தேவதைகளின் தேவதை / தபு ஷங்கர் கவிதைகள்

தேவதைகளின் தேவதை.
***********************
எதற்காக
நீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்.
பேசாமல்
வாசலிலேயே
சிறுது நேரம் உட்கார்ந்திரு
போதும்.
****************
நீ குளித்து முடித்ததும்
துண்டெடுத்து உன்கூந்தலில்
சுற்றிக் கொள்கிறாயே…
அதற்குப் பெயர்தான்
முடி சூட்டிக்கொள்வதா.
***************
தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப்போல
நீ ஒவ்வொரு முறையும்
சரிசெய்கிறாய்
உன் உடையை.
***************
இலைகள் காய்ந்தால்
உயிர் உள்ள கொடியும்
பட்டுப் போகிறது.
உன் உடைகள் காய்ந்தால்
உயிரற்ற கொடியும்
உயிர் பெறுகிறது.
**************
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்…..
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.