன் அகண்ட பூமியின் வயிற்றிலிருந்து எமக்கு எடுத்துக் காட்டியது எதேச்சையானது அன்று சூரியன் தன் பழுக்கக் கொதித்த நரைத்த கரங்களை வரலாற்றின் மண் கிளறி நம் காட்சிக்கு ஒரு சித்திரம் வரைந்து கொடுக்கிறது அதைத் தொடரச் சொல்கிறது மறைதொனியில் இச்சிக்கிறது நம் தேடலை காலத்தின் பாதையைத் திறந்து கொடுக்கிறது இன்னும் உறையாத இரத்தத்தை அது தன்னில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது இன்னொரு நாளை எப்படித் தொடங்குவது… Continue reading விதை முளையும் யோனி / குட்டி ரேவதி கவிதைகள்

மதுத்தாழி / குட்டி ரேவதி கவிதைகள்

என் உடலொரு மதுத்தாழி நுரைத்த மதுவை விளிம்பின் தருணம் வரை நிறைத்து வைத்திருப்பவள் தேனடையாய்த் தொங்கும் நிலவினும் கனம் நிறைந்த அதன் போதத்தைத் தூக்கிச் சுமக்கும் இனிய பருவம் என் இரவு மரத்தின் தேகத்தில் தனியே தொங்கும் அணிலின் நீண்ட நேர காத்திருப்பில் என் மதுத்தாழி நிறையும் தாழிக்குள் அடைந்து கிடக்கும் ஆழியை குடிக்க முடியாதெனும் திகைப்பில் அணில் நீண்ட நேரம் தனியே தலைகீழே மதுத்தாழி நிறையட்டும் போதையை ஏற்றிக்கொள்ள முடியாத அணில் தலைகீழே தொங்கட்டும் உருவத்தை… Continue reading மதுத்தாழி / குட்டி ரேவதி கவிதைகள்

நிலவின் பேரொளி / குட்டி ரேவதி கவிதைகள்

வானத்தின் பெருவெளியைப் பயணித்துத் தீராத ஒற்றை நிலவே தீரத்தின் குறியீடு நீ நிலாவே நீ நிறைத்து வைத்திருக்கும் மெளனம் இசையின் துல்லியத்துடன் என்னுள் இறங்குகிறது நம்மிடையே எவ்வளவு அகண்ட காலமும் வாழ்வும் உன் பேரழகில் மதி தெளியும் மதி அழியும் மதி உயிர்க்கும் என் ஒரே எதிரொளி நீ நீர் நழுவும் விரிந்த நதியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு சத்தமில்லாமல் நீந்துகிறாய் எத்தனை காலத்தின் ரகசியங்களும் நினைவுகளும் தின்று தீர்த்த பின்னும் பறவையின் சிறகசையும் நகர்வில்… Continue reading நிலவின் பேரொளி / குட்டி ரேவதி கவிதைகள்

இந்தக் காதல் / குட்டி ரேவதி கவிதைகள்

இந்தக் காதல் இவ்வளவு வன்முறையான இவ்வளவு மென்மையான இவ்வளவு மிருதுவான இவ்வளவு நம்பிக்கையிழந்த இந்தக் காதல் பகல் பொழுதைப் போல் அழகாக வானிலை மோசமாக இருக்கும் போது மோசமாக இருக்கும் அந்த வானிலை போன்ற இவ்வளவு நிஜமான இந்தக் காதல் இவ்வளவு அழகான இந்தக் காதல் இவ்வளவு மகிழ்ச்சியான ஆனந்தமான மேலும் இவ்வளவு பரிதாபமானதுமான இந்தக் காதல் இருட்டிலுள்ள குழந்தை போல் பயந்து நடுங்கியும் ஆனாலும் இரவின் மத்தியிலும் நிதானமிழக்காத மனிதனைப் போல் தன்னைப் பற்றிய ஒரு… Continue reading இந்தக் காதல் / குட்டி ரேவதி கவிதைகள்

அவள் ஒரு பெருங்கானகம் / குட்டி ரேவதி கவிதைகள்

மரங்கள் கிளைத்த பெருவெளியை வானமாகக் கொண்ட அவள் ஒரு பெருங்கானகம் தேனீக்கள் மொய்க்கும் இரைச்சலில் அடைந்தொழுகும் மதுக்கலயத்தின் மலைமுகடுகள் அடங்காக் காதலின் பேரருவி அலையென வந்து வீழ மண்பரப்பில் படர்ந்து கிடக்கும் பசியகொடி உடலின் படம் திமிர்ந்தெழும் சீரிய பாம்பின் பொலிவு ஓயாமல் எழுதிக் கலையும் ஒளிக்கோலம் அவள் தவிப்புகள் வேரேன பாய்ச்சல் எடுத்து பூமியின் நீரோட்டம் அறியும் பச்சிலைகள் பட்டாம்பூச்சிச்சிறகுகளுடன் படபடக்கும் ஒரு பேரருவியின் கருணையைச் சேலை இழுத்து வந்து நிலம் சேர்க்கும் கடல் தேடிப்… Continue reading அவள் ஒரு பெருங்கானகம் / குட்டி ரேவதி கவிதைகள்

தட்டாமாலை – பாலியல் அரசியல் கவிதை / குட்டி ரேவதி கவிதைகள்

என் உடலை ஒவ்வொருமுறையும் காலியாக்குகிறேன் மதுவின் சேகரத்தில் சுழலத் தொடங்கும் போதெல்லாம் உடலை உனக்குள் கவிழ்க்கிறேன் உடலுக்குள் மீண்டும் மதுவின் சுரப்பு அமிழ்தத்தின் வேலை நாளங்களில் அதன் பாய்ச்சல் வேட்கையுடன் உன்னைத் தேடி உடலை உனக்குள் கவிழ்க்கிறேன் நீ மதுவைப் பருக மட்டுமே இயன்றவன் தட்டாமாலை சுழலும் உடலில் கைகோர்க்கத் தயங்கியவனிடம் மது வேலை செய்வதில்லை வெறும் கண்ணீரைப் போன்றதே அமிழ்தச் சுவையுடையது பெண்ணின் மதுவும் கைகோர்த்துக் கொள் மதுவின் வெப்பம் உன்னிலும் பரவி நீயும் சுழலுவாய்… Continue reading தட்டாமாலை – பாலியல் அரசியல் கவிதை / குட்டி ரேவதி கவிதைகள்

எத்தகைய பேருடல் இது – பாலியல் அரசியல் கவிதை / குட்டி ரேவதி கவிதைகள்

எத்தகைய பேருடல் எனது என வியக்கிறேன். எத்தனை ஆண் உடல்களை நான் சுகித்திருக்கிறேன் எத்தனை பெண் உடல்களை சீரணித்திருக்கிறேன் மில்லியன் வருடங்களுக்குப் பின்னாலும் இதோ என் யோனி வற்றாத முப்பெருங்கடலாய் அலைபாய்கிறது இன்று என் பேருடல் காற்றில் படபடக்கும் ஒரு வெள்ளைத்தாளைப் போல அலைகள் மீதூற மடிந்து விரிகிறது வெற்றுடலாய் இருக்கிறது தேவதைகளின் வார்த்தைகளால் நிரம்பிய முதுமையான தாழி இறக்கைகளை விரித்து தனக்கே வானம் செய்து கொள்ளும் பேரூந்து பெரும்பருந்து இனி எப்பொழுதுமே சாவமுடியாது யோனி மறைந்து… Continue reading எத்தகைய பேருடல் இது – பாலியல் அரசியல் கவிதை / குட்டி ரேவதி கவிதைகள்